சென்னை நோக்கியா நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களுக்கு வேலை: ஃபாக்ஸ்கான் உறுதி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மின்னணு உபகரணங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வந்த தனது ஆலையில் இருந்து 20,000 பணியாளர்களுக்கும் மேற்பட்டோருக்கு ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் துவங்கியுள்ள ஆலையில் மீண்டும் வேலை அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.

நோக்கியா  பணியாளர்களுக்கு வேலை
 

நோக்கியா பணியாளர்களுக்கு வேலை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையில் பணிபுரிந்த கிட்டதட்ட 3,000 பணியாளர்களுக்கும் வேலை அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.

வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்பு காரணமாக சென்னை நோக்கிய தொழிற்சாலை மூடப்பட்டதை அடுத்து, நோக்கியாவின் முக்கிய சப்ளையரான ஃபாக்ஸ்கான் நிறுவனமும் தனது ஆலையைச் சென்னையில் மூடியது.

சியாவோமி ஸ்மார்ட்ஃபோன்

சியாவோமி ஸ்மார்ட்ஃபோன்

தற்போது ஆந்திரப் பிரதேசம், தடா, ஸ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொடங்கியுள்ள தனது ஆலைக்கு சியாவோமி ஸ்மார்ட்ஃபோன் அசெம்ப்லிங் பணியை மேற்கொண்டு வருகிறது.

பாக்ஸ்கான் உயரதிகாரியின் அறிக்கை

பாக்ஸ்கான் உயரதிகாரியின் அறிக்கை

இதுகுறித்து பாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் உயரதிகாரி கூறுகையில், இந்த நிறுவனம் சென்ற ஆண்டு சென்னையில் மூடியத் தனது இரண்டு ஆலைகளில் பணிபுரிந்த பெரும்பாலான பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி உள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், நோக்கியாவில் இருந்து விருப்ப விடுப்பு கொடுத்து அனுப்பப்பட்ட பெரும்பாலான பணியாளர்களுக்கும் வேலை அளித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்குப் பணி
 

20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்குப் பணி

இது குறித்து அவர் கூறுகையில், தற்போது நூற்றுக்கணக்கானோரை ஸ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கி வரும் ஆலையில் பணியமர்த்தி உள்ளதாகவும், நோக்கியா தொழிற்சாலையில் பணிபுரிந்த 20 முதல் 35 வயதுக்குட்பட்ட பெரும்பாலான பணியார்களைப் பணியில் அமர்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எண்ணிக்கைக்கான மறுப்பு

எண்ணிக்கைக்கான மறுப்பு

ஆனால் எவ்வளவு பணியாளர்களுக்குப் பணி அளிக்கப்பட்டது என்ற எண்ணிக்கையைக் கூற மறுத்துவிட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Foxconn Hires Ex-Staff Of Nokia Chennai Plant For Andhra Pradesh Unit

Foxconn Hires Ex-Staff Of Nokia Chennai Plant For Andhra Pradesh Unit, over 2,000 workers of its two closed plants near here for its assembling unit at Sri City Special Economic Zone in Andhra Pradesh.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X