'பணிநீக்கம்' மூலம் நானும் பாதிக்கப்பட்டேன்.. 'பிளிப்கார்ட்' நிறுன முன்னாள் சீஇஓ கதறல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், அமேசான் வருகையால் கடந்த 18 மாதங்களில் மிகப்பெரிய அளவிலான நெருக்கடியைச் சந்தித்தது வருகிறது.

 

இத்தகைய நெருக்கடியால் பிளிப்கார்ட், தனது நிறுவனத்தில் ஊழியர்கள் பணிநீக்கம், உயர் அதிகாரிகள் வெளியேற்றம், மதிப்பீடு சரிவு எனப் பல பிரச்சனைகளைச் சந்தித்து வந்தாலும் தொடர்ந்து தான வளர்ச்சி அடைந்து வருவதாகவே சந்தையில் ஒரு பிம்பத்தைக் காட்டி வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 200 ஊழியர்கள் மத்தியில் நடத்திய மிகப்பெரிய கூடத்தில் இந்நிறுவனத்தின் முன்னாள் சீஇஓ சச்சின் பன்சால் மிகப்பெரிய உண்மையை உடைத்தார்.

பணிநீக்கம்

பணிநீக்கம்

அமேசான் தாக்கத்தின் மூலம் சந்தையில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைச் சந்தித்த பிளிப்கார்ட் நிறுவனத்தில் சாதாரண ஊழியர்கள் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

இதில் நானும் பாதிக்கப்பட்டேன். என்று பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் சீஇஓ சச்சின் பன்சால் கூறினார்.

 

8வருடங்கள்

8வருடங்கள்

பிளிப்கார்ட் நிறுவனத்தைத் துவங்கிய 8 வருடங்கள் தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த சச்சின் பன்சால், வர்த்தக இலக்கை எட்டமுடியாத காரணத்திற்காக முதலீட்டாளர்கள் அவரைச் சீஇஓ பதவியில் இருந்து நிர்வாகத் தலைவர் என்ற பதவிக்குத் தள்ளிவிட்டனர்.

இதனால் பிளிப்கார்ட் நிறுவனத்தின் துணை நிறுவனரான பின்னி பன்சால் புதிய சீஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.

 

சச்சின் பன்சால்
 

சச்சின் பன்சால்

2015ஆம் நிதியாண்டு பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு மிகவும் மோசமாக இருந்த நிலையில் முதலீட்டாளர்களின் வர்த்தக இலக்கை அடைய முடியாமல் அதிகளவிலான நஷ்டத்திற்கு நிறுவனம் தள்ளப்பட்டது.

இதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் நெருக்கடியின் காரணமாகச் சீஇஓ பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்று பிளிப்கார்ட் நிறுவனத்தின் முக்கிய 200 ஊழியர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில் சச்சின் பன்சால் கூறினார்.

 

வெளிப்படை

வெளிப்படை

இன்றைய வர்த்தகச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் தோல்வியைத் தனது ஊழியர்கள் முன்னிலையில் ஒப்புக்கொள்வது மிகப்பெரிய விஷயம். இத்தகையை வெளிப்படைத் தன்மை இந்தியாவில் அனைத்து நிறுவனங்களிலும் நிர்வாக மட்டங்களிலும் இருந்தால் நிறுவனங்கள் நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும்.

மேலும் பிளிப்கார்ட் நிறுவனம் தனது தோல்வியை முதல் முறையாக ஒப்புக்கொண்டதும் இது தான்.

 

 

பின்னி பன்சால்

பின்னி பன்சால்

சச்சின் பன்சால் வெளியேற்றத்திற்குப் பிறகு மிகப்பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைப் பிளிப்கார்ட் நிறுவனத்தில் நியமினம் செய்யப்பட்டது.

ஆனால் ஸ்டார்ட்அப் சந்தையின் வீழ்ச்சி பாதையில் பிளிப்கார்ட் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதன் எதிரொலியாகப் பல உயர் அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.

இதன் பின் கடந்த ஜனவரி மாதம் பின்னி பன்சால் தலைமையிலான புதிய நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுப் பிளிப்கார்ட் நிறுவனம் இந்திய சந்தையில் அமேசானுடன் போட்டி போட்டு வருகிறது.

 

6 மாத மாற்றம்

6 மாத மாற்றம்

நீங்களே பாருங்கள் கடந்த 8 மாதத்தில் நிறுவனத்தில் எவ்வளவும் மாற்றும் என்று. அனைத்து மட்டத்திலுமே செயல்திறன் அடிப்படையில் தான் நிர்வாகம் செயல்படுகிறது எனச் சச்சின் பன்சால் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

At townhall, Sachin Bansal concedes that Flipkart missed targets

Bansal also said that he stepped down as CEO as a result of the e-commerce major's weak performance under him
Story first published: Monday, August 22, 2016, 18:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X