17 மாதங்களுக்குப் பின் 0.34%ஆக உயர்ந்தது மொத்த விலை பணவீக்கம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய சந்தையில் 17 மாதங்களுக்குப் பின் உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரையின் விலை உயர்வால் மொத்த விலை பணவீக்கம், எதிர்மறை பணவீக்கத்தில் இருந்து (+)0.34 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த விலை பணவீக்கத்தின் அளவு -0.85 சதவீதமாகவும், கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் -2.43 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத நாணயக் கொள்கை மறு ஆய்வில் வட்டி விகிதம் குறைக்கப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனச் சந்தை வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

17 மாதங்களுக்குப் பின் 0.34%ஆக உயர்ந்தது மொத்த விலை பணவீக்கம்..!

மார்ச் மாதத்தில் -2.26 சதவீதமாக இருந்த காய்கறிகளின் மீதான மொத்த விலை பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 2.21 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மொத்த விலை பணவீக்கத்தில் 65 சதவீதம் ஆதிக்கம் செலுத்தும் உற்பத்தி பொருட்களின் பணவீக்கம் 0.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் இதன் அளவு -0.13 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 17 மாதங்களுக்குப் பின் முதல் முறையாக (+)0.34% உயர்ந்ததற்கு முக்கியக் காரணம் உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரையின் விலை உயர்வு தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After 17 months, WPI inflation turns positive at 0.34%

After remaining in the negative zone for 17 consecutive months, the Wholesale Price Index (WPI)-based inflation moved to positive territory at 0.34 per cent in April.
Story first published: Tuesday, May 17, 2016, 11:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X