ஏலத்திற்கு வந்தது 'விஜய் மல்லையா' சொத்துக்கள்.. கடைசியில் இதுதான் மிச்சம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவன பெயரில் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை முறையாகத் திருப்பி அளிக்காமல் நடுராத்திரியில் நாட்டை விட்டு ஓடிப்போன விஜய் மல்லையாவின் 700 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வங்கி மற்றும் நிதித்துறையினர் ஏலம் விட முடிவு செய்துள்ளனர்.

 

இது இரண்டாவது முயற்சி...

ஏலம்

ஏலம்

விஜய் மல்லையாவிற்குச் சொந்தமான கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் சேவைகள் பல்வேறு காரணங்களுக்காக 2012ஆம் ஆண்டு முழுமையாக முடங்கிப்போனது. இதனால் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இந்நிறுவன பெயரில் வழங்கி 9000 கோடி கடனை வசூல் செய்யத் துவங்கிய நிலையில் நடுராத்திரியில் யாருக்கும் தெரியாமல் லண்டனுக்கு ஒடிப்போய்விட்டார்.

2வது முயற்சி

2வது முயற்சி

தற்போது வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடனை வசூல் செய்யும் ஒரு முயற்சியாக மல்லையாவிற்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஒரு முறை விற்பனை செய்ய முயற்சி செய்து கைவிடப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவதாக முயற்சி செய்யப்படுகிறது.

கிங்பிஷர் ஹவுஸ்
 

கிங்பிஷர் ஹவுஸ்

வருமான வரி துறையினர், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்து ஏலம் விடபோகும் சொத்துக்களில் மிக முக்கியமானவை மும்பை விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் கிங்பிஷர் ஹவுஸ் தான்.

17,000 சதுரடி பரப்பளவு கொண்ட இந்தக் கட்டிடம் 150 கோடிக்குக் கூட யாரும் வாங்க முன் வரவில்லை. இதனால் தற்போது இதன் மதிப்பை 135 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

இக்கட்டிடம் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் வர்த்தகத்தில் தலைமையகமாக இருந்தது.

 கார் மற்றும் பர்னீசர்கள்

கார் மற்றும் பர்னீசர்கள்

கிங்பிஷர் ஹவுஸ் மட்டும் அல்லாது இக்கட்டிடத்தில் இருக்கும் பர்னீசர்கள் மற்றும் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கார்கள் என அனைத்தையும் ஏலம் விடப்பட உள்ளன. இத விடப் பெரிய காமெடி இருக்கும் தொடர்ந்து படிங்க.

இக்கார்களின் விலை 90,000 ரூபாயில் இருந்து 2.50 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிரைவேட் ஜெட்

பிரைவேட் ஜெட்

வருமான வரி துறையினர் கைப்பற்றிய விஜய் மல்லையாவிற்குச் சொந்தமான ஆடம்பர பிரைவேட் ஜெட் ஆகஸ்ட் மாதத்தில் ஏலம் விடப்பட உள்ளது.

இதனுள் இருக்கும் குஷன் இருக்கைகள் மட்டும் அல்லாமல் பார்ரோப் எனப்படும் குளியலுக்கு முன்னும் பின்னும் அணியப்படும் ஆடைகளையும் ஏலம் விட முடிவு செய்துள்ளது. இதைக் கூட விடவில்லை.

கண்ணில் பட்டதை அனைத்தையும் ஏலம் விடுகிறது வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்.

கோவா வில்லா

கோவா வில்லா

விஜய் மல்லையா ஆடம்பர பார்டி வைக்கும் கோவில் மிகவும் பிரபலமாக இருக்கும் கிங்பிஷர் வில்லாவும் இந்த ஏலத்தில் இணைந்துள்ளது.

எஸ்பிஐ

எஸ்பிஐ

தற்போது இது எஸ்பிஐ தலைமையிலான வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் உள்ளது.

பிராண்டு விற்பனை

பிராண்டு விற்பனை

அதேபோல் 'Fly with Good Times' என்ற வாசகத்துடன் இந்தியாவில் பிரபலமாக இருந்த கிங்பிஷர் பிராண்டும் ஏலம் விடப் போகிறது வங்கி மற்றும் வரித்துறையினர்.

9,000 கோடி கடன்

9,000 கோடி கடன்

மல்லையா வங்கிய 9,000 கோடி கடனில் வெறும் 700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மட்டுமே தற்போது ஏலம் விடப்பட உள்ளது. இதனால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை.

புதிய பிரச்சனை

புதிய பிரச்சனை

700 கோடி ரூபாய் மதிப்பீடு எல்லாம் அரசு தரப்புடையது என்றாலும் சந்தையில் இதன் மதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் இந்த ஏலத்தில் 700 கோடி ரூபாய் வருமா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

மல்லையா

மல்லையா

ஆனால் மல்லையா இன்னமும் இணைய வாயிலாகவும், தனது நிறுவனத்தின் சார்பாகவும் தொடர்ந்து வங்கி அமைப்புடன் தனது கடன தொகையைத் திருப்பிச் செலுத்தும் முறையை மற்றும் சலுகை பற்றி அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் இதில் எவ்விதமான முன்னேற்றமும் காணமுடிவில்லை என்பதால், வந்த வரைக்கும் லாபம் என்ற நோக்கில் வங்கிகள் மல்லையா சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்துள்ளது.

புதிய வழக்கில் மல்லையா

புதிய வழக்கில் மல்லையா

கிங்பிஷர் ஏர்லையன்ஸ், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனங்களின் முன்னாள் தலைவரான விஜய் மல்லையா, நாணய பரிமாற்றத்தில் செய்த முறைகேட்டின் மூலம் சுமார் 900 கோடி ரூபாய் மோசடி செய்யதுள்ளார் என யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் மல்லையா மீது வழக்குத் தொடுத்துள்ளது.

இவ்வழக்கை ஏற்ற நீதிமன்றம், இதுகுறித்த விசாரணையைத் தற்போது அமலாக்கத் துறையிடம் மாற்றியுள்ளது.

இரண்டாவது வழக்கு

இரண்டாவது வழக்கு

ஏற்கனவே யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக அமலாக்கத் துறை விஜய் மல்லையாவிடம் விசாரணை செய்து வரும் நிலையில், தற்போது இரண்டாவது வழக்கு விசாரணையும் அமலாக்கத் துறை கையில் எடுத்துள்ளது.

சொகுசு பங்களா

சொகுசு பங்களா

முகேஷ் அம்பானிக்கு போட்டியாக நிற்கும் ஷாருக்கானின் சொகுசு பங்களா..!

இலவசமாக வருமான வரி தாக்கல் செய்ய ஒன் ஸ்டாப் சொல்யூஷன்

இலவசமாக வருமான வரி தாக்கல்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vijay Mallya's assets to go under hammer for Rs 700 cr

As the lenders and tax authorities cool their heels for Vijay Mallya to return to India, they will put under hammer next month assets worth over Rs 700 crore of the embattled businessman’s long-defunct Kingfisher Airlines.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X