கருப்பு பணத்தை பதுக்கி வைக்க இதுதான் சிறந்த இடம்..!

By Srinivasan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: அண்மையில் பனாமா ரகசிய ஆவணங்கள் கசிந்ததையும் அதன் பின் எழுந்த சர்ச்சைகளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே உங்கள் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் வைக்கவும் கையாளவும் (Offshore Banking) உகந்த நாடுகள் எவை என்பதை அறிய உங்களில் பலருக்கும் ஆர்வம் இருக்கும்.

 

நீங்க உருண்டு புரண்டு சம்பாதிச்ச பணத்தை, மக்களுக்கு ஒன்றும் செய்யாத அரசின் கையில் வரியாகக் கொடுக்க உங்களுக்கு விருப்பமில்லையா..? அப்படி என்றால் இது உங்களுக்கான கட்டுரை தான்.

பன்னாட்டு வங்கியியல்

பன்னாட்டு வங்கியியல்

திடீரென்று பிரபலமாகப் பேசப்படுவதால் இந்தப் பன்னாட்டு வங்கிப் பரிவர்த்தனைகள் ஒன்றும் புதிய விஷயம் என்று நினைக்கவேண்டாம். இந்த முறை 1815 ஆம் ஆண்டு அதாவது ஏறக்குறைய 200 வருடங்களுக்கு முன் வியன்னா மாநாட்டிற்குப் செயல்பாட்டிற்கு வந்தது.

அப்போது தான் சுவிசர்லாந்து நடுநிலையைப் பின்பற்றி உலக நாடுகளில் தங்கள் பணத்தைப் பாதுகாக்க விரும்பியோருக்காக வங்கிகளைத் திறந்தது. இந்த வரிசையில் அமெரிக்கா 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சேர்ந்தது.

 

பிரிட்டிஷ்காரர்கள்

பிரிட்டிஷ்காரர்கள்

1920-களில் நீதிமன்றங்களில் அயல் நாடுகளில் பணத்தை மறைத்து வைப்பது குறித்த வழக்குகளில் தவறில்லை எனப் பல தீர்ப்புகளின் அடிப்படையில் பிரிட்டிஷ்.காரர்கள் தங்கள் பணத்தை அயல் நாடுகளில் மறைத்து வைப்பதில் அதிகம் ஆர்வம் காட்டினர்.

உலகப்போர்
 

உலகப்போர்

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகில் பல நாடுகளும் இதனைப் பின்பற்ற தொடர்ந்தன. இருபத்தோராம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஒவ்வொருவரும் அல்லது அவர்கள் உறவினரும் வெளிநாட்டு வங்கிகளில் கணக்கை வைத்திருந்தனர் குறிப்பாக அழகு வளம் செழியும் கரீபியன் தீவுகளில்.

வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்பு

மக்கள் வெளி நாட்டு வங்கிகளைப் பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இதில் முக்கியமான ஒன்று வரி ஏய்ப்பு. ஆனால் செலாவணி மோசடி அல்லது ரகசிய சொத்துகள் இந்த வரிசையில் அதிக அளவில் இடம்பெறுகிறது.

முதலீட்டுப் பாதுகாப்புக் குறியீடு

முதலீட்டுப் பாதுகாப்புக் குறியீடு

இறுதியாக, நாங்கள் வரி தீர்ப்பாய நெட்வொர்க் மூலம் முதலீட்டுப் பாதுகாப்புக் குறியீட்டை (FSI) வைத்து வெளிநாட்டு வங்கிப் பரிவர்த்தனைகளுக்குச் சிறந்த நாடுகளைத் தீர்மானித்திருக்கிறோம்.

முக்கியக் கருவி

முக்கியக் கருவி

இந்த எஃப் எஸ் ஐ பெரும் பணக்காரர்களுக்கும் (பெரும்பாலும் குற்றவாளிகள்) உயர்தரப்பினருக்கும் வரிவிதிப்பிலிருந்து வங்கிகள் மூலமாகப் பாதுகாப்பை அளிக்கும் நாடுகள் எவை என்பதை அறிய உதவும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது.

