ஏவுகணை தயாரிக்க இஸ்ரேல் நிறுவனத்துடன் கூட்டணி: அனில் அம்பானி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் ஏவுகணை, வான்வழி பாதுகாப்பு இயந்திரங்கள் மற்றும் போர் விமானங்களைத் தயாரிக்க அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம், இஸ்ரேல் நாட்டு நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

 

இத்திட்டத்தில் அடுத்த 10 வருடத்தில் சுமார் 65,000 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தைச் செய்ய இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் பேஸ்புக் பக்கம்

அனில் அம்பானி

அனில் அம்பானி

இந்திய பாதுகாப்பு துறைக்கான உபகரணங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில் மேக் இன் இந்தியா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பல சலுகைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை அனில் அம்பானி தனது சாதகமாகப் பயன்படுத்தித் தனது ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் ஏவுகணை முதல் போர் விமானங்கள் வரை அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளார்.

ரிலையன்ஸ் டிபென்ஸ்

ரிலையன்ஸ் டிபென்ஸ்

இந்நிலையில் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் இஸ்ரேல் நாட்டின் முன்னணி ராணுவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ரபேல் அட்வான்ஸ் டிபென்ஸ் சிஸ்டெம்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் புதிய கூட்டணி நிறுவனத்தைத் துவங்க உள்ளது.

உற்பத்தி
 

உற்பத்தி

இக்கூட்டணி நிறுவனம் இந்தியாவில் ஏர்-டூ-ஏர் ஏவுகணைகள், ஏர் டிபென்ஸ் சிஸ்டம்ஸ், போர் விமானம், மற்றும் மிகப்பெரிய வடிவிலான ஏரோஸ்டாட்ஸ் ஆகியவற்றை இந்திய மண்ணில் தயாரித்து இந்திய ராணுவத்திற்கும், சர்வதேச நாடுகளும் விற்பனை செய்ய உள்ளது.

மேலும் அடுத்த 10 வருடத்தில் சுமார் 10 பில்லியன் டாலர் அதாவது 65,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தைச் செய்ய இரு நிறுவனங்களும் உறுதியளித்துள்ளது.

முதலீடு

முதலீடு

இந்நிலையில் இக்கூட்டணி நிறுவனம் துவக்கத்தில் 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டைக் கொண்டு நிறுவனத்தையும் உற்பத்தியையும் துவங்க உள்ளது.

இதில் 51 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திடமும், 49 சதவீதம் ரபேல் நிறுவனத்திடமும் இருக்கும்.

ரிலையன்ஸ் இன்ஃபரா

ரிலையன்ஸ் இன்ஃபரா

ரிலையன்ஸ் இன்ஃபரா நிறுவனத்தின் கிளை நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் வான்வழி ஏவுகணைகள் மட்டும் அல்லாமல் போர்க்கப்பல், ராணுவத்திற்கான ஆயுதங்கள் எனப் பல துறைகளில் இறங்கியுள்ளது.

பில்லியனர்கள் பட்டியல்

பில்லியனர்கள் பட்டியல்

அடுத்த 10 வருடத்தில் இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும் அளவிற்கு ரிலையன்ஸ் குழுமம் உயர உள்ளது. இதனால் அனில் அம்பானி பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடிக்க வாய்ப்புகள் உண்டு.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

இப்புதிய கூட்டணி நிறுவனம் மத்திய பிரதேசத்தில் உள்ள திருபாய் அம்பானி லேண்டு சிஸ்டம்ஸ் பார்க் பகுதியில் அமைய உள்ளது. மேலும் இக்கூட்டணி நிறுவனத்தில் 3,000 திறன் படைத்தை ஆதிக்கம் செலுத்தக்கூடிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது.

ரபேல் நிறுவனம்

ரபேல் நிறுவனம்

இந்நிறுவனத்திடம் ஏர்-டூ-ஏர் ஏவுகணை பிரிவில் பைதான் மற்றும் டெர்பி என்ற இரு சக்திவாய்ந்த ஏவுகணைகள் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் ஸ்பைடர் மற்றும் பராக் என்னும் குறைந்த மற்றும் மிதமான தூர இலக்கைத் தாக்கும் ஏவுகணையும் உள்ளது.

இந்த டெக்னாலஜி அனைத்தும் இந்தியாவில் இப்புதிய கூட்டணி மூலம் கிடைக்க உள்ளது.

இந்திய ராணுவம்

இந்திய ராணுவம்

மேலும் ரபேல் நிறுவனத்திடம் ஏற்கனவே இந்திய ராணுவம் பல வகையான ஏரோஸ்டாட்ஸ் கண்காணிப்பு இயந்திரங்களை வாங்கியுள்ளது

இந்தியாவிற்கு லாபம்

இந்தியாவிற்கு லாபம்

இந்திய அரசு பொதுவாகத் தனது பட்ஜெட் அறிக்கையில் அதிகளவிலான தொகையை இந்திய பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு செய்யும். இதில் தொகையில் மிகப்பெரிய பங்கு ஆயுதங்களை வாங்குவதற்காகவே செலவிடப்படும்.

சந்தையில் புதிய ஆயுதங்களை வாங்க அதிகத் தொகை கேட்கப்படுவது வழக்கம், அதிலும் இவர்களிடம் ஆயுதம் இல்லை எனத் தெரிந்துவிட்டால் பன்னாட்டு நிறுவனங்கள் அளிக்கும் தொகைக்குக் கணக்கு இல்லை.

பழைய ஆயுதங்கள்

பழைய ஆயுதங்கள்

இதனால் இந்திய அரசு பணத்தை முறையாகச் செலவு செய்யும் விதமாக, பழைய ஆயுதங்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படும்.

எனவே ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டால் புதிய ஆயுதங்களுக்குக் கிடைக்கும் , விலையும் குறைவாக இருக்கும். இதனால் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி பெரும் அளவு ராணுவ வீரர்களுக்குச் செலவு செய்யும் வாய்ப்பு உள்ளது.

முதல் நிறுவனம்

முதல் நிறுவனம்

இந்தியாவில் முப்படைக்கும் தேவையான அனைத்து உபகரணங்களையும் தயாரிக்க உரிமம் பெற்ற ஒரே நிறுவனம் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் தான்.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

ஒரு நாட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டால், இறக்குமதி மற்றும் கூடுதல் கட்டணங்களில் இருந்து விடுபடலாம். மேலும் உபரி தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

இதனை மையமாக வைத்துக்கொண்டே மேக் இன் இந்தியா திட்டம் செயல்படுகிறது.

ஸ்கில் இந்திய

ஸ்கில் இந்திய

மேக் இன் இந்தியா திட்டம் சாத்தியப்பட இந்தியாவின் திறன் படைத்த ஊழியர்களும் தேவை. இதனை அடையவே மத்திய அரசு மிகப்பெரிய முதலீட்டில் SKILL INDIA திட்டத்தை உருவாக்கியுள்ளது.

(அனில், முகேஷ் அம்பானியை ஒன்று சேர்த்த பத்ம விபூஷண் விருது..!)

ஊழல் நிறைந்த இந்தியா..!

ஊழல் நிறைந்த இந்தியா..!

ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய மிகப்பெரிய ஊழல்..!

அள்ளிக்கொடுத்த வள்ளல்..!

அள்ளிக்கொடுத்த வள்ளல்..!

கிள்ளிக் கொடுக்கும் இடத்தில் அள்ளிக்கொடுத்த 15 அமெரிக்க நிறுவனங்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anil Ambani-led Reliance Defence Ltd, and Rafael Advanced Defence Systems Ltd of Israel have decided to set up a joint venture company in India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X