31 நிறுவனங்களுக்கு 'தடை'.. ஐஐடி நிர்வாகம் அதிரடி: 2016 கேம்பஸ் இண்டர்வியூவ்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் சேர்வது எவ்வளவு கடினமோ, அதைவிடக் கடினம் இந்தக் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்களை நிறுவனத்தில் அமர்த்துவது.

 

அப்படி எந்தக் கல்லூரி..? என நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது. ஐஐடி கல்லூரிகள், இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச நாடுகளின் தலைசிறந்த 100 கல்லூரிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இத்தகைய ஐஐடி கல்லூரிகளின் கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்ட மாணவர்கள் சிலருக்கு நிறுவனங்கள் வேலைவாய்ப்பைத் திரும்பப்பெற்றது, நிறுவனத்தில் சேரும் நாளை தள்ளிவைத்தது. இதனால் கடுப்பான ஐஐடி நிர்வாகம் சுமார் 31 நிறுவனங்களைத் தடை செய்துள்ளது.

2016 கேம்பஸ் இண்டர்வியூவ்

2016 கேம்பஸ் இண்டர்வியூவ்

நடப்பு நிதியாண்டில் ஐஐடி கல்லூரிகளில் நடக்க இருக்கும் கேம்பஸ் இண்டர்வியூவில் பங்குபெற கோபர்ஸ், ப்ரோடியா மெடிக்கல் உட்பர சுமார் 31 நிறுவனங்களுக்கு ஐஐடி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தடை செய்யப்பட்டுள்ள நிறுவன பட்டியலில் அதிகளவில் இடம்பெற்றுள்ளவை ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சோமேட்டோ முதல் பிளிப்கார்ட் வரை

சோமேட்டோ முதல் பிளிப்கார்ட் வரை

ஏற்கனவே தடையில் உணவு ஸ்டார்ட் அப் நிறுவனமான சோமேட்டோ-வின் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

அதேபோல் கடந்த வருடம் பிளிப்கார்ட் அளித்த வேலைவாய்ப்புகளின் நிறுவனத்தில் சேரும் நாளை தள்ளவைத்தது, இதனால் ஐஐடி நிர்வாகமும், பிளிப்கார்ட் நிறுவனமும் மிகப்பெரிய பிரச்சனையைச் சந்தித்தது. ஆனால் தடை செய்யப்பட்ட நிறுவன பட்டியலில் பிளிப்கார்ட் இல்லை.

 

ஏன் இந்த நிலை
 

ஏன் இந்த நிலை

ஐஐடி கேம்பஸ் இண்டர்வியூவ் விதிமுறைகள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்புக்குப் பாதகமாகச் செயல்படும் நிறுவனங்களையே ஐஐடி நிர்வாகம் தடை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதிலும் எப்போது இல்லாத வகையில் இந்த அதிகளவிலான நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

 

ஸ்டார்ட்-அப்

ஸ்டார்ட்-அப்

இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் அதீத வீழ்ச்சியால் நிறுவனங்கள் தொடர்ந்த வர்த்தகச் சரிவை சந்தித்து வருகிறது. இதன் எதிரொலியாகவே ஐஐடி கேம்பஸ் இண்டர்வியூவ் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கா முடியாமல் போகிறது.

தடை செய்யப்பட்ட 31 நிறுவங்களில் அதிகமானவை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அதில் பெரும்பாலானவை ஐஐடி மாணவர்களால் உருவாக்கப்பட்டவை.

 

 மீண்டும் பரிசீலனை

மீண்டும் பரிசீலனை

ஆனால் ஐஐடி நிர்வாகம் இந்தப் பட்டியலை மீண்டும் பரிசீலனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. விரைவில் புதிய பட்டியல் கொண்ட நிறுவனங்கள் வெளிவரும்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

நம்ம ஊரில் நிலைமையே வேறு. இங்குப் பல கல்லூரிகள் கேம்பஸ் இண்டர்வியூவ் நடத்த கூடத் தகுதி இல்லாமல் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IIT placement ban on 31 firms that went back on job offers

Healthcare startup Portea Medical and on-demand delivery service Grofers are among 31 companies blacklisted by the Indian Institutes of Technology (IITs) and barred from taking part in the placement process this year for revoking offer letters or delaying joining dates.
Story first published: Friday, August 26, 2016, 13:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X