நோட் 7 எதிரொலி: சாம்சங்கிற்கு ரூ.20,000 கோடி நட்டம்.. ஆப்பிள் நிறுவனத்திற்கு கொண்டாட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சியோல்: நோட் 7 ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது குறித்த நெருக்கடி சமந்தமாக இன்று வெள்ளிக்கிழமை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற இரண்டு காலாண்டுகளில் 3 பில்லியன் டாலருக்கும் மேலாக லாபத்தை இழக்கும் நிலைக்கு சாம்சங் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

தென் கொரிய நிறுவனமான சாம்சங்கின் மூன்றாவது காலாண்டு அறிக்கை இரண்டு தனங்களுக்கு முன்பு வெளியான போது 2.3 பில்லியன் டாலர் லாபத்தை இழந்துள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

முழுவதும் ஸ்க்ராப்

முழுவதும் ஸ்க்ராப்

பெரிய அளவிலான கேலக்ஸி நோட் 7 மொபைல் போன்கள் வெடிப்பது குறித்த நெருக்கடியை அடுத்து உலகம் முழுவதிலும் இருந்து இந்தப் போனை திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்தது சாம்சங். மேலும் இதைத் தொடர்ந்து இப்போது தனது பிரீமியம் மாடல் எனக் கூறி வந்ததை முழுவதையும் ஸ்க்ராப் செய்ய இருக்கிறது சாமசங் நிறுவனம்.

விற்பனை சரிவு

விற்பனை சரிவு

நோட் 7 மாடல் போனை சாம்சங் நிறுவனம் முழுவதுமாக நிறுத்த இருப்பதால் அக்டோபர் முதல் மார்ச் மாத இரண்டு காலாண்டுகளுடன் மொத்தமாக மூன்று காலாண்டு மட்டும் இல்லாமல் இந்த விழாக் காலத்திலும் தனது விற்பனையைப் பெறும் அளவில் இழந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டு
 

நடப்பு நிதி ஆண்டு

நடப்பு நிதி ஆண்டின் நான்காவது காலாண்டு லாபத்தில் 2.2 பில்லியன் டாலர்கள் இழக்க நேரிடும் என்றும் 2017 முதல் காலாண்டில் 1 டிரில்லியன் வரை வருவாய் ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கின்றனர்.

பிற மாடல்கள் மீது கவனம்

பிற மாடல்கள் மீது கவனம்

இந்த இடைப்பட்ட காலத்தில் தங்களது நிறுவனத்தின் பிற போன் மாடல்களான கேலக்ஸி எஸ்7, கேலக்ஸி எஸ்7 எட்ஜ் போன்ற தயாரிப்புகளின் விற்பனையை அதிகர்க்கும் முயற்சியில் இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது

முழுவதுமாக நிறுத்த காரணம்

முழுவதுமாக நிறுத்த காரணம்

முதலில் 2.5 மில்லியன் கேலக்ஸி நோட் 7 சாதனங்களை திரும்பப் பெற்று மாற்றுச் சாதனங்கள் அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் புதிய சாதனங்களும் வெடித்ததைத் தொடர்ந்து தயாரிப்பு மற்றும் விற்பனையை முழுவதுமாக நிறுத்த சாம்சங் முடிவு செய்துள்ளது.

போன் வெடித்ததற்குக் காரணமாக மொபைல் போன் பேட்டரிகளே என்றும் அதற்குக் காரணம் எந்த நிறுவனம் என்றும் குறிப்பிடவில்லை.

 

வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள்

வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள்

வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இதுபற்றி கூறுகையில் ஐபோனிற்கு போட்டியாக சாம்சங் மிக வேகமாக ஸ்மார்ட்போன் அறிமுக செய்ய முயற்சி செய்தது மற்றும் சாதனத்தில் உள்ள டெக்னாலஜி கோளாறே இதற்கான காரணம் எனக் கூறுகின்றனர்.

பல மாற்றங்கள்

பல மாற்றங்கள்

சாம்சங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்களது தயாரிப்புகளில் இன்னும் பல மாற்றங்களுடன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

20 பில்லியன் வரை இழப்பு

20 பில்லியன் வரை இழப்பு

நோட் 7 படுதோல்வி அடைந்ததை அடுத்து சாம்சங் நிறுவனத்திற்கு 10 பில்லியன் முதல் 20 பில்லியன் வரை லாபத்தில் இழப்பு நேரிடலாம் என்று நிறுவன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்த பெறும் தோல்வியால் மொபைல் போன் துறையில் சாம்சங் நிறுவனம் பெறும் இழப்பைச் சந்தித்துள்ளது மட்டும் இல்லாமல் மீண்டும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகபும் கடினம் என்று எச்எம்சி இன்வெஸ்ட்மெண்ட் செக்யூரிட்டிஸ் நிறுவன ஆய்வாளர் ஜார்ஜ் ரோச் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Samsung sees further 3 bn dollar profit hit from Note 7 crisis

Samsung sees further 3 bn dollar profit hit from Note 7 crisis
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X