அழகுக்கு அழகு சேர்த்த கைகள்..!

By Srinivasan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இன்று ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, அழகுசாதனப் பொருட்கள் அல்லது காஸ்மெடிக் பொருட்கள் இல்லாத வாழ்க்கையே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இவை முக்கியத்துவம் பெற்றுவிட்டன. வியர்வையும் எண்ணையும் வடியும் முகங்கள் மாறி எல்லாம் பேஷன் மயமாகிவிட்டது.

 

இன்றைய நிலையில் இத்துறை மிகப்பெரும் வர்த்தகச் சந்தையாகவும் உருவெடுத்துள்ளது. வர்த்தகப் போட்டி மற்றும் எண்ணிலடங்கா உள்நாட்டு மற்றும் வெளிநாடு பிராண்டுகளால் இச்சந்தை நிறைந்து காணப்படுகிறது.

இவற்றை மதிப்பிடுவது சற்றே சிரமமான காரியம் தான், காரணம் இதில் காணப்படும் பல்வேறு விதமான பெயர்களும், வகைகளும் தான். இன்றைய காஸ்மெடிக் உலகில் தலைசிறந்த டாப் 10 நிறுவனங்களைப் பார்க்கலாம் வாங்க.

கடுமையான போட்டி

கடுமையான போட்டி

இன்றைய காஸ்மெடிக் சந்தையில் நிறுவனங்கள் அடிப்படைப் பொருட்களிலிருந்து மஸ்காரா வரை, ஸ்டைலான ஹாண்ட்பாக் முதல் பிராண்டட் செருப்புகள் வரை ஒவ்வொரு பிராண்டும் மற்றவற்றுடன் கடுமையாகப் போட்டியிட்டு உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களின் மனதை வெல்ல முயலுகின்றன.

டாப் 10

டாப் 10

அதனால் நாங்கள் உங்களுக்காக இந்த அழகுசாதனப் பொருட்களில் உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற முதல் பத்து இடங்களைப் பிடித்த சிறந்த பிராண்டுகளை உங்களுக்காக வரிசைப்படுத்தியிருக்கிறோம்.

சந்தை மதிப்பு

சந்தை மதிப்பு

2016ஆம் ஆண்டில் அமெரிக்க காஸ்மெடிக் சந்தை மதிப்பு மட்டும் சுமார் 62.42 பில்லியன் டாலர் வரை உயரும் என கணிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா சந்தையில் இதன் மதிப்பு 20 பில்லியன் டாலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை மதிப்பு
 

சந்தை மதிப்பு

2016ஆம் ஆண்டில் அமெரிக்க காஸ்மெடிக் சந்தை மதிப்பு மட்டும் சுமார் 62.42 பில்லியன் டாலர் வரை உயரும் என கணிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா சந்தையில் இதன் மதிப்பு 20 பில்லியன் டாலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. மேபிலைன் (Maybelline)

10. மேபிலைன் (Maybelline)

மேபிலைன் அமெரிக்காவின் ஒரு மிகப் பிரபலமான பிராண்டு. அதுமட்டுமல்லாது இதன் பல்வேறு விதமான அழகுச் சாதனப் பொருட்கள் மற்றும் கேசப் பராமரிப்புப் பொருட்கள் உலகெங்கிலும் பிரபலமானவை.

மேபிலைன் பிரெஞ்சு அழகுசாதனப் பொருட்கள் வல்லுநர்களான லோரீல் நிறுவனத்தின் பிராண்டு ஆகும். மெர்சிடிஸ் பென்ஸ் பேஷன் வீக் நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அழகூட்டும் பொருள் விளம்பரதாரர்களில் இந்துவும் ஒன்று.

Maybelline முக்கியப் பொருட்கள்

Maybelline முக்கியப் பொருட்கள்

மேபிலைன் கண்களுக்கான ஷாடோஸ், லிப்ஸ்டிக்குகள், பவுண்டேஷன், அழகூட்டும் பொருட்கள் மற்றும் முகப்பொலிவு மற்றும் பராமரிப்புப் பொருட்களை (பேசியல்) சந்தைப் படுத்தியுள்ளது.