எனவே இந்த ஒரு காரணம் மிகவும் முக்கியமாகத் தோன்றியதால் நாம் இங்கே விவாதத்திற்குப் பெரும்பாலும் இதுதொடர்பாகவே நிறைய விவரங்களைத் தந்திருக்கிறோம்.

 

10. சானல் தீவுகள் – ஜெர்சி அண்ட் கம்சே

10. சானல் தீவுகள் – ஜெர்சி அண்ட் கம்சே

வங்கிப் புள்ளிகள்-3, எஃப்எஸ்ஐ புள்ளிகள்-11, மொத்த புள்ளிகள்-14
(எஃப்எஸ்ஐ புள்ளிகள் விவரம்: எஃப்எஸ்ஐ மதிப்பீடு 5, எஃப்எஸ்ஐ 1,013.1)

யுகே-வின் நிர்வாகத்தின் கீழ் வரும் இந்தச் சானல் தீவுகள் (உண்மையில் யுகே -வின் கீழல்லாமல் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தின் கீழ் உள்ள அதே நேரம் நிதிச் சுதந்திரம் உள்ள ஒரு பகுதி) உலகின் மிகப்பெரும் பன்னாட்டு வங்கி முனைமமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

லண்டனுக்கு அருகில் உள்ளதாலும் அதன் சக்திவாய்ந்த வங்கிகளாலும் இந்த வங்கி நெட்வொர்க்கும், டிரஸ்டுகளும் ஹெட்ஜ் ஃபண்டுகளும் நன்கு வளர்ச்சியடைய ஏதுவாக இருந்தது. எனினும் 2013 ஆம் ஆண்டில் ஜெர்சி மற்றும் கம்சே, ஒஇசிடி எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் பொது அறிவிப்பு வழிமுறைகளில் கையெழுத்து இட்டது. அது முதல் வரி தொடர்பான பல்வேறு அன்னிய புரிதுணர்வுகளைக் கையெழுத்திட்டதன் மூலம் இவ்வாறு ரகசிய வெளி நாட்டு வங்கிப் பரிவர்த்தனைகள் குறைப்பிற்கு வித்திட்டது.

9. பனாமா

9. பனாமா

வங்கிப் புள்ளிகள்-4, எஃப்எஸ்ஐ புள்ளிகள்-13, மொத்த புள்ளிகள்-17
(எஃப்எஸ்ஐ புள்ளிகள் விவரம்: எஃப்எஸ்ஐ மதிப்பீடு 13, எஃப்எஸ்ஐ 415.6)

மொசாக் ஃபொன்செகா நிறுவனத்திடமிருந்து வெள்ளமாக வெளிப்பட்ட 2,14,000 லட்சம் நிறுவனங்களின் சுமார் 1.15 கோடி ரகசியக் கோப்புகள் பனாமாவின் பாதுகாப்பான ரகசிய வங்கிப் பரிவர்தனைகளுகான நம்பகத்தன்மைக்கு உலை வைத்தது.

ஆனால் இது ஒரு சிறிய விவரம்தான் என்றும் இதில் தோண்டத்தோண்ட பெரிய பூதங்கள் கிளம்பலாம் என்றும் நம்பப்படுகிறது. ஏனென்றால் மொசாக் ஃபொன்சேகா பனாமாவிற்குச் சேவை செய்யும் பல நிறுவனங்களில் ஒன்று மட்டுமே (பெரிய நிறுவனம் என்றாலும் கூட). இதனால் பனாமா வங்கித்துறைக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் ஏற்படக்கூடிய நீண்ட கால விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை ஆராய வேண்டியுள்ளது.

 

8. லக்ஸம்பர்க்

8. லக்ஸம்பர்க்

வங்கிப் புள்ளிகள்-2, எஃப்எஸ்ஐ புள்ளிகள்-16, மொத்த புள்ளிகள்-18
(எஃப்எஸ்ஐ புள்ளிகள் விவரம்: எஃப்எஸ்ஐ மதிப்பீடு 6, எஃப்எஸ்ஐ 816.9)

லக்ஸம்பர்கின் கிராண்ட் டஷி ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையே ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு மிகச்சிறிய நாடு. வரிகளிலிருந்து ஐரோப்பாவிற்குப் புகலிடம் தரும் ஒரு இடம் இது.

