பனாமா பேப்ர்ஸ்: ஐஸ்வர்யா ராய், அமிதாப் உட்பட 50 பேரிடம் விசாரணையைத் துவங்கியது வருமான வரித்துறை..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலக நாடுகளை அதிரவைத்த பனாமா பேப்ர்ஸ் வரி ஏய்ப்பு மோசடிகளில் ஈட்டுப்பட்டுள்ள 50 இந்திய பிரபலங்கள், தலைவர்களிடம் வருமான வரித் துறை விசாரணையைத் துவங்கியுள்ளது.

 

இந்த விசாரணையின் முதற்கட்டமாகப் பனாமா பேப்ர்ஸ் ஆவணங்களில் இடம்பெற்றுள்ள 50 இந்தியர்களுக்குச் சில முக்கியக் கேள்விகள் மற்றும் விளக்கங்களைக் கொண்ட அறிக்கையை வருமான வரித் துறை அனுப்பியுள்ளது.

நிதியமைச்சர்

நிதியமைச்சர்

சில நாட்களுக்கு முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம், பனாமா பேப்ர்ஸ் ஆவணங்களில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் அனைவரிடமும் மத்திய அரசின் சார்பில் வருமான வரித்துறை விசாரணையைத் துவங்கும்.

மேலும் குற்றங்கள் உறுதி செய்ப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அருண் ஜேட்லி கூறினார்.

 

 நகரங்கள் வாரியாக

நகரங்கள் வாரியாக

இந்நிலையில் வருமான வரித்துறை, கடந்த வாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வெளியான பனாமா பேப்பர்ஸ் வரி ஏய்ப்பில் ஈடுபட்டோர்களின் பெயரைப் பகிரங்கமாக வெளியிட்டது.

இதன் படி வருமான வரித்துறையினர் நகரங்கள் வாரியாகப் பிரித்து விசாரணையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

 

உறுதிக் கேள்விகள்..
 

உறுதிக் கேள்விகள்..

முதலாவதாக, அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது உண்மையிலேயே அவர்கள்தானா? என்பது உறுதிசெய்யப்படும். அதைத் தொடர்ந்து, Mossack Fonseca என்னும் நீதி ஆலோசனை நிறுவனத்தின் மூலம் தாங்கள் செய்த பரிவர்த்தனைகள், வர்த்தகத் தொடர்புகள் மற்றும் இந்திய வருமான வரித் துறைக்குத் தெரிவிக்கப்பட்டதா? போன்ற மிகமுக்கியமான கேள்விகள் வருமான வரித்துறை அனுப்பிய அறிக்கையில் உள்ளது.

மொசாக் ஃபொன்சேகா

மொசாக் ஃபொன்சேகா

பனாமா நாட்டைச் சேர்ந்த "மொசாக் ஃபொன்சேகா' என்ற சட்ட நிறுவனம், முதலீடு, சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் வாயிலாக உலக நாடுகளைச் சேர்ந்த பெரு நிறுவனங்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும், தலைநவர்களும் வரி ஏய்ப்புச் செய்து பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனையைச் செய்துள்ளனர்.

இந்நிலையில் பல்வேறு நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைகள், வர்த்தகத் தொடர்புகள், ரகசிய வங்கிக் கணக்குகள் எனப் பல ஆவணங்கள் அந்தச் சட்ட நிறுவனத்திடம் உள்ளன.

 

டிஜிட்டல் ஆவணங்கள்

டிஜிட்டல் ஆவணங்கள்

இந்த ஆவணங்களை 100க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் ரகசியமாகச் செயல்பட்டு ஆவணங்களைச் சேகரித்துள்ளனர். இப்படிச் சேரிக்கப்பட்ட ஆவணங்களை டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுப் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த அளவு 12 TB ஆகும்.

சில பகுதிகள் மட்டும்

சில பகுதிகள் மட்டும்

இந்நிலையில் சேகரித்த ஆவணங்களின் சில பகுதிகளை மட்டும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் வெளியிட்டனர். அவை "இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் கடந்த சில நாள்களுக்கு முன் வெளியானது.

இந்த ஆவணங்களை வெளியிட்டால் WIKILEAKS பிரச்சனையை விட மிகப்பெரிதாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

500 இந்தியர்கள்

500 இந்தியர்கள்

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்கள், திரையுலகப் பிரமுகர்கள் உள்பட 500 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்தப் பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்துவதற்குக் கூட்டுக் குழுவை மத்திய அரசு கடந்த வாரம் அமைத்தது. அந்தக் குழுவில், வருமான வரித் துறையின் வெளிநாட்டு வரி விதிப்புப் பிரிவு, ரிசர்வ் வங்கியின் நிதி உளவு அமைப்பு, அமலாக்கத் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income Tax department sends 'detailed' queries to 50 individuals on 'Panama Papers' list

Acting on the Panama Papers leak, the Income Tax department has sent a detailed questionnaire to about 50 individuals and entities figuring in the list of those allegedly holding offshore assets in tax havens.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X