விற்பனையை இரட்டிப்பாக்க புதிய திட்டத்துடன் களமிறங்கும் மாருதி சுசூகி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி தனது விற்பனையை அதிகரிக்கவும், இரட்டிப்பாக்கவும் விற்பனை முனையங்களை 4,000 கிளைகள் என்ற எண்ணிக்கையில் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இந்த 4,000 விற்பனை முனையங்கள் எண்ணிக்கையை வருகிற 2020ஆம் ஆண்டுக்கள் எட்ட வேண்டும் எனவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2020..

2020..

இந்த 4,000 விற்பனை முனையங்கள் மூலம் இந்திய சந்தையில் 2020ஆம் வருடத்திற்கு முன் 20 லட்ச வாகனங்களை விற்பனை இலக்கை எட்டுவோம் என மாருதி சுசூகி நிறுவனத்தின் மார்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவின் தலைவர் ஆர்.எஸ்.கால்ஸி தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்தில் 200 கிளைகள்

ஒரு வருடத்தில் 200 கிளைகள்

2014-15 நிதியாண்டு முடிவில் 1,470 நகரங்களில் இந்தியாவில் சுமார் 1,820 டீலர்ஷிப் விற்பனை முனையங்கள் உள்ளது, நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 200 விற்பனை முனையங்களைத் திறக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக மாருதி சுசூகி.

நெக்ஸா

நெக்ஸா

மேலும் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆடம்பர கார் ஷோரூம்களான நெக்ஸா ஷோரூம் எண்ணிக்கையை 127இல் இருந்து 250ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது மாருதி சுசூகி.

விற்பனை இலக்கு

விற்பனை இலக்கு

இவை அனைத்தும் வருகிற 2020ஆம் ஆண்டுக்குள் வருடம் 20 லட்சம் கார்களை விற்பனை செய்யும் விதமாகவே தற்போது நிறுவனம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புதிய உச்சம்..

புதிய உச்சம்..

2015-16ஆம் நிதியாண்டில் மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்ட எஸ் கிராஸ், பெலானோ மற்றும் விட்டாரா பிரீசா ஆகியவற்றின் அறிமுகத்தின் மூலம் வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

இதனால் 2015-16ஆம் நிதியாண்டில் 14,29,248 வாகனங்களை விற்பனை செய்து விற்பனையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது மருதி சுசூகி.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maruti Suzuki India (MSI) aims to double its sales network to 4,000 outlets by 2020 as part of plans to sell 20 lakh units per annum.
Story first published: Monday, April 4, 2016, 13:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X