நாணய பரிமாற்றத்தில் ரூ.900 கோடி மோசடி.. விஜய் மல்லையா மீது புதிய வழக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கிங்பிஷர் ஏர்லையன்ஸ், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனங்களின் முன்னாள் தலைவரான விஜய் மல்லையா, நாணய பரிமாற்றத்தில் செய்த முறைகேட்டின் மூலம் சுமார் 900 கோடி ரூபாய் மோசடி செய்யதுள்ளார் என யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் மல்லையா மீது வழக்குத் தொடுத்துள்ளது.

இவ்வழக்கை ஏற்ற நீதிமன்றம், இதுகுறித்த விசாரணையைத் தற்போது அமலாக்கத் துறையிடம் மாற்றியுள்ளது.

ஏற்கனவே யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக அமலாக்கத் துறை விஜய் மல்லையாவிடம் விசாரணை செய்து வரும் நிலையில், தற்போது இரண்டாவது வழக்கு விசாரணையும் அமலாக்கத் துறை கையில் எடுத்துள்ளது.

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்கிய கடனை திருப்பி அளிக்க முடியாமல், தனக்குக் கடன் அளித்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை ஏமாற்றி லண்டனுக்கு ஓடிப்போய் ஒழிந்துகொண்ட விஜய் மல்லையா தற்போது இணையதளம் மூலம் வங்கிகளுக்குத் தூது அனுப்பி வருகிறார்.

வழக்கு

வழக்கு

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய மதுபான நிறுவனமான டியாஜியோ பிஎல்சி நிறுவனத்தின் இந்திய கிளை, மல்லையா மீது அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசி வருகிறது.

டியாஜியோ பிஎல்சி

டியாஜியோ பிஎல்சி

கடந்த வாரம் டியாஜியோ யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொகையை முறைகேடான முறையில் 1,225.3 கோடி ரூபாய்ப் பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து முறையான விசாரணை செய்ய வழக்குப் பதிவு செய்தது.

12 நிறுவனங்கள்
 

12 நிறுவனங்கள்

டியாஜியோ முதலீடு செய்த தொகையை விஜய் மல்லையா தலைமையிலான அப்போதைய யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் விஜய் மல்லையா தலைமை வகிக்கும் சுமார் 12 நிறுவனங்களுக்கு முறையாகப் பரிமாற்றம் செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்யவே டியாஜியோ தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நாணய பரிமாற்றம்

நாணய பரிமாற்றம்

இந்நிலையில் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் தரப்பில் செய்யப்பட்ட புகாரில், தான் முதலீடு செய்யத் தொகையை, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் 7 கிளை நிறுவனங்களுக்கும், பிரிட்டனில் மல்லையாவிற்குச் சொந்தமாக இருக்கும் 4 நிறுவனங்களுக்கு, பஹாமாவில் இருக்கும் 2 நிறுவனங்களுக்கு, ஐரோப்பாவில் இருக்கும் 1 நிறுவனங்களுக்கு முறைகேடான வகையில் நாணய பரிமாற்றம் செய்துள்ளார் எனக் குற்றம்சாட்டியுள்ளது.

இந்தப் பரிமாற்றம் அனைத்தும் வரிச் சலுகைக்கு உட்படுத்தப்பட்டவை எனக் கருதி மோசடி செய்துள்ளார்.

 

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

இப்படிப் பரிமாற்றம் செய்யப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களில் போர்ஸ் இந்தியா பார்மூலா ஓன், வாட்ச்ன் லிமிடெட், கான்டினென்டல் மேலாண்மை சேவை, மோடால் செக்கூரிட்டி, அல்ட்ரா டைனமிக்ஸ் மற்றும் லோம்பார்ட் வால் கார்பரேட் சேவைகள் ஆகியவை ஆகும்.

ரூ.9,000 கோடி கடன்

ரூ.9,000 கோடி கடன்

கிங்பிஷர் நிறுவனத்தின் பெயரில் விஜய் மல்லையா இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு 9,000 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After IDBI case, Enforcement Directorate probing Rs 900-crore 'forex violations' by Vijay Mallya

The Enforcement Directorate (ED) has started investigating a complaint by United Spirits Ltd (USL) of foreign exchange violations to the tune of Rs 900 crore against former chairman Vijay Mallya.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X