ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் பெயர் இன்று வெளியீடு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தனது 2வது பணிக்கால நீட்டிப்புக்கு மறுப்பு தெரிவித்த நிலையில், புதிய கவர்னர் யார் என்பது குறித்துத் திங்கட்கிழமை (இன்று) துவங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பார் எனத் தெரிகிறது.

 

ஆர்பிஐ

ஆர்பிஐ

ரிசர்வ் வங்கியின் சிறந்த கவர்னர்களின் ஒருவரான ரகுராம் ராஜன் இடத்தை நிரப்ப மத்திய அரசு பல முக்கிய அதிகாரிகளைப் பல்வேறு வகையான தேர்வுர்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்தியது.

இந்நிலையில் இத்தேர்வு பணிகள் முழுமையாக முடிந்த நிலையில் இன்று துவங்கி நாடாளுமன்ற கூட்டத்தில் புதிய கவர்னர் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

சர்ச்சை

சர்ச்சை

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தனது பணி நீட்டிப்பை மறுத்தார். இதனால் மத்திய அரசு புதிய கவர்னரை தேர்ந்தெடுக்கும் பணியை துவங்கியது.

போட்டி
 

போட்டி

புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் தேர்வுக்கான போட்டியில் எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல், முன்னாள் ஆர்பிஐ துணை கவர்னர் சுபிர் கோகர்ன் மற்றும் ராகேஷ் மோகன் ஆகியோர் கடைசிக் கட்டப் போட்டியில் இருந்தனர்.

ராகேஷ் மோகன்

ராகேஷ் மோகன்

சர்வதே நாணய நிதியத்தின் தற்போதைய இந்திய நிர்வாகத் தலைவர் பதவியில் இருக்கிறார் ராகேஷ் மோகன்.

உர்ஜித் பட்டேல்

உர்ஜித் பட்டேல்

ரிசர்வ் வங்கியின் நாணய மறுஆய்வு கொள்கை கூட்டத்தில் 2013ஆம் ஆண்டுச் சுபிர் கோகர்ன் அடுத்தாக உர்ஜித் பட்டேல் இக்குழுவில் இணைந்தார். இதன் மூலம் கடந்த 3 வருடமாக ரகுராம் ராஜன் உடன் இணைந்து நாணய கொள்கை வகுப்பதில் முக்கிய பணிகளில் ஈடுப்பட்டுள்ளார்.

அருந்ததி பட்டாச்சார்யா

அருந்ததி பட்டாச்சார்யா

இந்திய பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வராக் கடனை குறைக்கச் சரியான தேர்வு பொது வங்கியின் தலைவராகத்தான் இருக்க முடியும் என்ற கண்னோட்டத்தில் எஸ்பிஐ வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா அவர்களும் இப்போட்டியில் முக்கிய நபராக இருந்தார்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் இவரது எஸ்பிஐ வங்கித் தலைவர் பணிக்காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இப்போட்டியில் இருந்து வெளியேறினார் என தெரிகிறது.

சுபிர் கோகர்ன்

சுபிர் கோகர்ன்

மேலும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரான சுபிர் கோகர்ன் கடைசி கட்டப் தேர்வு பட்டியலில் இருந்தார்.

ஆக்ஸ்ட் 3

ஆக்ஸ்ட் 3

மத்திய அரசு தற்போது புதிய கவர்னரை தேர்ந்தெடுக்கவில்லை என்றால், ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குள் சிறப்புக் கவர்னர் பதவியில் ஒருவரை நியமிக்க வேண்டும். அதற்குள் புதிய கவர்னர் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது மத்திய அரசு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New RBI head may be named in Parliament

The Centre, which has not yet named the next Reserve Bank of India (RBI) Governor, could make the announcement during the Monsoon Session of Parliament, Monday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X