பிரிட்டன் பிரிவால் சிறந்த முதலீடாக மாறியது 'தங்கம்'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் எனப் பிரிட்டன் மக்கள் தங்களது வாக்குகளை அழுத்தமாகப் பதிவு செய்த நிலையில், தற்போது பிரிட்டன் முழுமையாக ஐரோப்பிய கூட்டணியில் இருந்து பிரிந்து வெளியேற உள்ளது.

 

இப்பிரிவால் ஐரோப்பிய சந்தை மட்டுமல்லாமல் சர்வதேச சந்தைகளும் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. இதனால் பல மாதங்களாகத் தங்கத்தில் முதலீட்டு செய்யாத மக்கள் தற்போது தங்கம் மீது அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர்.

பிரிவும் எதிரொலியும்..

பிரிவும் எதிரொலியும்..

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து பிரிட்டன், ஸ்காட்லாந்து மற்றும் வடஅயர்லாந்து ஆகிய நாடுகளும் வெளியேற வேண்டும் என்ற மக்களின் முடிவை மறுக்க முடியாத நிலையில், பிரட்டன் வெளியேற முடிவு செய்துள்ளது.

இதனால் அமெரிக்க டாவ் ஜோன்ஸ் மற்றும் எஸ்&பி 500 சந்தைகள் 3 சதவீதம் வரை சரிந்தது. இதேபோல் யூரோ பங்குகள் 8 சதவீதம் வரை சரிந்தது. இந்தச் சரிவில் கமாடிட்டி, நாணய சந்தைகளும் விதிவிலக்கு அல்ல.

 

நாணய சந்தை

நாணய சந்தை

பங்குச்சந்தையைப் போலவே நாணய சந்தையும் மிகப்பெரிய சரிவிற்குத் தள்ளப்பட்டது. குறிப்பாக வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியான நாளில் மட்டும் யூரோ நாணயத்தின் மதிப்பு 4.5 சதவீதம் வரை சரிந்தது. இதேபோல் பிரிட்டன் பவுண்ட் 12 சதவீதம் வரை சரிந்தது.

கமாடிட்டி சந்தை
 

கமாடிட்டி சந்தை

காமாட்டி சந்தையில், கச்சா எண்ணெய் 6 சதவீத சரிவு, காப்பர் 4 சதவீத சரிவு சந்தித்தது மொத்த வர்த்தகத்தையும் சீர்குலைத்தது.

ஆனால் தங்கம் மட்டும் 8 சதவீதம் உயர்வைச் சந்தித்துள்ளது. அதேபோல் வெள்ளி 3.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

 

தங்கம்

தங்கம்

பங்குச்சந்தை, நாணய சந்தை அனைத்தும் சரிவை தழுவிய நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி மட்டும் முதலீட்டாளர்களுக்குக் கைகொடுத்தது. சர்வதேச பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்ட தொகை அனைத்தும் சரிவில் இருந்து மீள தங்கம் மற்றும் வெள்ளி மீது செய்யப்பட்டது.

இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை 3 வருட உச்சத்தை அடைந்தது.

 

நாணய கொள்கை

நாணய கொள்கை

மேலும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய முக்கியப் பொருளாதார நாடுகளில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கப்படாத நிலையில், தங்கம் மீதான முதலீடு தொடர்ந்து லாபகரமாகத் திகழ்கிறது.

தங்கம் விலை

தங்கம் விலை

இன்றைய வர்த்தகச் சந்தையில் 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 2655.54 ரூபாயாகவும், 22 கேரட் தங்கத்தின் விலை 2487.80 ரூபாயாகவும் உள்ளது.

அதேபோல் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 32,707.29 ரூபாயாக உள்ளது.

கடந்த 20ஆம் தேதி 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 2876 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After Brexit, gold will be the favoured asset for investors

The much-anticipated UK referendum on staying in the EU has been done with and unexpectedly Britons have decided to leave the EU bloc, against market expectations. In the run-up to the referendum, commodities (except gold) and equities gained momentum on hopes that the ‘Remain’ camp would lead as indicated by polls.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X