சுவிசர்லாந்தைப் போலவே இதன் வெற்றியும் அதன் வியாபார ரகசியத்திலேயே உள்ளது. இங்கு ரகசியத்தை வெளிப்படுத்த முயலுபவர்கள் சிறை செலவது உறுதி. புரசல்ஸிலிருந்து வரும் அழுத்தம் காரணமாக லக்ஸம்பர்கிற்கு இந்த வங்கித் துறையிலிருந்து வரும் இலாபம் நின்றுபோகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

 

7. லெபனான்

7. லெபனான்

வங்கிப் புள்ளிகள்-4, எஃப்எஸ்ஐ புள்ளிகள்-15, மொத்த புள்ளிகள்-19
(எஃப்எஸ்ஐ புள்ளிகள் விவரம்: எஃப்எஸ்ஐ மதிப்பீடு 5, எஃப்எஸ்ஐ 1013.1)

லெபனான் குறித்துத் தெரியாதவர்களுக்கு இந்த நாடு இந்தப் பட்டியலில் இருப்பது ஆச்சரியமளிக்கலாம். வெளிநாடுகளில் வாழும் லெபனியர்கள் சுமார் 50 லத்சம் முதல் 1.5 கோடி வரை இருக்கலாம். இதில் கார்லோஸ் ஸ்மித், கார்லோஸ் கோஸ் (ரெனொ நிறுவன சிஈஓ) மற்றும் நிக்கோலஸ் ஹாயெக் (ஸ்வாஷ் நிறுவன சிஈஓ) போன்ற சக்திவாய்ந்த பெரும் பணக்காரர்களும் அடக்கம்.

லெபனான் இவர்களைப் போன்றவர்களுக்குத் தங்கள் பணத்தைத் தங்கள் தாய் நாட்டில் வங்கிச் சலுகை விதிமுறைகள் மூலம் பாதுகாப்பாக வைக்க வழிவகைச் செய்துள்ளது. வெளி நாட்டில் உள்ள லெபனியர்கள் இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திச் சுமார் 175 பில்லியன் டாலர் அளவிற்குத் தங்கள் நாட்டு வங்கிகளில் சேமித்து வைத்துள்ளனர்.

இது லெபனானின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் 400 சதவிகிதம் ஆகும். இதுவரை லெபனான் பன்னாட்டு வரி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் நிராகரித்து வந்துள்ளது. அதை அவர்களால் இனி வரும் காலங்களிலும் தாக்குப் பிடிக்க முடிந்தால் பட்டியலில் அவர்கள் மேலும் முன்னேற வாய்ப்புகள் உள்ளன.

 

6. கேமென் தீவுகள்

6. கேமென் தீவுகள்

வங்கிப் புள்ளிகள்-2, எஃப்எஸ்ஐ புள்ளிகள்-17, மொத்த புள்ளிகள்-19
(எஃப்எஸ்ஐ புள்ளிகள் விவரம்: எஃப்எஸ்ஐ மதிப்பீடு 5, எஃப்எஸ்ஐ 1013.1)

யுனைடட் கிங்டம் அல்லது யுகேவின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றுமொரு கேமென் தீவுகள் அதன் கட்டுப்பாட்டுக்குள் குறிப்பிடத்தக்க நிதி சுதந்திரத்துடன் செயல்படுவதால் அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. கேமென் தீவுகளின் இந்த அயல் நாட்டு வங்கி வர்த்தகம் லத்தின் அமெரிக்க மற்றும் தென் அமெரிக்கப் போதைப் பொருள் வருவாய் மூலம் ஒரு மர்மமாகத் தொடங்கியது.

