ஹோலி பண்டிகை: சீன பொருட்களின் வருகையால் உள்நாட்டு வியாபாரிகள் சோகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லக்னோ: இந்திய நாட்டின் வண்ணமயமான பண்டிகைகளில் முக்கியமான ஒன்று ஹோலி பண்டிகை. வட மாநிலங்களில் வெகு விமர்சியாகக் கொண்டாடப்படும் இப்பண்டிகை தற்போது இந்தியா முழுமையாகவும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலும் பரவியுள்ளது.

இந்த மகிழ்ச்சி பொங்கும் ஹோலி பண்டிகையில் கலர் பொடிகளையும், கலர் சாயங்களையும் ஒருவொருக்கு ஒருவர் பூசுவது வழக்கம்.

ஹோலி பண்டிகையின் வண்ணமயமான புகைப்படங்கள்-தொகுப்பு

ஆனால் இந்த வருடம் சீனாவில் இருந்து இந்திய சந்தைக்குள் நுழைந்த மலிவான விலை கலர் பொடிகளால் உள்நாட்டு வியாபாரிகள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் என அசோசாம் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

சீனா

சீனா

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பொருட்களைப் புதுமையாகவும், மலிவாகவும் உள்ளதால், அதிகளவில் விற்பனை செய்யப்பட உள்ளதாகத் திகழ்கிறது.

55% மலிவானது

55% மலிவானது

இந்தியாவில் உத்திர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கலர் பொடிகள், கலர் சாயங்களின் விலையை விட 55 சதவீதம் குறைவாக உள்ளது.

வர்த்தகம் பாதிப்பு

வர்த்தகம் பாதிப்பு

இதனால் இந்திய தயாரிப்பு பொருட்களின் வர்த்தகம் சுமார் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துறையில் செயல்படும் 250க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள், விநியோகிஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர் தடம் தெரியாமல் மறைந்துள்ளனர்.

அமிலம்..

அமிலம்..

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கலர் பொடி மற்றும் சாயங்களில் அளவு கடந்த ஆசிட், டீசல் , எண்ணெய், கண்ணாடி தூள்கள் உள்ளது. மேலும் இவை அனைத்தும் மனிதர்களின் சர்மத்திற்கும், நிலத்திற்கம் ஏற்புடையதல்ல.

உள்நாட்டுத் தயாரிப்புகள்
 

உள்நாட்டுத் தயாரிப்புகள்

ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மனிதர்களுக்கு மண்ணுக்கும் முற்றிலும் ஏற்றுப்புடையது. இதனை யாரும் கணக்கில் கொள்ளாமல் விலை மலிவான சீன பொருட்களையே வாங்குகின்றனர் எனச் சில உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Story first published: Wednesday, March 23, 2016, 17:23 [IST]
English summary

HOLI: No takers for local gulal as Chinese products flood market

Local manufacturers of Holi colours and sprinklers are facing huge losses ahead of the festival as Chinese-made alternatives are selling like hot cakes, an Assocham survey has revealed.
Please Wait while comments are loading...
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more