சஹாரா குழுமத்தின் 4,700 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வந்தது.. செபி அதிரடி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஊழல் வழக்கில் சிக்கிய சஹாரா குழுமத்திற்குச் சொந்தமாக இந்தியாவில் பல பகுதிகளில் உள்ள நிலத்தை விற்பனை செய்வதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய 20,500 கோடி ரூபாயை எளிதாக வசூல் செய்யச் செபி மற்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

இதன் படி சஹாரா குழுமத்திற்குச் சொந்தமான 4,700 ஏக்கர் நிலம் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

4,700 ஏக்கர் நிலம் விற்பனை செய்தால் எவ்வளவும் பணம் கிடைக்கும்..?

சொத்துகள் முடக்கம்

சொத்துகள் முடக்கம்

சஹாரா குழுமத்தின் ஊழல் வழக்கு விஸ்பரூபம் எடுத்த நாள் முதல் மத்திய அரசு மற்றும் செபி அமைப்பு இந்நிறுவனத்தின் அனைத்து விதமான சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை முழுமையாக முடக்கியது.

4,700 ஏக்கர் நிலம் விற்பனை

4,700 ஏக்கர் நிலம் விற்பனை

எச்டிஎப்சி ரியாலிட்டி மற்றும் எஸ்பிஐ கேபிடல் மார்கெட் நிறுவனங்கள் முடக்கியுள்ள இந்த 4,700 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசு சுமார் 6,500 கோடி ரூபாய் நிதியைத் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

33,633 ஏக்கர்

33,633 ஏக்கர்

இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக இந்தியாவில் சுமார் 33,633 ஏக்கர் நிலம் உள்ளது எனச் சஹாரா குழுமம் தெரிவித்துள்ளது.

பரோல்
 

பரோல்

சஹாரா குழுமத்தின் தலைவர் சப்ரதா ராய் மற்றும் இதன் நிர்வாகத் தலைவர் அசோக் ராய் சவுத்ரி ஆகியோரை உச்ச நீதிமன்றம் பரோல் மூலம் நான்கு வாரம் திகார் சிறையில் இருந்து விடுவித்துள்ளது. இவர்களின் விடுதலைக்குப் பின்னரே இந்நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.

எச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ

எச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ

இந்தியாவில் சஹாரா குழுமத்திற்குச் சொந்தமாக இருக்கும் 60 சதவீத சொத்துக்களை ஏலம் விடச் செபி அமைப்பு எச்டிஎப்சி ரியாலிட்டி மற்றும் எஸ்பிஐ கேபிடல் மார்கெட் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சேலத்திலும் நிலம் உள்ளது

சேலத்திலும் நிலம் உள்ளது

சஹாரா நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்கள் உஜ்ஜைன், இந்தூர், அஜ்மீர், அலிகார், Bahraich, பரேலி, முசாபர்நகர், லக்னோ, நொய்டா, குவஹாத்தி, தமிழ்நாட்டில் சேலம், போர்பந்தர் மற்றும் பரோடா ஆகிய பகுதிகளிலும் உள்ளது.

மிகப்பெரிய சொத்து

மிகப்பெரிய சொத்து

மும்பை Versova என்னும் இடத்தில் இருக்கும் 106 ஏக்கர் நிலம் தான் இந்நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்து, 3 வருடத்திற்கு முன் இதன் மதிப்பு 19,300 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

4,700 acres of Sahara land put up for sale

In perhaps the biggest pan-India sale of land, over 4,700 acres held by the Sahara Group across 14 states have been put on the block by HDFC Realty and SBI Capital Markets. The sale is expected to fetch around Rs 6,500 crore.
Story first published: Monday, May 30, 2016, 15:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X