ஆர்பிஐ-இன் 24-வது கவர்னராக பொறுப்பேற்கும் ‘உர்ஜித் படேல்’ பற்றித் தெரியுமா உங்களுக்கு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தற்போதைய ஆர்பிஐ கவர்னரான ரகுராம் ராஜனின் பதவி காலம் வரும் செப்டம்பர் மாதம் 4-ம் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து யார் அடுத்த ஆர்பிஐ கவர்னர், ரகுராம் ராஜன் பொருளாதார நிபுணரே அல்ல என்றெலாம் பல சர்ச்சைகள் உருவாகின.

 

இதனை அடுத்து ஆர்பிஐ கவர்னராக யாரை நியமிப்பது என்பதற்குப் பல பெயர்கள் கூறப்பட்டு வந்தன.

இந்நிலையில் அமைச்சரவை நியமனங்கள் கமிட்டி தலைமையில் நிதித்துறை ஒழுங்குமுறை நியமனங்கள் தேடுதல் குழு பரிந்துரையின் படி உர்ஜித் படேல் அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னராக தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

பிரதமர் மோடியுடன் ஆலோசனை

பிரதமர் மோடியுடன் ஆலோசனை

செப்டம்பர் 4-ம் தேதியுடன் காலியாக போகும் ஆர்பிஐ வங்கியின் புதிய கவர்னர் இருக்கையில் அமரப்போவது யார் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை அன்று பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் கலந்தாலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கலை பட்டம்

இலங்கலை பட்டம்

1963, அக்டோபர் 28 ஆம் தேதி பிறந்த உர்ஜித் படேல் லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் கல்லூரியில் பிஏ பட்டம் பெற்றார்.

பிஎச்டி

பிஎச்டி

அமெரிக்காவில் உள்ள யெல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார முனைவர் பட்டம் பெற்றார்.

சர்வதேச நாணய நிதியம்
 

சர்வதேச நாணய நிதியம்

அமெரிக்காவில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியா, பஹாமாஸ் மற்றும் மியான்மார் நாடுகளுக்கான மேசைகளில் 1990 முதல் 1995 வரை பணிபுரிந்தார்.

ஆர்பிஐ

ஆர்பிஐ

1996 மற்றும் 1997 ஆண்டுகளில் கடன் சந்தை, வங்கித் துறை சீர்திருத்தங்கள், ஓய்வூதிய நிதி சீர்திருத்தங்கள், உண்மையான மாற்று விகித இலக்கு மற்றும் அந்நியச் செலாவணி சந்தையின் பரிணாம வளர்ச்சி போன்றவற்றில் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ஆர்பிஐ வங்கிக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

1998 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நிதியமைச்சகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான துறைகளில் ஆலோசகராக இருந்தார்.

மத்திய, மாநில அரசுகள் குழுக்கள்

மத்திய, மாநில அரசுகள் குழுக்கள்

2000 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் பல உயர் மட்ட மத்திய, மாநில அரசுகள் குழுக்களில் நேரடி வரி பணிப்பிரிவு, நிதி அமைச்சகம், மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றில் நெருக்கமாகப் பணிபுரிந்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம்

ரிலையன்ஸ் நிறுவனம்

1997 முதல் 2006 வரை ரிலையன்ஸ் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டுத் தலைவராக பணியாற்றினார்.

பாஸ்டன் கன்சல்டிங் குரூப்

பாஸ்டன் கன்சல்டிங் குரூப்

2013-ம் ஆண்டு ஆரிபிஐ வங்கியில் துணை கவர்னராக பொறுப்பேற்கும் முன்பு பாஸ்டன் கன்சல்டிங் குரூப்பில் ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு துறையில் ஆலோசகராகவும் இருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Urjit Patel appointed RBI Governor - Bried outline about his career.

Urjit Patel appointed RBI Governor - Bried outline about his career.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X