பேமென்ட் வங்கி அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டார் திலீப் சங்வி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டின் முன்னணி பார்மா நிறுவனத்தின் தலைவரான திலீப் சங்வி, இந்தியாவில் பேமென்ட் வங்கி சேவையைத் துவங்குவதற்காக டெலிநார் பைனான்ஸ் சர்வீசஸ் மற்றும் ஐடிஎப்சி வங்கி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தார். ஆனால் தற்போது இம்முடிவை முழுமையாகக் கைவிடுவதாகத் திலீப் சங்வி தரப்பு தெரிவித்துள்ளது.

 
பேமென்ட் வங்கி அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டார் திலீப் சங்வி..!

தனது முடிவின் மாற்றத்திற்கான எவ்விதமான காரணங்களையும் திலீப் தெரிவிக்கவில்லை. பேன்மென்ட் வங்கி சேவை அளிப்பதற்கான உரிமம் பெற ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம் அளித்த சோழமண்டலம் முதலீட்டு மற்றும் நிதியியல் நிறுவனம் மார்ச் மாதத்தில் இதேப்போன்று திடீரென விண்ணப்பத்தைத் திரும்பப்பெறு கொண்டது.

இதன் மூலம் டெலிநார் பைனான்ஸ் சர்வீசஸ் மற்றும் ஐடிஎப்சி வங்கியும் பேமென்ட் வங்கி சேவை திட்டத்தில் விலகுவதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியிடம் முறையான தகவல்களையும் தெரிவித்துள்ளது இந்த மூவர் கூட்டணி செய்தியாளர்களிடம் கூறியது.

பேமென்ட் வங்கி அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டார் திலீப் சங்வி..!

இக்கூட்டணியின் மூலம் பேமென்ட் வங்கி அமைக்கப்பட்டு இருந்தால் டெலிநார் பைனான்சியல் சர்வீசஸ் 39 சதவீத பங்குகளும், ஐடிஎப்சி 20 சதவீத பங்குகளும், மீதமுள்ள 41 சதவீத பங்குகளைத் திலீப் சங்வி பெறுவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dilip Shanghvi drops payments bank plan

Dilip Shanghvi, promoter of Sun Pharma, who had partnered Telenor Financial Services and IDFC to start a payments bank said he has dropped the plan.
Story first published: Saturday, May 21, 2016, 14:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X