இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு 'இவர்' முக்கியக் காரணம்..!

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு 1991ஆம் ஆண்டு தனியார் மற்றும் பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தாராளமயமாக்கல் என்னும் முக்கிய சீர்திருத்தங்களை செய்தது 25 ஆண்டுகள் முடிந்தது.

By Srinivasan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தனியார்மயம், இயந்திரமயம், தாராளமயம், தொழில்மயம், நவீனமயம் என எங்கெங்கு பார்த்தாலும் தற்போது ஒரே "மயமும் " ஒருபக்கம் மக்களுக்கு "பயமும்" கூட இருக்கிறது.

 

இந்தியா தாராளமயக் கொள்கையை அமல்படுத்தி 25 வருடங்கள் முடிந்த இத்தருணத்தில் இதுவரை நாம் பயணித்து வந்த இந்தப் பாதையை ஒருமுறை பார்க்க போகிறோம்.

இந்திய நுகர்வோர் சந்தையில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணரமுடிகிறது. இதில் இந்திய வர்த்தக ஜாம்பவான்கள் சிலரது பங்கு மிக முக்கியமானது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய இதை கிளிக்ங்கோ..!

யோகா பாபா ராம்தேவ் - இந்திய மண்ணின் பிராண்டு நட்சத்திரம்

யோகா பாபா ராம்தேவ் - இந்திய மண்ணின் பிராண்டு நட்சத்திரம்

சிறிய நகரான ஹரியானாவில் இருந்து வந்த ராம் கிருஷ்ண யாதவிற்குப் புகழ்வாய்ந்த யோகாவை உயிர்ப்பிக்கும் வாய்ப்புக் கிடைத்தது மட்டுமல்லாது தன்னை ஒரு கலாச்சாரச் சான்றாகவும் மாற்றிக் கொள்ளும் நிலைக்கு உயர்ந்தார்.

யோகாவைப் பற்றிய அவருடைய தொலைநோக்கு அவர் ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரே-வின் ஊழல் ஒழிப்பு இயக்கத்துடன் சேர்ந்த பொழுது அவருடைய சீடர்கள் தங்கள் உடலை மட்டுமல்லாது நாட்டின் அரசியலையும் குணமடையச் செய்ய ஊக்குவித்தது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தோன்றியது. அவருடைய ஆதரவாளர்கள் இந்த நிறுவன பிராண்டின் பொருட்களுக்கு ரசிகர்களாகினர்.

 

பதஞ்சலி

பதஞ்சலி

ராம்தேவும் பதஞ்சலியின் இணை நிறுவனர் ஆச்சார்ய பாலகிருஷ்ணாவும் இலாபம் தங்களது நோக்கம் இல்லையென்றும் மக்களுக்குச் சேவை செய்வதே தங்கள் நோக்கம் என்றும் கூறி வந்தனர்.

2011-12 ஆம் ஆண்டில் 450 கோடி ரூபாயாக இருந்த பதஞ்சலி நிறுவன வர்த்தக மதிப்பு 2014-15 ஆம் ஆண்டில் 2000 கோடியாகவும் 2016-மார்ச் நிலவரப்படி 5000 கோடியாகவும் உயர்ந்தது. அடுத்த இலக்கு 2017 மார்ச்சில் 10000 கோடியாகவும் 2020 ஆம் ஆண்டில் 20000 கோடியாகவும் இருக்குமா?

 

மல்டிப்ளெஸ் புகழ் அஜய் பிஜ்லி
 

மல்டிப்ளெஸ் புகழ் அஜய் பிஜ்லி

பிவிஆர் நிறுவனம் முதன் முதலில் நான்கு திரைகளைக் கொண்ட ஒரு மல்டிப்ளெஸ் தியேட்டரை டெல்லியில் உள்ள சாகேத்தில் தொடங்கியபோது அஜய் பிஜிலி மற்றும் அவருடைய மனைவி செலீனா ஆகியோர் பரபரப்புடன் மக்கள் கூட்டம் வருகிறதா எனப் பார்க்கச் சென்றனர்.

