இணையதள விற்பனையில் களமிறங்கும் கல்யான் ஜூவல்லர்ஸ்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா: இந்த வருடத் தீபாவளிக்கு எந்தப் படம் வருகிறதோ இல்லையோ, கல்யான் ஜூவல்லர்ஸ் நிறுவனம் ஆன்லைன் விற்பனை இணையதளத்தை ரீலிஸ் உறுதி.

 

2015ஆம் நிதியாண்டில் 30 சதவீத அதிக வருவாய் எட்டிய கல்யான் ஜூவல்லர்ஸ், நடப்பு நிதியாண்டில் சர்வதேச சந்தையில் 3 புதிய கிளைகளையும், ஆன்லைன் விற்பனை இணையதளத்தையும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

ரூ.13,000 கோடி வர்த்தகம்

ரூ.13,000 கோடி வர்த்தகம்

கடந்த வருடம் 10,000 கோடி ரூபாய் வருவாய் எட்டிய நிலையில் 2016ஆம் நிதியாண்டில் 13,000 கோடி ரூபாய் என்ற வர்த்தக இலக்கை எட்டிய கல்யான் ஜூவல்லர்ஸ் நிர்வாகம் முயற்சி செய்யத் திட்டமிட்டுள்ளது என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் கல்யான்ராமன் தெரிவித்தார்.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

தற்போது கல்யான் ஜூவல்லர்ஸ் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து 1000க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வந்தாலும், தீபாவளிக்கு முன் அல்லது தீபாவளி அன்று முழுமையான வர்த்தகம் செய்யத் தகுந்த இணையதளத்தைக் கல்யான் ஜூவல்லர்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என ரமேஷ் கல்யான்ராமன் கூறினார்.

புதிய கிளைகள்

புதிய கிளைகள்

மேலும் நடப்பு நிதியாண்டில் 100 கிளைகளாக இருக்கும் கல்யான் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் புதிதாக 22 கிளைகள் இணைய உள்ளது.

மலேசியா, இலங்கை, சிங்கப்பூர்
 

மலேசியா, இலங்கை, சிங்கப்பூர்

இதில் முக்கியமாக மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளில் புதிய கிளைகளைத் திறக்க உள்ளோம். இதன் மூலம் புதிய சந்தை வாடிக்கையாளர்களைப் பெறுவோம் என ரமேஷ் தெரிவித்தார்.

மைகல்யான்

மைகல்யான்

அதேபோல் இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக மைகல்யான் கிளைகளை அதிகரிக்கவும், இப்பிரிவில் கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும் முடிவு செய்துள்ளோம்.

ஐபிஓ இல்லை..

ஐபிஓ இல்லை..

அதுமட்டும் அல்லாமல் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்குத் தேவையான நிதி தொகை அனைத்தும் வர்த்தகத்தின் மூலம் கிடைப்பதால், பங்குச்சந்தையின் மூலம் நிதிதிரட்டம் திட்டம் கல்யான் ஜூவல்லர்ஸ் நிர்வாகத்திற்கு இல்லை என்று ரமேஷ் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kalyan Jewellers plans stores in Sri Lanka, Malaysia

Kalyan Jewellers is planning to unveil its online platform by Diwali , even as it targets a 30 per cent rise in its revenue this fiscal and entry into three overseas markets.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X