எந்நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும்.. 'ஆயுத' வியாபாரிகளுடன் 'நரேந்திர மோடி' ரகசிய பேச்சுவார்த்தை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உரி பகுதியில் நடத்தத் தக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் 11 வருடங்களுக்குப் பின் நடத்திய அதிரடி தாக்குதலில் தீவிரவாதிகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக இரு நாடுகள் மத்தியிலும் பதற்றமான நிலை நிலவி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்தத் தாக்குதலுக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தார், யாரிடம் பேசினார் என்று தெரியுமா..?

மத்திய அரசு

மத்திய அரசு

காஷ்மீர் எல்லை பகுதியில் நடத்த இந்தத் தாக்குதல் மூலம் இந்தியா - பாகிஸ்தான் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆயுத உற்பத்தியாளர்கள், தொழிற்துறைகள், விநியோக ஒப்பந்தாரர்களிடம் எந்த நேரத்திலும் ஆயுதங்கள் தேவைப்படலாம் தயாராக இருங்கள் எனக் கூறியுள்ளார்.

 

ஆயுத தேவை

ஆயுத தேவை

பாகிஸ்தான் உடன் திடீரெனப் போர் மூண்டால், போருக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் உள்ளதாக எனச் சரிபார்க்கும் பணிகளை அரசு அதிகாரிகள் மற்றும் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து கணக்கிட்டு வருவதாக எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

தொழிலதிபர்கள்

தொழிலதிபர்கள்

இதுமட்டும் அல்லாமல் ஆயுங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களின் வாயிலாகவும் குறுகிய நாட்களுக்குள் ஒப்பந்த அடிப்படையில் ஆயுதகளைப் பெற மத்திய அரசின் வாயிலாகப் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சரியான அளவு

சரியான அளவு

அரசு தீவிரவாதிகளை அழிக்கத் தேவைப்படும் ஆயுதங்களின் உண்மையான மற்றும் சரியான அளவீடுகள் கணக்கிட்டு வருகிறது. எனவே தான் குறிப்பிட்ட நாட்களுக்குள் இந்திய ராணுவத்திற்குத் தேவையான ஆயுதகள் முனறிவிப்பு மூலம் கிடைக்கும் எனத் தலைமை பாதுகாப்பு நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளதாக எக்னாமிஸ் டைம்ஸ் கூறுகிறது.

விமானப் படை

விமானப் படை

சுகோய் மற்றும் போர் விமானங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களைப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் முன்கூடியே வாங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளும் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.

செப்டம்பர் 29

செப்டம்பர் 29

மேலும் செப்டம்பர் 29 தேதி நடந்த surgical strike தாக்குதலுக்கு முன்னால் நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாட்டில் பாதுகாப்பு துறையை நிலைநாட்ட போதிய நிதியைப் பாதுகாப்பு துறைக்கு அளிக்கவும் உயர்த்தவும் தான் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

ஏன் இந்தத் திடீர் வேலைகள்..?

ஏன் இந்தத் திடீர் வேலைகள்..?

இந்திய அரசு பாகிஸ்தான் எல்லையில் மட்டும் அல்லாமல் சீனா- இந்தியா எல்லையிலும் தனது பாதுகாப்பு கட்டமைப்புகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் இந்திய அரசு தனது ஆயுத பலத்தையும், ஆயுத தேவையையும் பூர்த்திச் செய்ய அனைத்து வழிகளிலும் செயல்படுகிறது.

முழுமையான போர்

முழுமையான போர்

தற்போது நடைபெறும் பணிகள் அனைத்தும் முழுமையான போரை இந்தியா சந்தித்தால் எந்த அளவிற்கு ஆயுத தேவை இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பத்தான்கோட் தாக்குதல்

பத்தான்கோட் தாக்குதல்

இந்திய அரசு மற்றும் பாதுகாப்புத் துறை இதேபோன்ற ஆய்வை பத்தான்கோட் தாக்குதலுக்குப் பின்னும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Narendra Modi govt asks arms suppliers to be ready anytime

PM Narendra Modi govt asks arms suppliers to be ready anytime - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X