அகவிலைப்படி 125 சதவீதமாக உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி 125 சதவீதமாக அறிவித்துள்ளது. இதனால் 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள்.

 

மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தற்போது அளிக்கப்பட்டு வரும் 119 சதவீத அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி 125 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 சதவீத உயர்வு

6 சதவீத உயர்வு

டிசம்பர் 2015ஆம் மாதம் முடிவில் நுகர்வோர் விலை குறியீடு- தொழிற்துறை ஊழியர்கள் அளவீடு 6.73 சதவீதமாக இருந்தது. இதனையடுத்து மத்திய அரசு பல கட்ட ஆலோசனைக்குப் பின் 119% என்ற அளவில் இருந்து 6 சதவீத உயர்த்தி 125 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என் மத்திய அரசு ஊழியர்கள் அமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி தெரிவித்துள்ளார்.

1 கோடி அரசு ஊழியர்கள்

1 கோடி அரசு ஊழியர்கள்

இந்த உயர்வு 48 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 55 லட்சம் ஒய்வூதியதார்களுக்குப் பயனளிக்கும்.

ஜனவரி 1 முதல்...

ஜனவரி 1 முதல்...

மேலும் இப்புதிய உயர்வு ஜனவரி 1,2016ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சகம்
 

நிதியமைச்சகம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை வருடத்திற்கு 2 முறை சில்லறை பணவீக்கத்தை மையமாகக் கொண்டு நிதியமைச்சகம் மாற்றியமைக்கும். இதற்கு முன் கடந்த வருடம் ஜூலை மாதம் 113 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் உயர்த்தப்பட்டு 119 சதவீதமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government hikes dearness allowance by 6% to 125%

The government has hiked Dearness Allowance for central government employees by 6%.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X