இன்று முதல் சேவை வரி 15%ஆக உயர்வு.. சம்பளத்தை காலி செய்ய வருகிறது 'கிரிஷி கல்யான் செஸ்'..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நாட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனைப் பேணவும், இத்துறை சார்ந்த புதிய வளர்ச்சி திட்டங்களுக்காக நிதியை திரட்டவும் மத்திய அரசு தனது 2016ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் கிரிஷி கல்யான் செஸ் என்ற கூடுதல் வரியை நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இக்கூடுதல் வரி நாட்டு மக்கள் செலுத்தும் சேவை வரியில் கூடுதலாக 0.05 சதவீதம் விதிக்கப்பட உள்ளது.

இவ்வரி விதிப்பு வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதால், நாம் அன்றாடும் பெறப்படும் சேவைகளில் கூடுதல் பணம் செலவாகும்.

15 சதவீத சேவை வரி..

15 சதவீத சேவை வரி..

மத்திய அரசின் இப்புதிய வரி விதிப்பின் மூலம் 14.5 சதவீதமாக இருக்கும் சேவை வரித் தற்போது 0.50% கிரிஷி கல்யான் செஸ் உடன் சேர்த்து 15 சதவீதமாக வசூல் செய்யப்படும்.

சரி அப்படி எந்தெந்த சேவையில் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது..?

சுவச் பார்த் செஸ்

சுவச் பார்த் செஸ்

நாட்டில் தூய்மை பேன மத்திய அரசு சுவச் பார்த் செஸ் வரியாக 0.5 வரியை உயர்த்தியதைப் போலத் தற்போது கிரிஷி கல்யான் செஸ் மூலம் சேவை வரியின் அளவு 15 சதவீதமாக உயர்ந்து மக்களின் பணத்தைத் தொடர்ந்து பிடுங்கி வருகிறது மத்திய அரசு.

இந்த வரிகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்காக என்றாலும் வாங்கும் சம்பளத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை வரியாக மட்டுமே செலுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

சரி இப்புதிய கிரிஷி கல்யான் செஸ் மூலம் நமக்கு அதிகச் செலவு வைக்கும் சேவைகளைப் பார்ப்போமா..?

மொபைல் கட்டணம்
 

மொபைல் கட்டணம்

கிரிஷி கல்யான் செஸ் ஜூன் 1ஆம் தேதி அமலாக்கப்படுவதால் மொபைல் சேவைக்கான கட்டணத்தைச் செலுத்தும் போதும் நாம் 15 சதவீதம் என்ற அதிகளவிலான சேவை வரியைச் செலுத்த வேண்டி இருக்கும்.

ஹோட்டல்

ஹோட்டல்

ஹோட்டலுக்குச் சாப்பிடப் போக வேண்டும் என்றால் கூட யோசிக்க வேண்டிய நிலைக்கு மக்களைத் தள்ளியுள்ளது மத்திய அரசு.

ஜூன் 1ஆம் தேதிக்குப் பின் ஹோட்டல், பிட்சா ஹட், டாமினோஸ் போன்ற உணவகங்களிலும் 15 சதவீத சேவை வரி வசூல் செய்யப்படும்.

பயணம்

பயணம்

விமான டிக்கெட், ஆன்லைன் மூலம் பஸ் டிக்கெட் புக்கிங், ரயில் டிக்கெட் புக்கிங் எனப் பல்வேறு பயணச் சேவைகளிலும் நாம் 15 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டி இருக்கும்.

குறிப்பாகப் பிஸ்னஸ் கிளாஸ் பயணிகளின் விமானக் கட்டணங்கள் உயரும்.

நிதி சேவைகள்

நிதி சேவைகள்

இன்சூரன்ஸ், வங்கியில் லோன் பெறும்போது சேவைக் கட்டணம் என அனைத்து விதமான வங்கி மற்றும் இன்சூரன்ஸ் சேவைகளுக்கு 15 சதவீதம் சேவை வரி விதிக்கப்படுகிறது.

கேப் மற்றும் டாக்ஸி சேவை

கேப் மற்றும் டாக்ஸி சேவை

இச்சேவை வரி உயர்வினால் கேப் மற்றும் டாக்ஸி கட்டணங்களும் உயரும். இதனால் ஆன்லைன் மற்றும் மொபைல் செயலி மூலம் டாக்ஸி புக் செய்யும் முன் ஒரு முறை யோசித்துப் புக் பண்ணுங்க.

டிடிஹெச் முதல் சலவை சேவை வரை

டிடிஹெச் முதல் சலவை சேவை வரை

டிடிஹெச் (DTH) சேவை, பியூட்டி பார்லர், இன்சூரன்ஸ், பங்குச் சந்தையின் வர்த்தகக் கட்டணங்கள், கொரியர் சேவை, சலவை சேவை(Laundry services) ஆகியவற்றின் கட்டணங்களும் உயர உள்ளது.

பிற பொருட்கள்

பிற பொருட்கள்

அதுமட்டும் அல்லாமல் குளிர்பானங்கள், பிளாஸ்டிக் பைகள், மதுபானம், சிட் ஃபண்ட், லாட்டரி, இசைக் கச்சேரி, திரைப்படம் மற்றும் தீம் பார்க் கட்டணங்களும் உயரப் போகின்றன.

சிகரெட்

சிகரெட்

இப்போதாவது உங்களது சிகரெட் பழக்கத்தை நிறுத்திவிட்டால் புண்ணியமாகப் போகும். நாட்டு மக்களின் புகைபிடிக்கும் பழக்கத்தைக் குறைக்கச் சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களை மூடாமல் சேவை வரியை மீண்டும் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் சிகரெட் விலை ஜூன்1ஆம் தேதி முதல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

உங்கள் மின்னஞ்சலைத் தேடி வரும் வர்த்தக உலகம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Your Bill Amounts Are Going To Increase From June 1, 2016

Union Finance Minister, Arun Jaitley, recommended a 0.50 per cent, Krishi Kalyan Cess on all taxable services. So, if anything has service tax, you are going to end-up paying more. The present rate of service tax will be hiked to 15 per cent from June 1, 2016, from 14.5 per cent. Take a look at what gets expensive:
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X