360 பில்லியன் டாலரைத் தொட்ட அன்னிய செலவானி இருப்பு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த ரிசர்வ் வங்கி அதிகளவிலான டாலரை வாங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதால், இந்திய சந்தையின் அன்னிய செலவானி இருப்பு அளவு வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 360 பில்லியன் டாலரைத் தொட்டது.

ஏப்ரல் 1ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலவானி இருப்பு அளவு ரிசர்வ் வங்கியின் தொடர் டாலர் கொள்முதல் திட்டத்தின் மூலம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 360 பில்லியன் டாலரை எட்டியது. இந்த உயரத்தைத் தொட உறுதுணையாக அன்னிய முதலீட்டாளர்கள் இக்காலகட்டத்தில் பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் சுமார் 3.7 பில்லியன் டாலர் முதலீடு செய்தனர்.

360 பில்லியன் டாலரைத் தொட்ட அன்னிய செலவானி இருப்பு..!

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் படி ஏப்ரல் 1ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் மட்டும் 4 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டை இந்திய சந்தை பெற்றது.

360 பில்லியன் டாலரைத் தொட்ட அன்னிய செலவானி இருப்பு..!

2013ஆம் நிதியாண்டில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், ரிசர்வ் வங்கி இதற்கு முக்கியக் காரணமாகத் தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்த பல வகையான கட்டுப்பாடுகளை விதித்தது.

இதன் பின் தொடர்ந்து நாட்டில் தங்க இறக்குமதி குறைந்தது. இதன் பின் நாட்டில் அன்னிய முதலீட்டாளர்கள் வங்கிகளில் சுமார் 30 பில்லியன் டாலர் அளவிலான வைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's forex reserves surge to record high of $360 billion

India's foreign exchange reserves swelled to a record high of $360 billion for the week ended April 1, largely on account of the RBI's dollar purchases to rein in the rupee's strength as foreign funds poured into Indian financial markets, analysts said.
Story first published: Saturday, April 9, 2016, 17:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X