ஏலத்திற்கு வந்த மல்லையாவின் சொகுசு விமான.. ஆரம்ப விலை 88 மில்லியன் டாலர்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 9,000 கோடி ரூபாய் வங்கிக்கடனைத் திருப்பித் தராமல் நாட்டை விட்டு ஓடிய நிலையில் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு அளித்த கடனை திரும்பி பெரும் நோக்கில் வங்கி அமைப்புகள் ஒரு புறம் போராடி வருகிறது.

 

இந்நிலையில் சேவைவரி அளிக்காமல் ஏமாற்றி வந்த மல்லையாவின் விஜய் மல்லையாவிற்குச் சொந்தமான சொகுசு ஜெட் விமானத்தை ஏலம் விடச் சேவை வரித்துறை முடிவு செய்துள்ளது.

மே 12ஆம் தேதி ஏலம்..!

மே 12ஆம் தேதி ஏலம்..!

விஜய் மல்லையாவிற்குச் சொந்தமான சொகுசு ஜெட் விமானத்தை வருகிற ஏலம் மே 12-ம் தேதி நடைபெறும் எனவும் சேவை வரித்துறை அறிவித்துள்ளது.

ஆடம்பர விமானம்

ஆடம்பர விமானம்

ஜெட் ஏர்பஸ் 319 ரக விமானம் பல ஆடம்பர அம்சங்களைக் கொண்டது. இந்த விமானம் தற்போது மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 25 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பயணிக்க முடியும்.

வீடு மற்றும் அலுவலகம்

வீடு மற்றும் அலுவலகம்

விஜய் மல்லையா மிகவும் சொகுசாக இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளார். இந்த விமானத்தை வீடு மற்றும் அலுவலகமாக விஜய் மல்லையா பயன்படுத்தியுள்ளார்.

88 மில்லியன் டாலர்
 

88 மில்லியன் டாலர்

இதில் 6,000 அடி பரப்பு இடம் உள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர ஜெட் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் விலை 88 மில்லியன் டாலராகும். இதில் கருத்தரங்க அறை, படுக்கை அறை, குளியல் அறை என அனைத்து அம்சங்களும் உள்ளன.

சேவை வரி

சேவை வரி

ஏப்ரல் 2011 - மார்ச் 2012 மற்றும் ஏப்ரல் 2012 - செப்டம்பர் 2012 (அதன் பின் இந்நிறுவனம் முழுமையாக முடங்கப்பட்டது) வரையான காலத்தில் சேவை வரி செலுத்தப்படவில்லை. இதற்காக இந்த விமானத்தைச் சேவை வரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதற்காக இந்த விமானத்தை ஏலத்தில் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏலம்

ஏலம்

இந்த விமானத்தை ஏலத்தில் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 2 முதல் மே 10ம் தேதி வரை இதைப் பார்வையிடலாம். சர்வதேச அளவில் இதற்கான டெண்டரை சேவை வரித்துறை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vijay Mallya's corporate jet to be auctioned in May

Service tax department advertisement calls for online global bids to buy the modified Airbus A319, which has a list price of around $88 million
Story first published: Saturday, March 26, 2016, 13:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X