பின்னர் இந்த வங்கிகள் தங்களை அதுபோன்ற போதை வர்த்தகத்திலிருந்து விலக்கிக் கொண்டனர். சற்று முன்னெறி தற்பொழுது ஒரு சட்டப்பூர்வமான அயல் நாட்டு வங்கி வர்த்தக மையமாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

 

5. அமெரிக்கா

5. அமெரிக்கா

வங்கிப் புள்ளிகள்-0, எஃப்எஸ்ஐ புள்ளிகள்-19, மொத்த புள்ளிகள்-19
(எஃப்எஸ்ஐ புள்ளிகள் விவரம்: எஃப்எஸ்ஐ மதிப்பீடு 5, எஃப்எஸ்ஐ 1254.7)

பனாமா ரகசியக் கசிவில் அமெரிக்கர்கள் பெயர்கள் அவ்வளவாக அடிபடாதது இது போன்ற வர்த்தகத்தில் உள்ள நம்பகத் தன்மையைச் சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. அவர்கள் பொது அரங்கில் அரசியல் காரணங்களுக்காக ரகசிய ஆவணங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் முறைகேடுகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

ஆனால் உண்மை மிகவும் எளிதான விஷயமாக உள்ளது. ஏனென்றால் அமெரிக்கர்கள் தங்கள் பணத்தை ரகசியமாக வைக்கத் தங்களிடத்திலேயே இதுபோன்ற பல வசதிகள் உள்ளதால் பனாமா செல்ல வேண்டியதில்லை.

டெலாவேர் மற்றும் நெவாடா ஆகிய மாகாணங்கள் தங்கள் அன்னிய செலாவணி வருவாயை உறுதி செய்ய வங்கிச் சட்டத்தை எவ்வளவு வளைக்க இயலுமோ அந்த அளவிற்குச் செய்துள்ளன. இதற்கான அடித்தளம் 1921 ஆம் ஆண்டுப் போடப்பட்ட வருவாய்ச் சட்டம் மூலம் அமைந்தது. அதன்படி வெளி நாட்டினர் வைத்துள்ள வங்கி வைப்புகளுக்கு இந்தச் சட்டத்தில் இருந்து விலகு அளிக்கப்பட்டது.

அமெரிக்கர்களுக்கு இது பயனளிக்கப்போவதில்லை என்றாலும், ஒரு முறை பணம் பல்வேறு நிறுவனங்கள் மூலம் செலுத்தப்பட்டுவிட்டால், அதைத் பின்தொடர்ந்து அதன் உரிமையாளரை கண்டறிவது சாத்திமில்லாத ஒன்றாக உள்ளது.

 

4. ஐக்கிய அரபு நாடுகள் (யுஏஈ)

4. ஐக்கிய அரபு நாடுகள் (யுஏஈ)

வங்கிப் புள்ளிகள்-6, எஃப்எஸ்ஐ புள்ளிகள்-14, மொத்த புள்ளிகள்-20
(எஃப்எஸ்ஐ புள்ளிகள் விவரம்: எஃப்எஸ்ஐ மதிப்பீடு 10, எஃப்எஸ்ஐ 440.7)

துபாய் தன்னுடைய அண்டை நாடுகளைப் போல் அல்லாமல் எண்ணை வளங்களில் செழுமையாக இல்லை. அவர்கள் செய்ததெல்லாம் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வங்கிகளில் முதலீடு செய்வதுதான். அதிகம் விமர்சிக்கப்படும் அவர்களின் மிகச் சுலபமான வங்கி விதிமுறைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் மோசமான விதமும் துபாயின் அன்னிய பணத்தைச் சேமிக்கும் சிறந்த மையமாக உருவெடுக்கச் செய்துள்ளது.

இதன் பூகோள அமைப்பும் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையில் வசதியாக அமைந்துள்ளது. துபாயின் தடையற்ற துறைமுகம் 1990இல் தொடங்கப்பட்டு அந்த நாட்டினை ஒரு "கேள்விகள் கேட்கப்படாத" வர்த்தக மையமாக உருவெடுக்கப் பெரிதும் உதவியது. இது மக்கள் தங்கள் சொத்துக்களை மறைத்துவைக்க ஒரு உகந்த இடமாக அதிகம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

 

3. சுவிசர்லாந்து

3. சுவிசர்லாந்து

வங்கிப் புள்ளிகள்-4, எஃப்எஸ்ஐ புள்ளிகள்-21, மொத்த புள்ளிகள்-25
(எஃப்எஸ்ஐ புள்ளிகள் விவரம்: எஃப்எஸ்ஐ மதிப்பீடு 1, எஃப்எஸ்ஐ 1466.1)