9. அர்பன் டீகே (Urban Decay)

9. அர்பன் டீகே (Urban Decay)

அர்பன் டீகே 1996 ஆம் ஆண்டுத் துவக்கப்பட்டது. உலக அளவில் சுகாதாரம் மற்றும் சருமத்திற்கு ஏதுவான விலங்குக் கொழுப்புச் சேர்க்கப்படாத பொருட்களைத் தயார் செய்யும் ஒரு நிறுவனமாகத் தன்னை அடையாளப்படுத்தியுள்ளது.

சிந்தெடிக் பைபர் பிரஷ்

சிந்தெடிக் பைபர் பிரஷ்

அர்பன் டீகே 100 சதவிகித சிந்தெடிக் பைபர் இழைகளால் ஆன அழகு சாதன பிரஷுகளை மிகப்பெரிய அளவில் பல்வேறு விதங்களில் கொண்டுள்ளது என்பதோடு அவை நீண்டு உழைக்கவும் கூடியவை என்பது இவற்றின் சிறப்பம்சம்.

8. கவர்கேர்ள் (CoverGirl)

8. கவர்கேர்ள் (CoverGirl)

கவர்கேர்ள் மிகச்சிறந்த கண்டிப்பாக வைத்துக்கொள்ளவேண்டிய சில நறுமணப் பெர்பியூம்களைச் சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

இந்த அமெரிக்கப் பிராண்டானது 1960 ஆம் ஆண்டுத் துவக்கப்பட்டது. இன்று உலக அளவில் அதன் பொருட்களை 100 நாடுகளில் விற்பனை செய்கிறது.

பேஷன் ஏடுகள்

பேஷன் ஏடுகள்

கவர்கேர்ள் பல்வேறு பேஷன் ஏடுகளுடனும் ஒப்பந்தம் செய்துள்ளதோடு சொந்தமாக எண்ணிலடங்கா அழகு சாதன, சருமப் பராமரிப்பு மற்றும் கேசப் பராமரிப்புப் பொருட்களைத் தயாரிக்கின்றது.

7. அவான்

7. அவான்

அவான் அழகு சாதனப் பொருட்களை நேரடியாக விற்கும் ஒரு மிகப்பெரிய பிராண்டு ஆகும். இதன் முக்கியத் தயாரிப்புகளில், மாயிஸ்சறைசர், பியூட்டி லோஷன், பவுண்டேஷன் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் அடங்கும்.

1886ஆம் ஆண்டு முதல்..

1886ஆம் ஆண்டு முதல்..

இவற்றில் சிறந்தவை அவான் அணியு (ANEW) தயாரிப்புகள், அவான் நாச்சுரல் அண்ட் மார்க்ஸ், அவான் கலர் காஸ்மெடிக்ஸ் மற்றும் பிற. இந்தப் பிராண்டு டேவிட் ஹெச் மெக்கோன்னெல் என்பவரால் 1886 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது.

6. ரெவ்லான் (Revlon)

6. ரெவ்லான் (Revlon)

ரெவ்லான் நிறுவவம் 120க்கும் அதிகமாக நாடுகளில் தனது வர்த்தகத்தை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறது. இந்தப் பிராண்டு சார்லஸ் மற்றும் ஜோசப் ரேவ்சன் (சகோதரர்கள்) ஆகியோரால் சார்லஸ் லக்மன் எனப்படும் வேதியியலாளர் உதவியோடு "L" என்ற தன்னுடைய பெயரின் முதல் எழுத்து வருமாறு வைத்து 1932 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது.

ரெவ்லான் தயாரிப்புகள்

ரெவ்லான் தயாரிப்புகள்

ரெவ்லான் தயாரிப்புகள் அதன் சிறப்பான மற்றும் நீடிக்கும் பலன்களைத் தரக்கூடிய பண்புகளால் பிரபலமாக உள்ளது. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக ஒரு நெடிய வண்ண அழகூட்டிகள், முடி மற்றும் சரும பாதுகாப்புப் பொருட்கள், பொதுவான உடல்நலப் பராமரிப்பு மற்றும் நறுமணங்கள் ஆகியவற்றைத் தயாரித்து வழங்குகிறது.

