பீர் ஏற்றுமதியில் 'மெக்ஸிகோ' முதல் இடம்..!

By Srinivasan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தினமும் பீரைப் பற்றிப் புதிதாக ஏதாவது ஒரு தகவலை நாம் கேள்விப்படுவதுண்டு. பண்டைய எகிப்தில் பிரமிடு கட்டும் தொழிலாளர்களுக்குச் சம்பளமாகப் பீரையே வழங்கினார்கள் என்பது சிலருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று.

 

அது இருக்கட்டும் பீர் கெட்டுப் போகக்கூடியது என்று உங்களுக்குத் தெரியுமா? பீர் கெட்டுப்போகிற வரை வேடிக்கை பாக்க நானென்ன பைத்தியமா என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் எல்லாம் மாறி விட்டது. ஒளியைத் தவிரப் பல்வேறு விதமான பாதிப்புகளைத் தாண்டி பீர் கெடாமல் இருக்கவல்லது. ஆனால் பீர் பற்றி உங்களுக்குத் தெரியாத முக்கியமான விஷயத்தை நாங்கள் சொல்லப்போகிறோம்.

நீங்கள் பீர் பிரியராக இருந்தால் நிச்சயம் இந்தக் கட்டுரை விருப்பமானதாக இருக்கும்.

பீரும்.. மோரும்..

பீரும்.. மோரும்..

நாங்கள்ளாம் பீர்லேயே மூஞ்சி கழுவி குளிக்கிறவங்கிய எங்களுக்குத் தெரியாததா அப்படினு சொல்ரவரா.. அப்ப உங்களுக்குத் தெரியாத, உலகிலேயே அதிகமான பீரை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் விவரங்களைப் பற்றித் தான் நாங்க சொல்லப்போறோம்.

உலகம் சுற்றும் வாலிபன்..

உலகம் சுற்றும் வாலிபன்..

நீங்கள் உலகம் சுற்றுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவரானால் இக்கட்டுரையில் உள்ள நாடுகளில் பீரை ரசிக்கவும், ருசிக்கவும் மறக்காதீர்கள்.

இங்குப் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் தயாராக்கப்படும் பீர் வகைகள் உலகின் எந்த மூலையிலும் உள்ள சூப்பார் மார்கெட் அலமாரிகளிலும் பார் கவுன்டர்களிலும் காணமுடியும்.

போர்ச்சுகல்
 

போர்ச்சுகல்

ஏற்றுமதி மதிப்பு: 297 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

போர்ச்சுகலில் தயாரிக்கப்படும் பீர் வகைகளில் மூன்றில் இரண்டு பங்கு அங்கோலா நாட்டில் சென்றடைகிறது. அங்கு அது மிகவும் பிரபலம். 2010 முதல் 2014 ஆண்டுவரை போர்ச்சுகலின் பீர் ஏற்றுமதி வளர்ச்சி ஆண்டிற்கு 5% என்ற அளவில் இருந்தது. சூப்பர் போக், சக்ரே மற்றும் கோரல் ஆகியவை போர்ச்சுகலின் பிரபலமான பீர் பிராண்டுகள்.

அயர்லாந்து

அயர்லாந்து

ஏற்றுமதி மதிப்பு: 305.6 மில்லியன் டாலர்கள்

அயர்லாந்து தன்னுடைய பீர் ஏற்றுமதியில் பெருமளவு பிரிட்டன் அதாவது யுனைடட் கிங்டமிற்கு ஏற்றுமதி செய்கிறது. 2014 ஆண்டுச் சுமார் 144 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ள அயர்லாந்து பிற நாடுகளைப் போலல்லாமல் 4% அளவிற்கு ஏற்றுமதி மதிப்பில் பின்தங்கியுள்ளது. ஹார்ப், மர்ஃபிஸ் மற்றும் கின்னஸ் ஆகியவை இந்த நாட்டின் பிரபல பீர் பிராண்டுகளாகும்.

டென்மார்க்

டென்மார்க்

ஏற்றுமதி மதிப்பு: 343.6 மில்லியன் டாலர்கள்

டென்மார்க் தன்னுடைய பீர் ஏற்றுமதிக்கு மேற்கு ஐரோப்பாவைச் சார்ந்துள்ளது. இதில் ஜெர்மனி ஒரு முன்னிலை வகிக்கிறது. இந்த நாட்டிலிருந்து வரும் பீர் தயாரிப்புகளில் ஏற்றுமதி மற்றும் உள்ளூர் சந்தைகளில் டியுபோர்க் மற்றும் கார்ல்ஸ்பெர்க் ஆகிய பிராண்டுகள் மிகவும் பிரபலம். இந்தியாவிலும் இந்தப் பிராண்டுகள் மிகவும் பிரபலம்.

 பிரான்ஸ்

பிரான்ஸ்

ஏற்றுமதி மதிப்பு : 468 மில்லியன் டாலர்கள்

பிரான்ஸ் நாடு 2010-14 ஆம் ஆண்டு இடைவெளியில் 11% அளவிற்கு நல்லதொரு வளர்ச்சியைத் தன் ஏற்றுமதி மூலம் கண்டது. பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படும் பீர் வகைகளில் ஏறக்குறையப் பாதியளவிற்கு ஸ்பெயினிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஜென்லைன், க்ரோனென்பர்க் மற்றும் பெல்ஃபோர்த் ஆகிய பீர் பிராண்டுகள் பிரான்ஸ் தயாரிப்புகளில் பிரபலம்.

