ஸ்மார்ட் நகரங்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும்..? அதில் உள்ள சவால்கள் என்னென்ன..?

By Srinivasan P M
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்மார்ட் நகரங்கள் தொடர்பான இந்திய அரசின் கொள்கைப் படி தற்போதுள்ள நூறு நகரங்களின் செயல்பாடு மற்றும் அடிப்படைக்கட்டமைப்புகளில் சில மிக முக்கிய மாற்றங்களை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு முகமைகள் இந்தத் திட்டத்தை வெற்றியடையச் செய்ய தங்களால் இயன்ற அளவிற்கு சிறந்த முயற்சிகளை செய்துகொண்டிருந்தாலும், இதற்கான சரியான தீர்வு என்னவாக இருக்கும் என நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.

 

உலகின் வெற்றிகரமான ஸ்மார்ட் நகரங்கள் ஐந்து மிக முக்கிய இலக்குகளை அடைந்துள்ளன.

வாழ்க்கை எளிது

வாழ்க்கை எளிது

ஸ்மார்ட் நகரங்கள், மிக அடிப்படையான கட்டமைப்புகளில் மிக்ச சிறந்த சேவையை தங்களுடைய குடிமக்களுக்காக எளிதில் கிடைக்க்க் கூடிய வகையில் தரவேண்டும்.

சம உரிமை

சம உரிமை

ஒரு வெற்றிகரமான ஸ்மார்ட் நகரம் எந்த ஒரு சேவையையும் அனைவருக்கும் பொதுவாகவும் சம்மாகவும் கிடைக்கச் செய்யவேண்டும்.

இயல்பாக இருத்தல்

இயல்பாக இருத்தல்

ஸ்மார்ட் நகரங்கள் நவீனத்தோடு பயணித்தாலும் அதன் உண்மையான அடைப்படை இயல்புகளை பேணிக் காக்கவேண்டும்.

தயார் நிலை
 

தயார் நிலை

ஒரு ஸ்மார்ட் நகரத்தின் கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் சமுதாயக் கட்டமைப்பு ஆகியவை எந்த ஒரு இயற்கை சூழலையும் அவசர நிலையையும் கையாளத் தயாரான நிலையில் இருக்கவேண்டும்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஒரு ஸ்மார்ட் நகரம் தன் குடிமக்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும். நாம் இருக்கவேண்டிய இடமாக இல்லாமல் நாம் விரும்பிய இடமாக அது இருக்க வேண்டும்.

மேற்சொன்ன ஐந்து முக்கிய அம்சங்கள் இல்லாமல், ஸ்மார்ட் நகரங்களை மற்ற நகரங்களிலிருந்து தனித்துக் காட்டும் மூன்று மிக முக்கிய தூண்களை இப்போது பார்க்கலாம்.

 

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ஒரு ஸ்மார்ட் நகரம் திறனை மேம்படுத்தவும், சிக்கல்களை சமாளிக்கவும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் ஒருங்கிணைந்த தகவல் மற்றும் தொடர்புத் தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கும். இதன் மூலம் நகரின் செயல்பாட்டின் வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது சாத்தியமாகும்.

ஸ்மார்ட்போன்கள் பரவலாக்கம், தொலை உணர்வு தொழில் நுட்பம் (ஜிபிஎஸ்), தொலைக் கணிணித் தொடர்பு (டெலிமேடிக்ஸ்) மற்றும் விரைவு அலைக்கற்றை கட்டமைப்புகள் ஆகியவை ஸ்மார்ட் நகரத் திட்டங்களுக்குத் தேவையான தொழில் நுட்பங்கள் ஆகும். இந்த்த் தொழில் நுட்பங்கள் குடிமக்கள், தொழில்கள் மற்றும் அரசாங்கத்தை தொடர்பில் இணைக்க வேண்டியது அவசியம்.

 

போக்குவரத்து

போக்குவரத்து

எந்த ஒரு நகர வடிவமைப்பிலும் போக்குவரத்து ஒரு முக்கிய பங்காற்றுகிறது. ஒரு ஸ்மார்ட் நகர போக்குவரத்தின் முக்கிய குறிக்கோள் தன் மக்கள் தன்னுடைய சொந்த வண்டிகளை விடுத்து நன்கு வடிவமைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வழிவகை செய்வதாக இருக்கவேண்டும்.

நாமறிந்தது போல் உபர் மற்றும் ஓலா டாக்ஸி சேவைகள் நன்கு பிரபலமடைந்துள்ளன அதாவது இந்திய மக்கள் தங்களுடைய தினசரி போக்குவரத்துப் பயன்பாட்டில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதோடு மாற்றங்களை வரவேற்கவும் தயாராக இருக்கிறார்கள்.

 

இன்டெர்நெட்

இன்டெர்நெட்

இன்டெர்நெட் இணைப்பு ஸ்மார்ட் நகரங்களில் ஒரு மிகத் திறமையான பங்களிப்பைத் தருகிறது. வரும் வருடங்களில், பல்வேறு தொழிற் துறை மாற்றங்களுக்கு வித்திடும் அறிகுறிகளை தற்போதே காணமுடிகிறது என்பதால் இது ஒரு முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம். இதன் செயல்திறனும் இயல்பும் மிகச்சிறந்த்தாக இருப்பதால் தனி நபர்களுக்கும்,தொழிற்துறைக்கும் மற்றும் சமுதாயத்திற்கும் தினசரி நடவடிக்கைகளில் பெருமளவு உதவியாக இருக்கும்.

சவால்கள்

சவால்கள்

மற்ற கட்டமைப்புப் பெருந்திட்டங்களைப் போன்று, ஸ்மார்ட் நகர திட்டத்தை செயல்படுத்துவதிலும் பல சவால்கள் உள்ளன.

இந்த சிக்கல்கள் பல வேளைகளில் மிகவும் கடுமையாக மாறி விடவாய்ப்புகள் அதிகம் உள்ளதால் ஒரு அரசு எவ்வாறு அதனை பல்வேறு முகமைகள் மூலம் எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பொறுத்து அதன் வெற்றி அமைகிறது.

 

முக்கிய சவால்கள்

முக்கிய சவால்கள்

ஸ்மார்ட் நகரங்களை நிர்மானிப்பதில் உள்ள சில முக்கிய சவால்கள் பின்வருமாறு:

1. ஒப்பந்த செயல்பாடு
2. சுற்றுப் புற சூழல் அனுமதி
3. நிலம் கையகப் படுத்துதல் மற்றும்
4. அனுமதி மற்றும் கொள்முதல் பணிகள்

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How To Build Smart Cities Successfully?

The government’s Smart Cities Mission, under which it plans to significantly modify the basic infrastructure of 100 cities, is expected to change the way cities operate today. While government agencies are making their best efforts to make the mission a success, what could be the key to achieve this task?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X