கிங்பிஷர் ஏர்லையன்ஸ்: சொந்த பிராண்டையே வேண்டாம் என உதறியது யுபி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: 2012ஆம் ஆண்டு முடங்கிய கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் உள்ள 9,000 கோடி ரூபாய் கடன் தொகையை வசூல் செய்ய வங்கிகள் அமைப்பு இந்நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பிராண்டுகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கிங்பிஷர் ஏர்லையன்ஸ் பிராண்டை விற்கப்படுவதற்காக வங்கி அமைப்புகள் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதுகுறித்துக் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் பிராண்டின் சொந்த நிறுவனமான யுபி நிறுவனம் அளித்த பதில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

பிராண்டு விற்பனை

பிராண்டு விற்பனை

யுனைடெட் பிரிவரீஸ் நிறுவனம் கிங்பிஷர் பெயரில் பீர் மற்றும் தண்ணீர் பாட்டிகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தனது சொந்த குழும நிறுவனங்களான கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவன பிராண்டை வாங்க வங்கிகள் அமைப்பு அணுகிய போது, இந்நிறுவனம் KFA நிறுவனத்திற்கும் யுபி நிறுவனத்திற்கும் எவ்விதமான சமந்தமும் இல்லை.

இந்தப் பிராண்டை வாங்குவதற்கு அவசியமுமில்லை என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சேகர் ராமமூர்த்தித் தெரிவித்துள்ளார்.

 

ஹெயின்கென்

ஹெயின்கென்

இந்நிலையில் நாட்டில் பீர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் மற்றொரு நிறுவனமான ஹெயின்கென்-ம் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் பிராண்டை வாங்க விருப்பமில்லை எனத் தெளிவாக அறிவித்துள்ளது.

இதனால் இந்நிறுவனத்தின் பிராண்டை விற்பனை செய்ய ஆட்களைத் தேடி அலைந்து வருகிறது வங்கிகள் அமைப்பு.

 

பிராண்டு மதிப்பு

பிராண்டு மதிப்பு

விஜய் மல்லையா தலைமை வகித்த கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனம் உச்சத்தில் இருக்கும் போது இந்த நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 4,100 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது.

சிக்கல்

சிக்கல்

ஏற்கனவே கிங்பிஷர் என்ற பெயரில் யுபி நிறுவனம் பீர் விற்பனை செய்து வருகிறது. இன்றைய நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 11,000 கோடி ரூபாய்.

இந்நிலையில் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் பிராண்ட் ஏவியேஷன் துறை சார்ந்த நிறுவனத்திற்கு மட்டுமே விற்பனை செய்ய முடியும். ஆனால் மக்கள் மத்தியில் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் அவப்பெயரை சம்பாதித்துள்ளதால் இதனை விற்று வங்கிகள் பணத்தைப் பார்க்க முடியாது.

 

இதிலும் கடன்

இதிலும் கடன்

மேலும் விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லையன்ஸ் பிராண்டை பிணையாக வைத்தும் வங்கிகளிடம் கடன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

சில வருடங்களுக்கு முன் வால்ட் டிஸ்னி, கால்வின் கெலின் மற்றும் டாவத் போன்ற மிகப்பெரிய பிராண்டு நிறுவனங்களும் பிராண்டு பெயரைக் கொண்டு நிதியைத் திரட்டி நிறுவனத்தின் நிதிநிலையை மேம்படுத்தியுள்ளது.

ரொம்ப சிம்பிள்..

ரொம்ப சிம்பிள்..

கோடிஸ்வரானாக ஆவது எப்படி?? ரொம்ப சிம்பிள்..கோடிஸ்வரானாக ஆவது எப்படி?? ரொம்ப சிம்பிள்..

சுவிஸ் வங்கி

சுவிஸ் வங்கி

சுவிஸ் வங்கிகளில் அப்படி என்ன தான் இருக்கு..?சுவிஸ் வங்கிகளில் அப்படி என்ன தான் இருக்கு..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

United Breweries, a likely candidate to buy the Kingfisher airline brand, says it is not interested in owning the carrier's label.
Story first published: Wednesday, March 23, 2016, 12:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X