5. எதூட் (Etude)

5. எதூட் (Etude)

எதூட் நிறுவனத்தைக் காஸ்மெடிக் சந்தையில் ஒரு ஸ்டைல் பிராண்டாகப் பார்க்கப்படுகிறது. இது பலருக்கு ஒரு சாதாரணப் பிராண்டாகத் தோன்றக்கூடும். ஆனால் நம் பட்டியலில் இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க இடம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

தரத்தில் முக்கியத்துவம்

தரத்தில் முக்கியத்துவம்

பல விலை உயர்ந்த பெருநிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இடையே எதூடின் தயாரிப்புகள் மிகவும் விலை குறைவானதாக உள்ளன. இது ஒரு தென் கொரிய நிறுவனம் என்பதுடன் தரம் குறைவான பொருட்களைத் தன் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் தரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியுடன் உள்ளது.

4. மேக் (MAC)

4. மேக் (MAC)

மே காஸ்மெடிக்ஸ் (அதாவது மேக் அப் ஆர்ட் காஸ்மெடிக்ஸ் என்பதன் சுருக்கமே மேக் ) குறித்து விளக்கம் ஏதும் தேவையில்லை, ஏனென்றால் உலகச் சந்தையில் இந்நிறுவனம் மிகவும் பிரபலம். அழகூட்டும் பொருட்கள் தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான நிறுவனம் இது.

100க்கும் அதிகமான பொருட்கள்

100க்கும் அதிகமான பொருட்கள்

முதலில் தொழில் தொடர்பான மேக் அப் சாதனங்களை மட்டும் தயாரித்த இந்நிறுவனம் தற்போது இயற்கை முடி பராமரிப்பு எண்ணெய்கள், ப்ளஷ்கள், மஸ்காரா, ஐ ஷாடோக்கள் (கண் அலங்காரப்பொருட்கள்), ஐ லைனர்கள், நகப்பூச்சுகள் (நெயில் பாலிஷ்), மினரல் பவுடர்கள், லிப் க்ளோஸ் அல்லது உதட்டுச் சாயம் மற்றும் பல்வேறு அழகு சாதனப் பொருட்களைத் தயாரித்து வழங்குகிறது.

3. லோரீல்

3. லோரீல்

சர்வதேச காஸ்மெடிக்ஸ் சந்தைகளில் லோரீல் ஒரு மிகச் சக்திவாய்ந்த பிராண்ட் ஆகும். இது மேக் அப், முடிக்கான வண்ணங்கள் (ஹேர் கலர்), சருமப் பராமரிப்பு மற்றும் வெயில் பாதுகாப்புப் பொருட்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இவற்றில் மாயிஸ்சறைசர் போன்ற சில பொருட்கள் மிக அதிகளவில் விற்பனையாகி வருகிறது.

2. ஒரிப்ளாம்

2. ஒரிப்ளாம்

ஒரிப்ளாம் ஒரு உலக அளவில் பிரபலமான அழகுசாதன நிறுவனம். 1967 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட இது பல்வேறு தரம் வாய்ந்த சருமப் பராமரிப்பு, அழகூட்டும் பொருட்கள், மற்றும் மேக் அப் பொருட்களை 67 நாடுகளில் உள்ள தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

தரமானதும், மலிவானதும்

தரமானதும், மலிவானதும்

ஒரிப்ளாம் தன் தயாரிப்புகளில் இயற்கை மூலம் பொருட்களைப் பயன்படுத்துவதுடன் குறைந்த விலையில் வழங்கவும் செய்கிறது.

1. கிளினிக் (Clinique)

1. கிளினிக் (Clinique)

அமெரிக்க நிறுவனம் கிளினிக் உலகின் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று என்பதோடு சருமப் பராமரிப்பு, அழகு சாதனங்கள் மற்றும் தூய்மைப் பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிக்கிறது.

நறுமணப் பொருட்கள்

நறுமணப் பொருட்கள்

இது தவிரத் தன் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த நறுமணப் பொருட்கள் (பெர்பியும்) மற்றும் சருமப் பராமரிப்புப் பொருட்களையும் வழங்குகிறது. இதன் மேக் அப் பிரஷுகள் நுண்ணுயிர் தொற்றுகள் ஏற்படாத வண்ணம் பூச்சுக்களுடன் (கோட்டிங்) தயாரிக்கப்படுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 companies which rocked the cosmetic industry in 2015

It is too tough to rate the best beauty brands. Reason is that there are a lot of varieties and popular names that make our selection too tough. Here we are sharing with you the list of top 10 famous and best cosmetic brands in 2015.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X