இன்று ஆண்டிற்கு 8.4 கோடிக்கும் அதிகமான மக்கள் பிவிஆர் நிறுவனத்தின் 551 திரையரங்குகளில் இந்தியா முழுவதும் படங்களைக் கண்டுகளிக்கின்றனர்.

 

ப்ரியா சினிமா

ப்ரியா சினிமா

பிஜ்லி ஒரே ஒரு திரை உடைய ஒரு ப்ரியா சினிமா அரங்கை டெல்லியில் 1978 ஆம் ஆண்டு முதல் வைத்து நடத்தி வந்தனர். தாராள மயத்திற்குப் பிறகு மக்களின் செலவு செய்யும் பழக்கம் அதிகரித்துச் சினிமாவில் அதிக வசதிகளை எதிர்பார்க்காத தொடங்கினர்.

இதைச் செய்தாலும் ஒன்றை மட்டுமே செய்வது அதையும் நன்றாகச் செய்வது என்ற பிஜிலியின் குறிக்கோள் நன்றாகவே வேலைசெய்தது.

 

பிபிஓ மன்னன் ப்ரமோத் பசின்

பிபிஓ மன்னன் ப்ரமோத் பசின்

கென்பாக்ட் நிறுவனத் தலைவர் ப்ரமோத் பசின் அமெரிக்க நிறுவனங்களைத் தங்கள் வேலைகளை நம்பிக்கையான முறையில் செய்து தர தான் எவ்வாறு ஒத்துக்கொள்ள வைக்கப் போராடினார் என்பதை நினைவுகூருகிறார்.

இந்த நிறுவனம் 2005 ஆம் ஆண்டில் 19,000 பணியாளர்கள் என்ற நிலையிலிருந்து வளர்ந்து தற்போது 70,000 பணியாளர்கள் என்ற நிலையில் உள்ளது.

 

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய இதை கிளிக்ங்கோ..!

பெண்கள்

பெண்கள்

பசின் தொழிற்துறையின் வளர்ச்சியும் நகரம் அதன் மக்கள் குறிப்பாகப் பெண்கள் மீதான தாக்கத்திற்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார். அது அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் சமூக அந்தஸ்தையும் பெற்றுத் தருகிறது என்று அவர் கூறுகிறார்.

"இது மேலும் வளர்ந்து மனிதர்கள் அஞ்சும் செயல்களைச் செயலிகளும் ரோபோக்களைச் செய்யும் நிலை உருவாகும்" என்கிறார் அவர். மேலும் அவர் ஏதாவது சிந்திப்பார் என எதிர்பார்க்கலாம்.

 

சில்லறை வர்த்தக நிபுணர் கிஷோர் பியானி

சில்லறை வர்த்தக நிபுணர் கிஷோர் பியானி

நாட்டின் மிகப்பெரும் சில்லறை வர்த்தக நிறுவனமான பிக் பஜார் ஒரு திருமண மண்டபத்தில் தொடங்கியது என்றால் நம்ப முடிகிறதா?

1996 ஆம் ஆண்டுப் பியூச்சர் க்ரூப் நிறுவனத் தலைவர் கிஷோர் பியானி தன்னுடைய பிராண்டான பாண்டலூன் பெயரில் துணிகளை விற்க ஒரு சிறிய கடையைத் திறக்க விரும்பினார்.

 

திருமண மண்டபத்தில் துவக்கம்

திருமண மண்டபத்தில் துவக்கம்

கல்கத்தாவின் காரியாஹாத் பகுதியில் உள்ள ஒரு 10,000 சதுர ஆதி கொண்ட ஒரு திருமண மண்டபத்தை அவர் காண நேரிட்டது. லீவிஸ் மற்றும் பென்னெட்டான் போன்ற பிராண்டுகள் பிராண்டிற்காக எங்கும் சந்தையில் முத்திரை பாதிக்காத துவங்கியபோது பாண்டலூனும் பிறந்தது.

இந்தப் பியூச்சர் க்ரூப் நிறுவனம் இன்று 1300-க்கும் அதிகமான கடைகளுடனும் 1.8 கோடி சதுர அடி இடவசதியும் கொண்டு 245 நகரங்களில் இயங்கிவருகிறது.

