ஆடை தயாரிப்பில் களமிறங்கும் பாபா ராம்தேவ்.. கூட்டணி வைக்கத் துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய நுகர்வோர் சந்தையில் ஒட்டுமொத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒரே எதிரியாக வளர்ந்திருக்கிறது பதஞ்சலி நிறுவனம். இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் அதன் ஆதிக்கத்தைக் குறைக்கவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கு அதிகச் சலுகை, தள்ளுபடி, கவர்ச்சிகரமான ஆஃபர்கள் என வாரி வழங்கினாலும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

 

அந்த அளவிற்குப் பதஞ்சலி நிறுவனம் இந்திய மக்கள் மத்தியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்நிறுவனத்துடன் போட்டி போட முடியாது எனத் தெரிந்து பல ரீடைல் நிறுவனங்கள், பதஞ்சலி நிறுவன பொருட்களை விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் வர்த்தகம் சந்தையில் இப்படி இருக்க, இந்நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் ஆடை தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளார்.

காதியும்.. காவியும்..

காதியும்.. காவியும்..

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் பல்வேறு காரணங்களின் எதிரொலியாக காதி துணிகள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.

இதனை கவணித்த யோகா குரூ பாபா ராம்தேவ் நுகர்வோர் சந்தையை தாண்டி தற்போது ஆடை தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே நுகர்வோர் சந்தையில் இந்நிறுவனத்தின் தாக்கத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான வர்த்தக பாதிப்பை சந்தித்தது மறக்கமுடியாது.

இந்நிலையில் தற்போது பாபா ராம்தேவ் ஆடை தயாரிப்பு என டெக்ஸ்டைல் துறையில் களமிறங்க உள்ளார்.

 

கூட்டணி தான் ஓரே வழி..

கூட்டணி தான் ஓரே வழி..

டெக்ஸ்டைல் துறையில் வர்த்தகம் செய்து வரும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பதஞ்சலி நிறுவனத்துடன் கூட்டணி வைக்க போராடி வருகின்றனர்.

முக்கிய நிறுவனங்கள்
 

முக்கிய நிறுவனங்கள்

இவ்வாரத்தின் துவக்கத்தில் ரேமெண்ட் குரூப் பதஞ்சலி நிறுவனத்திடம் சிலபல மாதிரி தயாரிப்புகளை காட்டியுள்ளது. இதனுடன் அகமதாபாத் தலைமையகமாக கொண்டு இந்தியா முழுவதும் மிகப்பெரிய வர்த்தகத்தை நடத்தி வரும் அரவிந்த் நிறுவனமும் பதஞ்சலி உடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டியுள்ளது.

ராம்தேவ்

ராம்தேவ்

இந்தியாவில் முக்கிய டெக்ஸ்டைல் நிறுவனங்கள் எங்களை சந்தித்து ஆர்வம் காட்டியுள்ளது. புதிதாக உருவாக உள்ள கூட்டணி பதஞ்சலி நிறுவனத்தின் காதி திட்டத்தின் மூலம் இந்திய டெக்ஸ்டைல் துறை அடுத்த கட்டத்திற்கு செல்லும் என பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் கூறினார்.

லங்கோடு முதல்

லங்கோடு முதல்

பதஞ்சலி நிறுவனத்தின் காதி இத்திட்டத்தில் லங்கோடு முதல் அனைத்து வகையான துணி மற்றும் ஆடைகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் பாபா ராம்தேவ்.

2016ஆம் ஆண்டில் லங்கோடு எல்லாம் யார் பயன்படுத்தாவாங்க என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் உண்மையில் பதஞ்சலி நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் சந்தையில் ஏளனமாக பார்க்கப்பட்டவை தான். ஆனால் இன்று அதன் நிலையே வேறு. பொறுத்திருந்து பார்போம்.

 

FabIndia

FabIndia

இந்தியாவிற்கே உரிய ஆடையாக இருக்கும் காதி துணிகளை FabIndia போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்வது இந்தியாவிற்கு அசிங்கம் எனவும் ராம்தேவ் கூறினார்.

FabIndia நிறுவனம் டெல்லியை தலைமையாக கொண்டு 1960ஆம் ஆண்டு ஜான் பிஸ்ஸெல் என்ற அமெரிக்கரால் உருவாக்கப்பட்டது. தற்போது இந்நிறுவனத்தை வில்லியம் நந்தா பிஸ்ஸெல் நிர்வகித்து வருகிறார்.

 

சுவதேம்..

சுவதேம்..

பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் மீண்டு சுவதேம் பிறக்கும் என ராம்தேவ் கூறினார்.

சட்டுபுட்டுன்னு 1 கோடி ரூபாய் சம்பாதிக்க
அருமையான வழி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No more competition, corporates keen to JV with Patanjali's Ramdev khadi proposal

No more competition, corporates keen to JV with Patanjali's Ramdev khadi proposal - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X