இந்தியாவின் 'கலிபோர்னியா'.. பன்னாட்டு நிறுவனங்களின் அஸ்திவாரமாக விளங்கும் 'தெலங்கான'..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: உங்கள் ஐபோனில், கூகிள் தேடல் மூலம் புதிய ஐகியா பர்னீசர் பொருட்களை வாங்க அமேசான் தளத்திற்குச் செல்லும் போது, அவசர வேலையாக உங்கள் தந்தை வெளியில் செல்ல உபர் டாக்ஸியை புக் செய்யச் சொல்கிறார்.

என்ன ஒண்ணுமே புரியலையா..? இப்போது நீங்கள் படித்த அனைத்து நிறுவனங்களின் பெயர்களும் சர்வதேச நாடுகளில் செயல்படும் மிகச் சிறப்பான நிறுவனங்கள். இவை அனைத்தும் தற்போது இந்தியாவில் ஒரே இடத்தில் உள்ளது.

ஆம் இந்தியாவில் புதிதாக உருவாகியுள்ள மாநிலமான தெலங்கானாவில் உலகின் சிறந்த நிறுவனங்கள் அனைத்தும் தற்போது தங்களது அலுவலகங்களை அமைத்து வருகிறது. இதனால் இந்தியாவின் கலிபோர்னியாவாகத் தெலங்கான மாநிலம் உருவாகி வருகிறது.

உபர்

உபர்

உலகின் மிகச் சிறந்த டாக்ஸி புக்கிங் சேவை வழங்கும் உபர் இந்தியாவில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் துவங்கப்பட்டாலும், தற்போது சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் இந்திய சந்தையில் இருக்கும் வாய்ப்புகளையும், இந்திய சந்தையின் மூலம் ஒட்டுமொத்த ஆசிய சந்தையும் அடைய உபர் நிறுவனம் தனது தாய்நாடான அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தை இந்தியாவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

அதுவும் தெலங்கான மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் அமைக்கப்பட உள்ளதாக உபர் இந்தியா தெரிவித்துள்ளது.

 

10 கிலோமீட்டர்

10 கிலோமீட்டர்

உபர் நிறுவனம் அமைய உள்ள இடத்திற்கு 10 கிலோமீட்டர் சுற்றளவில் ஆப்பிள், அமேசான், கூகிள் என உலகின் டாப் நிறுவனங்கள் அனைத்தும் அமைய உள்ளது.

ஹைதராபாத்

ஹைதராபாத்

புதியதாக அமைய உள்ள நிறுவனங்களுக்கு மத்தியில் மைக்ரோசாப்ட், பேஸ்புக், க்வால்கம் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களும் அமைந்துள்ளதால் இம்மாநிலம் தற்போது குட்டி கலிபோர்னியா எனப் பெயர் பெற்றுள்ளது.

கலிபோர்னியா

கலிபோர்னியா

வல்லரசு நாடாகத் திகழும் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் முழுவதும் வர்த்தக நிறுவனங்களால் அதிலும் முக்கியமாக உலக நாடுகளின் டாப் 200 நிறுவனங்கள் இங்கே ஒட்டுமொத்தமாக இருக்கும்.

இதேபோல் இந்தியாவில் தற்போது தெலங்கான மாநிலத்தின் ஹைதராபாத் நகரம் உருவெடுத்துள்ளது.

 

ஐகியா

ஐகியா

இந்நிலையில் சுவீடன் நாட்டின் பர்னீசர் நிறுவனமான ஐகியா இந்தியாவின் தனது முதல் கடையை மற்றும் நிறுவனத்தை ஹைதராபாத்தில் அமைக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக ஐடி நிறுவனங்கள் சூழ்ந்துள்ள ஹைதராபாத் நகரத்தில் 13 ஏக்கர் நிலப்பரப்பை 20 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியுள்ளது ஐகியா.

 

அமேசான்

அமேசான்

உலகின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் கிளவுட் சேவை நிறுவனமான அமேசான், கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையின் மீது ஏற்பட்ட நம்பிக்கையினால் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சரக்குக் கிடங்கை ஹைதராபாத்தில் அமைக்க முடிவு செய்துள்ளது.

சரக்கு கிடங்கு

சரக்கு கிடங்கு

ஹைதராபாத்தில் இந்தப் புதிய சரக்கு கிடங்கு கச்சிபவ்லி என்ற இடத்தில் சுமார் 29 லட்சம் சதுரடியிலும், ஹைதராபாத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் ஐடி ஹப்மும் அமைக்க உள்ளது.

இப்பணிகளைத் துவங்க அடுத்தச் சில வாரத்தில் அமேசான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஹைதராபாத் வர உள்ளனர்.

 

ஐடி ஹப்

ஐடி ஹப்

ஹைதராபாத் பகுதியில் அமைய உள்ள இப்புதிய ஐடி ஹப் இந்திய வர்த்தகத்திற்கு மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தை வர்த்தக மேம்பாட்டிற்காக அமைக்கப்பட உள்ளது என் அமேசான் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அமேசான் வெப் சர்வீசஸ் சேவையின் வர்த்தகத்தை இந்திய சந்தையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது அமேசான்.

 

கூகிள்

கூகிள்

உலகின் மிகப்பெரிய இண்டர்நெட் நிறுவனமான கூகிள், ஏற்கனவே இந்தியாவில் நான்கு இடங்களில் அலுவலகங்களை அமைத்திருந்தாலும், ஹைதராபாத்தில் பிரத்தியேகமாக 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய கூகிள் கேம்பஸ்-யை உருவாக்க உள்ளது.

இப்புதிய அலுவலகம் 3 மூன்று முக்கியப் பிராஜெக்டை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு துவக்கப்பட்டுள்ளது.

 

காக்னிசென்ட்

காக்னிசென்ட்

கச்சிபவ்லி என்னும் இடத்தில் காக்னிசன்ட் நிறுவனம் சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி ரூபாய் முதலீட்டுடன் மிகப்பெரிய டெவலப்மென்ட் சென்டர் அமைக்கத் தெலங்கான அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

8,000 ஊழியர்கள்

8,000 ஊழியர்கள்

புதிதாக அமைக்கப்பட இந்தச் சென்டரில் காக்னிசன்ட் நிறுவனத்தின் சுமார் 8,000 ஊழியர்கள் ஓரே நேரத்தில் பணியாற்றும் அளவிற்கு அமைக்கப்பட உள்ளது.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

ஹைதராபாத் நகரில் ஒரு புறம் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், இந்திய நிறுவனம் அதற்கு இணையாக உள்ளது. இப்பகுதியில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், எச்சிஎல், எனப் பல நிறுவனங்கள் குவித்துள்ளது.

Sify நிறுவனம்

Sify நிறுவனம்

சமீபத்தில் SIFY நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீட்டில் 2,000 வேலைவாய்ப்பு உருவாக்கும் வண்ணம் புதிய அலுவலகத்தை அமைக்க ஒப்புதல் பெற்றுள்ளது.

மிகப்பெரிய ஊழல்..!

மிகப்பெரிய ஊழல்..!

ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய மிகப்பெரிய ஊழல்..!ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய மிகப்பெரிய ஊழல்..!

கோடீஸ்வர வாரிசு

கோடீஸ்வர வாரிசு

'டாடி' வழியில் ஜோராக கிளம்பும் கோடீஸ்வர வாரிசு...!'டாடி' வழியில் ஜோராக கிளம்பும் கோடீஸ்வர வாரிசு...!

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is Telangana the new California in the making? Apple, Amazon, Google, and Uber have queued up to have their second largest development centres, outside the United States of America, in Hyderabad.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X