சரி நாம் இப்போது முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளோம். நம் பட்டியலில் உள்ள முதல் மூன்று இடங்கள் பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் மற்றும் பிற அழகு வாய்ந்த பகுதிகள் பற்றி எவரும் கேள்விப்படும் முன்னரே கூட உலகின் நிதி மையங்களாகத் தங்களை நிலை நிறுத்திக்கொண்டுள்ள நாடுகளாகும். சுவிசர்லாந்தின் பிரபலமான வங்கித் தொடர்பான ரகசிய சட்டங்கள் அதற்கு மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் முன்னிலை வகிக்க உதவி அன்னிய சேமிப்புகளைப் பெற்றுத் தந்தது.

இந்த ரகசியங்களைக் காப்பதில் அமைதியாக இருக்கச் சுவிசர்லாந்து முனைந்தாலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் அழுத்தம் காரணமாகத் தங்கள் கணக்குகளை வரி அதிகாரிகளுக்குக் காட்ட வேண்டிய நிர்பந்தம் அவர்களின் புகழை அல்லது ஏன் தங்களுடைய வரலாற்றுப் பாரம்பரியமிக்க வரி ஏய்ப்போரின் புகலிடமாக விளங்கும் அந்தஸ்தையும் இதில் அழிக்கக் கூடிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

 

2. ஹாங்காங்

2. ஹாங்காங்

வங்கிப் புள்ளிகள்-6, எஃப்எஸ்ஐ புள்ளிகள்-20, மொத்த புள்ளிகள்-26
(எஃப்எஸ்ஐ புள்ளிகள் விவரம்: எஃப்எஸ்ஐ மதிப்பீடு 2, எஃப்எஸ்ஐ 1259.4)

உலகின் மிகப்பெரும் நிதி மையமான ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு கொஞ்சம் தன் புகழை இழக்கவே செய்தது. இதன் முக்கியச் சாதகமான விஷயம் யுகே வின் கட்டுப்பாட்டில் நிலவிய குழப்பமான ஒரு அரசியல் சூழல் தான்.

அது மறைந்த பிறகு, பன்னாட்டு வங்கிகளுடன் அதற்கிருந்த நம்பிக்கையையும் அது இழந்தது. எனினும் சீன அரசாங்கம் தன்னால் முடிந்த அளவிற்கு அனைத்தையும் செய்து ஹாங்காங்கில் எந்த மாற்றமும் இல்லாமல் இயல்பாக உள்ளது என்பதை உலகிற்குத் தெளிவுபடுத்தியது. சில காலத்திற்காவது அவர்கள் அதனைச் செய்ய முடிந்துள்ளது.

 

1. சிங்கப்பூர்

1. சிங்கப்பூர்

வங்கிப் புள்ளிகள்-9, எஃப்எஸ்ஐ புள்ளிகள்-18, மொத்த புள்ளிகள்-27
(எஃப்எஸ்ஐ புள்ளிகள் விவரம்: எஃப்எஸ்ஐ மதிப்பீடு 4, எஃப்எஸ்ஐ 1147.1)

ஹாங்காங்கின் நீண்டகால எதிரியான சிங்கப்பூர் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்து கொண்டுள்ளது. நம்பகமான வங்கிகள் மற்றும் அதிக எஃப்எஸ்ஐ புள்ளிகள் (ஒட்டுமொத்தமாக 4) போன்றவற்றின் காரணமாக அன்னிய சேமிப்புகளை ஈர்ப்பதில் பத்து நாடுகளில் முதலிடத்தைச் சிங்கப்பூர் தக்கவைத்துள்ளது.

அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் தொடக்கம் தொட்டே சரியான பாதையில் செல்லும் உலகின் ஒரே தீவு நாடு சிங்கப்பூர். தெற்காசிய நாடாக இருந்தாலும் சிங்கப்பூர் அதிக அளவு சீன கணக்குகள் தொடங்கப்படுவதைக் காணமுடிகிறது. இதற்கு அவர்கள் சீன அரசின் பிடியிலிருந்து விலகியிருக்க முயல்வதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In the light of Panama Papers and the subsequent drama that erupted over them, it may be a good time to look for 10 best countries for offshore banking.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X