ரிசர்வ் வங்கி கவர்னர் சீட்டுக்கு போட்டிப்போடும் 2 பேர் யார்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தனது பதவிக்கால நீட்டிப்புக்கு மறுப்பு தெரிவித்த நிலையில், ராஜனின் பணிக்காலம் வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ளது.

 

இந்நிலையில் ஆர்பிஐ-யின் புதிய கவர்னர் தேர்ந்தெடுக்கும் பணிகள் மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளின் தலைமையில் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மேலும் புதிய கவர்னர் தேர்வு மற்றும் நியமனம் மற்றும் இறுதிக்கட்ட முடிவுகள் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டுத்தொடர் நடைபெறும் முன் எடுக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டுத்தொடர் வருகிற ஜூலை 25ஆம் தேதி நடைபெற உள்ளது. சரி யார் அந்த 2 பேர்..?

துணை கவர்னரா..?

துணை கவர்னரா..?

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர் துணை கவர்னர் பணியில் அனுபவம் கொண்ட நபராகத் தான் இருக்கு வேண்டும். இதுவே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், சரியான தேர்வாக இருக்கும் என வங்கித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்படினா.. ரிசர்வ் வங்கி துணை கவர்கனருக்கு தான் ராஜன் சீட்டா..?

வராக் கடன்

வராக் கடன்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தற்போது மிகப்பெரிய தடையாக இருப்பது இந்திய வங்கிகளில் குவிந்து கிடக்கும் வராக் கடன் தான் என ரகுராம் ராஜன் பல மாதங்களாகக் கூறிவரும் நிலையில், தற்போது தான் மத்திய அரசும், நிதியமைச்சகமும் இதை ஒப்புக்கொண்டுள்ளது.

அடுத்தக் கவர்னர்

அடுத்தக் கவர்னர்

இதனால் இந்திய பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வராக் கடனை குறைக்கச் சரியான தேர்வு பொது வங்கியின் தலைவராகத்தான் இருக்க முடியும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் 4 பேர்
 

போட்டியில் 4 பேர்

சந்தையில் நிலவும் கருத்துகள் மற்றும் கணிப்புகளை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு 4 முக்கியத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இதில் எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல், முன்னாள் ஆர்பிஐ துணை கவர்னர் சுபிர் கோகர்ன் மற்றும் ராகேஷ் மோகன் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளது.

தேர்வுகள்

தேர்வுகள்

வரித்துறை உயர் அதிகாரி பார்த்தசாரதி ஷோம், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் இணைந்து ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரை தேர்ந்தெடுக்கும் பணிகளைச் செய்து வருகின்றனர்.

முன்னிலையில் 2 பேர்..

முன்னிலையில் 2 பேர்..

தற்போதைய நிலையில் ரகுராம் ராஜன் சீட்டுக்கான போட்டியில் ராகேஷ் மோகன் மற்றும் உர்ஜித் பட்டேல் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

யார் இவர்கள்

யார் இவர்கள்

சர்வதே நாணய நிதியத்தின் தற்போதைய இந்திய நிர்வாகத் தலைவர் பதவியில் இருக்கிறார் ராகேஷ் மோகன், ரிசர்வ் வங்கியின் நாணய மறுஆய்வு கொள்கை கூட்டத்தில் 2013ஆம் ஆண்டுச் சுபிர் கோகர்ன் அடுத்தாக உர்ஜித் பட்டேல் இணைந்தார்.

 இறுதி முடிவுகள்

இறுதி முடிவுகள்

மூவர் தலைமையிலான தேர்வுக் குழுவில் இறுதி முடிவுகளுக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இறுதிக்கட்ட முடிவுகள் எடுப்பார்கள்

இவை அனைத்தும் ஜூலை 25ஆம் தேதிக்குள் நடைபெறும் என்பது உறுதி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI may get new governor before start of Parliament's monsoon session

The new RBI governor is likely to be appointed before the next session of Parliament begins, top sources in the finance ministry told HT on the condition of anonymity. The monsoon session is tentatively scheduled for July 25.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X