பிரதமர் அலுவலகத்தில் இவருக்குத் தான் அதிக சம்பளம்.. யார் இவர்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்தியாவில் விடை தெரியாத பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கிறது.

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு மட்டும் மாதம் 2.01 லட்ச ரூபாய் சம்பளம் அளிக்கப்படுவது தற்போது தெரியவந்துள்ளது. யார் இவர்...?

ஐஏஎஸ் அதிகாரி

ஐஏஎஸ் அதிகாரி

பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தில் பணியாற்றும் உயர் ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான பாஸ்கர் குள்பே அவர்களுக்கு அதிகப்படியான சம்பளம் வழங்கப்படுவதாகத் தகவல் அறியும் சட்டம் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

யார் இவர்..?

யார் இவர்..?

மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பாஸ்கர் குள்பே, நரேந்திர மோடியின் செயலாளர் ஆவார். ஜூன் 1, 2016ஆம் தேதி பிரதமர் அலுவலக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள படி பாஸ்கர் குள்பே-விற்கு மாதம் 2.01 லட்சம் ரூபாய்ச் சம்பளமாகும்.

இவரைத் தொடர்ந்து இன்னும் சில அதிகாரிகள் அதிகளவிலான சம்பளத்தைப் பெறுகின்றனர்.

 

மாதம் 1,62,500 ரூபாய் சம்பளம்

மாதம் 1,62,500 ரூபாய் சம்பளம்

பாஸ்கர் குள்பே-வை தொடர்ந்து பிரதமர் தலைமை செயலாளர் நிர்பென்திரா மிஷ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மற்றும் இணை தலைமை செயலாளர் பி.கே.மிஷ்ரா ஆகியோருக்கு மாதம் 1,62,500 ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது.

இவர்கள் நான்கு பேரும் ஒய்வு பெற்ற அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

6 இணை செயலாளர்கள்

6 இணை செயலாளர்கள்

அதேபோல் பிரதமர் அலுவலகத்தின் 6 இணை செயலாளர்களான தருண் பஜாஜ், வினை மோகன் கவ்த்ர, டி.வி.சோமநாதன், ஏ.கே.ஷர்மா, அனுரங் ஜெயின் மற்றும் தீபாஸ்ரீ முகர்ஜி ஆகியோருக்கும் 1.55 லட்சம் முதல் 1.77 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளம் பெறுகின்றனர்.

தனியார் செயலாளர்

தனியார் செயலாளர்

பிரதமரின் தனியார் பிரிவு செயலாளரான ராஜீவ் டோப்னோ மற்றும் சஞ்சீவ் குமார் சிங்களா ஆகியோருக்கும் 1.46 லட்சம் ரூபாய், 1.38 லட்சம் ரூபாய் எனத் தத்தம் சம்பளம் பெறுகின்றனர்.

மக்கள் தொடர்பு அலுவலர்

மக்கள் தொடர்பு அலுவலர்

தகவல் பரிவு அதிகாரியான ஷரத் சந்தர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜே.எம்.தாக்கர் ஆகியோருக்கும் 1.26 லட்சம் ரூபாய் மற்றும் 99,000 ரூபாய் சம்பளம் பெற்றுகின்றனர்.

வாஜ்பாய் முதல் மன்மோகன் சிங் வரை

வாஜ்பாய் முதல் மன்மோகன் சிங் வரை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-யின் செயலாளர் என்.சி.ஜிங்தா-விற்கு 1.42 லட்சம் சம்பளமாக இருந்தது, அதேபோல் மன்மோகன் சிங் செயலாளர் ஜி.முரளீதர் பிள்ளைக்கும் 1 லட்சம் ரூபாய் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்டத்து குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PMO makes staff salary public; IAS officer Khulbe highest paid

The monthly salary of all officers working in the Prime Minister’s Office (PMO) has been made public as part of suo motu disclosure under the RTI Act with senior IAS officer Bhaskar Khulbe the highest paid at Rs. 2.01 lakh.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X