ஜெராக்ஸ் பிபிஓ நிறுவனத்தின் புதிய சீஇஓ.. அசோக் வெமூரி-யின் புதிய பயணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: கேப்ஜெமினி ஐகேட் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றிய பின் ஐகேட் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய சீஇஓ அசோக் வெமூரி, தற்போது 7 பில்லியன் டாலர் வர்த்தக மதிப்புடைய ஜெராக்ஸ் பிபிஓ நிறுவனத்தின் புதிய சீஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

2016ஆம் ஆண்டின் முடிவிற்குள் ஜெராக்ஸ் நிறுவனம் தனது வர்த்தகத்தை இரண்டாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் பின் இந்நிறுவனத்தின் பிபிஓ வர்த்தகத்திற்குச் சீஇஓ-வாகப் பொறுப்பேற்றக்க உள்ளார். இவர் முன்னாள் இன்போசிஸ் உயர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

அசோக் வெமூரி

அசோக் வெமூரி

ஐரோப்பிய சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் கேப்ஜெமினி தனது ஆசிய மற்றும் அமெரிக்கச் சந்தை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய அசோக் வெமூரி சீஇஓ-வாக இருந்த ஐகேட் நிறுவனத்தைக் கைப்பற்றியது.

இதன் பின் சில நாட்களிலேயே நிறுவனத்தை விட்டு வெளியேறிய அசோக் வெமூரி, ஜூலை 1 ஆம் தேதி ஜெராக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத்தலைவராகப் பணியில் சேர உள்ளார்.

ஜெராக்ஸ்

ஜெராக்ஸ்

சர்வதேச சந்தையில் மிகப்பெரிய வன்பொருள் மென்பொருள் வர்த்தகத்தைச் செய்த வரும் ஜெராக்ஸ், 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது மொத்த வர்த்தகத்தையும் 2ஆகப் பிரிக்க முடிவு செய்துள்ளது.

இதில் வர்த்தகச் சேவைகள் ஒரு நிறுவனமாகவும், வன்பொருள் மற்றும் டாக்குமென்ட் தொழில்நுட்பம் ஒரு நிறுவனமாகவும் பிரிக்கப்பட உள்ளது, இதில் பிரிட்னட் மற்றும் காப்பியர்ஸ் வர்த்தகமும் அடக்கம்.

பிபிஓ
 

பிபிஓ

ஜெராக்ஸ் நிறுவன பிரிவிற்குப் பின், இந்நிறுவனத்தின் புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள பிபிஓ நிறுவனத்திற்கு அசோக் வெமூரி சிஇஓ மற்றும் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.

சம்பளம்

சம்பளம்

இதற்காக அசோக் வெமூரி அடைப்படை சம்பளமாக வருடத்திற்கு 1 மில்லியன் டாலரும், ஊக்கத்தொகை மற்றும் போன்ஸ் தொகையாக வருடத்திற்கு 2.5 மில்லியன் டாலரும் பெற உள்ளார்.

இன்போசிஸ் முதல் ஜெராக்ஸ் வரை..

இன்போசிஸ் முதல் ஜெராக்ஸ் வரை..

இந்திய சந்தையில் மென்பொருள் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் இன்போசிஸ் நிறுவனத்தில் அசோக் வெமூரி 1999 முதல் 2013 வரை பல உயர் பதவிகளில் பணியாற்றினார். இந்நிறுவனத்தில் புதிய சீஇஓ நியமனம் செய்யும் குழப்பத்தில் இன்போசிஸ் வேண்டாம் என வெளியேறி ஐகேட் நிறுவனத்தில் இணைந்தார்.

ஜூலை 2015ஆம் ஆண்டுக் கேப்ஜெமினி ஐகேட் நிறுவனத்தைக் கைப்பற்றியதால் தற்போது இக்கூட்டணி நிறுவனத்தில் இருந்து வெளியேறி ஜெராக்ஸ் நிறுவனத்தில் இணைந்துள்ளார்.

275 பில்லியன் டாலர்

275 பில்லியன் டாலர்

சர்வதேச அளவில் 275 பில்லியன் டாலர் வர்த்தகச் சந்தையான பிபிஓ துறையில் அசோக் வெமூரி தலைமையிலான ஜெராக்ஸ் பிபிஓ நிறுவனம் குதிக்கப்போகிறது.

ஜெராக்ஸ் பிபிஓ

ஜெராக்ஸ் பிபிஓ

ஜெராக்ஸ் நிறுவனத்தில் இருக்கும் 1,43,600 ஊழியர்களில் 72 சதவீதம் பேர் பிபிஓ வர்த்தகத்தைச் சார்ந்தவர்கள், இதில் 15,000 ஊழியர்கள் இந்திய வர்த்தகத்தில் பணியாற்றி வருகின்றனர்.

அசோக் வெமூரியின் தேர்வு, இந்திய சந்தையில் இந்நிறுவனத்தின் வர்த்தகத்தை மேம்படுத்தவே எனக் கருதப்படுகிறது.

ஜெராக்ஸ்

ஜெராக்ஸ்

உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் ஜெராக்ஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 18 பில்லியன் டாலர். இதனையே 2ஆகப் பிரிக்க வேண்டும் என ஜெராக்ஸ் உயர்மட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும் நிறுவனத்தில் 2.4 பில்லியன் டாலர் செலவின குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vemuri to head Xerox's $7bn BPO

Former Igate CEO Ashok Vemuri has been named the CEO of Xerox's $7-billion BPO business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X