47% இந்தியர்கள் ஓய்வு காலத்திற்கு சேமிப்பதில்லை: எச்எஸ்பிசி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஓய்வு பெற்ற பிறகும் நிதி பாதுகாப்பு முக முக்கியமானது. அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு ஓய்வு காலத்திற்கு பிறகு அரசாங்கம் ஓய்வூதியம் வழங்கி வருகிறது.

ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் வருமானத்தில் இருந்து அவர்களாகவே எடுத்துச் சேமிக்க வேண்டும் இல்லை என்றால் ஓய்வு காலத்திற்கு பிறகு நிறைய நிதி சிக்கல்களுக்கு உள்ளாவர்.

47 சதவீத இந்தியர்கள் சேமிப்பதில்லை

47 சதவீத இந்தியர்கள் சேமிப்பதில்லை

எச்எஸ்பிசி நடத்திய ஆய்வில் வேலைக்குச் செல்லும் 47 சதவீத இந்தியர்கள் ஓய்வு காலத்திற்கு சேமிப்பதில்லை. அதுமட்டும் இல்லாமல் இது பற்றிய ஆலோசனைகளும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்று தெரிவித்துள்ளது.

18,207 நபர்கள் பங்கேற்ற ஆய்வு

18,207 நபர்கள் பங்கேற்ற ஆய்வு

அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மெக்ஸிக்கோ, சிங்கப்பூர், தைவான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐக்கிய ராஜ்யம் மற்றும் அமெரிக்கா என 17 நாடுகளில் இருந்து 18,207 நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிரமங்களால் தொடரதவர்கள்

சிரமங்களால் தொடரதவர்கள்

இந்த அறிக்கையின் படி 44 சதவீத இந்தியர்கள் ஓய்வூதியத்திற்கான சேமிப்புத் திட்டங்களைத் தொடங்கி இருந்தாலும் சில சிரமங்களால் அதனைத் தொடர்வதில்லை.

சேமிப்புத் திட்டத்தை தொடங்காதவர்கள்

சேமிப்புத் திட்டத்தை தொடங்காதவர்கள்

மேலும் 21 சதவீத வேலை பார்க்கும் மக்கள் இன்னும் சேமிப்புத் திட்டத்தை தொடங்கவில்லை, 22 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்துவிட்டனர். 14% சதவீத பேர் 50 வயதைக் கடந்தும் இன்னும் ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தை தொடங்க வில்லை.

ஆலோசனைகள் கிடைப்பதில்லை

ஆலோசனைகள் கிடைப்பதில்லை

பத்து பேரில் ஒருவருக்கு ஓய்வூதியம் பற்றி ஆலோசனைகளும், தகவல்களும் கிடைப்பதில்லை என்பதும் வெளிவந்துள்ளது.

நண்பர்கள் மற்றும் குடும்ப ஆலோசகர்கள்

நண்பர்கள் மற்றும் குடும்ப ஆலோசகர்கள்

ஆச்சர்யமாக, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆலோசகர்களாக இருக்கின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஓய்வு பெற இருக்கும் 80 சதவீத நபர்களுக்கும், 82 சதவீத ஓய்வு பெற்றவர்களுக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்திலிருந்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

 

மூன்றாம் நபரிடம் இருந்து ஆலோசனைப் பெறுபவர்கள்

மூன்றாம் நபரிடம் இருந்து ஆலோசனைப் பெறுபவர்கள்

மற்றொரு பக்கம் நிதி ஆலோசகர்கள், அரசு ஏஜன்சிகள், காப்பீட்டுத் தரகர்கள், வங்கி ஆலோசகர்கள், உள்ளிட்டவர்களிடம் இருந்து ஓய்வு பெற இருக்கும் 40 சதவீத நபர்களுக்கும், 53 சதவீத ஓய்வு பெற்றவர்களுக்கும் ஆலோசனைகள் கிடைக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

47% of Indians not saving for retirement: HSBC Survey

47% of Indians not saving for retirement: HSBC Survey
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X