ஆகஸ்ட் 9 ரெப்போ விகிதத்தை நிர்ணயம் செய்வது யார்..? ரிசர்வ் வங்கியா..? மத்திய அரசா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் வணிக வங்கிகளுக்கான கடன் விகித்தை (ரெப்போ விகிதம்) நிர்ணயம் செய்யும் ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை மறுஆய்வு கூட்டம் வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யப்போவது யார்..? ரிசர்வ் வங்கியின் ஆளுநரா இல்லை மத்திய அரசு ஆர்பிஐ இணைந்து உருவாக்கப்படும் புதிய அமைப்பா என்பதே தற்போதைய கேள்வி.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இதுநாள் வரை நாணய கொள்கை மறுஆய்வு கூட்டம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. மத்திய அரசுக்கும் தற்போதைய ஆளுநரான ராகுராம் ராஜனுக்கு இடையே ஏற்பட்டுள்ளது கருத்து வேறுப்பாடு காரணமாக மத்திய அரசு புதிய குழுவை அமைக்கத் திட்டமிட்டது.

ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம்

மத்திய அரசு அமைக்க உள்ள இப்புதிய அமைப்பில் 3 ரிசர்வ் வங்கி சார்பாகவும், மூவர் அரசு சார்பாகவும் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இவர்கள் மத்தியிலான ஆலோசனை பெயரிலே ரெப்போ விகிதம், சிஆர்ஆர் விகிதம் ஆகியவை நிர்ணயம் செய்யப்படும்.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

கருத்து வேற்றுப்பாட்டுக்கு காரணமான ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னர் பதிவியில் இருந்து வெளியேறுவதால், இப்புதிய அமைப்பை அமைக்க வேண்டுமா என்ற கேள்வியும் மத்திய அரசு வட்டாரங்களில் எழுகிறது.

புதிய ஆளுநர்

புதிய ஆளுநர்

ஒருபக்கம், 6பேர் கொண்ட குழுவை அமைப்பதில் மத்திய அரசு ஆர்வமாக இருப்பதையும் தெரிவித்துள்ளது, மறுபக்கம் புதிய ஆளுநரை நியமனம் செய்யும் பணிகளையும் தேர்வுகளையும் வரித்துறை உயர் அதிகாரி பார்த்தசாரதி ஷோம், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் யார் நிர்ணயம் செய்வது என்று.

ஆகஸ்ட் 9

ஆகஸ்ட் 9

ரகுராம் ராஜன் வெளியேறியதால் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும் நாணய மறுஆய்வு கொள்கை கூட்டத்தில் கண்டிப்பாக வட்டி விகிதம் குறைக்கப்படும் என்பது 90 சதவீதம் உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமனம் செய்யப்படும் புதிய அதிகாரி அரசுக்குச் சாதகமாகச் செயல்படுவதும் தெளிவாகியுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Unsure if monetary policy panel will set rates in August: Rajan

The process to set up the monetary policy committee is ongoing and it is not clear if it will get to set interest rates at the central bank's next policy review on August 9, Reserve Bank of India Governor Raghuram Rajan.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X