அமெரிக்கா

அமெரிக்கா

ஏற்றுமதி மதிப்பு : 541.8 மில்லியன் டாலர்

அமெரிக்கா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பீர் தயாரிக்கும் நாடாக இருந்தாலும் அதில் பெருமளவு உள்ளுர் சந்தைகளிலேயே விற்கப்படுகின்றன. அமெரிக்கப் பீர்களை அமெரிக்கா அல்லாத நாடுகளில் கனடா மற்றும் மெக்ஸிகோ மக்கள் அதிகம் உபயோகிக்கின்றனர்.

எனவே இவ்விரு நாடுகளுக்கும் தயாரிப்புகளில் பாதிக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அமெரிக்கப் பீர் வகைகளில் பட் லைட், பட்வெய்ஸர் மற்றும் கூர்ஸ் லைட் ஆகியவை பிரபலமானவை.

யுனைடட் கிங்டம் (யுகே)

யுனைடட் கிங்டம் (யுகே)

ஏற்றுமதி மதிப்பு : 813.5 மில்லியன் டாலர்

யு.கே. நாடு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை விட அவர்கள் உபயோகிக்கவே விரும்புவார்கள். இந்த நாட்டின் ஏற்றுமதி கூட 1 சதவிகித அளவிற்குக் குறைந்திருந்தது. இந்த நாட்டின் முதன்மை ஏற்றுமதிச் சந்தைகளாக அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் விளங்குகின்றன. இவற்றில் நியுகஸில் பிரவுன் அலெ, ஸ்டோன்ஸ் பிட்டர் மற்றும் மாகெசன் ஸ்டௌட் ஆகிய பிராண்டுகள் பிரபலம்.

பெல்ஜியம்

பெல்ஜியம்

ஏற்றுமதி மதிப்பு : 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (அடேங்கப்பா குடிக்கவெச்சே பெரியாளா ஆகியிருக்காங்க...)

நீங்கள் இதற்கு முன் நாங்கள் குறிப்பிட்டிருந்த பட்டியல்களைப் படித்திருந்தால் பெல்ஜியம் பீர் வகைகள் எப்போதும் முன்னிலை வகிப்பதைக் கவனித்திருப்பீர்கள். எனவே இந்த நாட்டின் பீருக்கு பிற நாடுகளில் அதிக மவுசு இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து நாட்டு பீர் விரும்பிகள் பெல்ஜியம் பீரை அதிகம் விரும்புகின்றனர். டுவெல், சிமே மற்றும் லெஃப் ஆகியவை பெல்ஜியம் பீர் வகைகளில் பிரபலமான பிராண்டுகள்.

ஜெர்மனி

ஜெர்மனி

ஏற்றுமதி மதிப்பு : 1.42 பில்லியன் டாலர்கள்

ஜெர்மனி ஏன் இவ்வளவு பீரை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும், அவர்கள் உள் நாட்டுத் தேவைக்கு ஏதாவது மிச்சம் வைத்திருக்கிறார்களா என்ற ஐயங்கள் நமக்கு வரலாம். ஜெர்மனி பெரும்பாலும் தன் ஐரோப்பிய சகாக்களுக்கே ஏற்றுமதி செய்தாலும், சீனா மற்றும் அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்கிறது. ஓட்டிஞ்சர், க்ரோம்பாஷர் மற்றும் பிட்பர்கர் ஆகியவை ஜெர்மனியின் முன்னணி பீர் பிராண்டுகள்.

நெதர்லாந்து

நெதர்லாந்து

ஏற்றுமதி மதிப்பு: 2.1 பில்லியன் டாலர்கள்

நெதர்லாந்தின் ஹைனகென் நிறுவனம் உலகின் மூன்றாவது பெரிய பீர் தயாரிக்கும் நிறுவனம் என்பதால் இந்த நாடு ஏன் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளது என்பதற்கான விடை நமக்குக் கிடைத்துவிடுகிறது. நெதர்லாந்தின் பீர் தயாரிப்பில் ஏறக்குறைய மூன்றில் இரு பங்கு அமெரிக்காவைச் சென்றடைகிறது. ஹைனகென் தவிர க்ரோல்ஷ் மற்றும் பவாரியா ஆகியவை பிரபலம்.

மெக்ஸிகோ

மெக்ஸிகோ

ஏற்றுமதி மதிப்பு : 2.4 பில்லியன் டாலர்கள்

முதலிடத்தில் மெக்ஸிகோவா என நீங்கள் வாயைப் பிளப்பது புரிகிறது. ஆனால் அமெரிக்காவின் பீர் தேவைகளை மற்ற நாடுகளை விட மெக்ஸிகோ நன்கு அறிந்து வைத்துள்ளது. அதனால் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்துகிறது.

அமெரிக்காவிற்கு மெக்ஸிகோ ஏற்றுமதி செய்யும் பீரின் மதிப்பு 2 பில்லியன் டாலர்கள் என்றால் உங்களுக்குத் தலை சுற்றலாம். ஆனால் அது தான் உண்மை. அமெரிக்காவைத் தவிரக் கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் மெக்ஸிகோ ஏற்றுமதி செய்கிறது. கொரொனா, டாஸ் ஈக்விஸ் மற்றும் டெகேட் ஆகியவை பிரபலமான மெக்ஸிகோ பிராண்டுகள்.

அடேங்கப்பா இவ்வளவு குடிமக்களா உலகத்துல இருக்காங்க... பணம் காய்க்கிற மரம்தான் போங்க இந்தப் பீர் பிஸினஸ்...

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

இந்தியாவை விட்டு வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள்.. புதிய சிக்கலில் ஐடி நிறுவனங்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Just when you thought you’ve learned everything there is to know about beer, here we come in with countries that export the most beer in the world.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X