 

கிஷோர் பியானி

கிஷோர் பியானி

"நாங்கள் உருவாக்கிய இந்த நிறுவனம் இந்தியாவின் பல்வேறுபட்ட கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மற்றும் பல்வேறு விதமான அம்சங்களை அறிந்து இந்தியாவை அதற்கே உரிய முறையில் புரிந்துகொள்ளும் திறன் படைத்தது" என்று 55 வயதான இந்தியாவின் தாராளமயத்தில் தனக்கெனத் தனி இடம் பிடித்த பியானி கூறுகிறார்.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய லலித் மோடி

ஆட்டத்தின் போக்கை மாற்றிய லலித் மோடி

லலித் மோடி மற்ற முன்னாள் பிசிசிஐ நிவாகிகளைப் போல அல்லாமல் வித்தியாசமானவர்.

அரசியல்வாதியோ அல்லது கிரிக்கெட் வீரரோ அல்லாத இவர் ஒரு பல மர்மங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலதிபர். இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகளை உருவாக்கியதும் அதில் கிரிக்கெட்டையும் பாலிவுட்டையும் கலந்து ஒரு புதிய சுவாரசியமான கலவையைக் கொண்டுவந்ததும் இவரே. விளைவு - அனைவரையும் தலைசுற்ற வைத்தது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய இதை கிளிக்ங்கோ..!

வளர்ச்சியும்.. வீழ்ச்சியும்..

வளர்ச்சியும்.. வீழ்ச்சியும்..

கிரிக்கெட்டின் போக்கையே மாற்றிய அவர் பிசிசிஐ, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்தியாவில் எந்த ஒரு விளையாட்டுப் போட்டியும் நடத்தப்படும் விதம் ஆகியவற்றின் தலையெழுத்தையே மாற்றியவர் எனலாம். அவரின் வளர்ச்சி அசுரத்தனமானது - வீழ்ச்சியும் கூட.

குறைந்த விலை விமானப்பயணப் புகழ் கேப்டன் கோபிநாத்

குறைந்த விலை விமானப்பயணப் புகழ் கேப்டன் கோபிநாத்

கோரூர் ராமசாமி கோபிநாத் அல்லது கேப்டன் கோபிநாத் தற்போதைய தலைப்புச்செய்திகளில் வரும் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் விரைவான வளர்ச்சி குறித்த செய்திகளைப் படித்துப் பெருமை கொள்பவர்.

அவர் உருவாக்கிய இந்தியாவின் முதல் குறைந்த விலை விமானச் சேவை நிறுவனமான ஏர் டெக்கான் ஒரு இலாபமில்லாத தொழிலாக இருந்திருக்கலாம். ஆனால் 100 கோடி பேரை விமானப் பயணிகளாக மாற்ற அவர் கண்ட கனவு இன்று நினைவாகியுள்ளது.

 

 டெக்கான் ஏவியேஷன்

டெக்கான் ஏவியேஷன்

அவர் டெக்கான் ஏவியேஷன் என்ற ஹெலிகாப்டர் நிறுவனத்தைத் தொடங்கி ஆறு வருடம் கழித்து ஏர் டெக்கான் நிறுவனத்தை 2003-இல் துவக்கினார்.

"சீர்திருத்த நடவடிக்கைகள் காலூன்ற சிறிது காலம் பிடிக்கும். புதிய நடுத்தர வர்க்கத்தினர் உருவாகிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்புகளும் அவ்வாறே இருந்தன. ஒரு கட்டத்தில் இந்த நாடு 100 கோடி பசியுடன் உள்ள மக்கள் அல்ல ஆனால் பசியுடன் உள்ள நுகர்வோர் என்பதை நான் உணர்ந்தேன்" என அவர் கூறுகிறார்.

 

ஏக்தா கபூர் - டிவி பார்க்கும் முறையையே மாற்றியவர்

ஏக்தா கபூர் - டிவி பார்க்கும் முறையையே மாற்றியவர்

ஏக்தா கபூர் பல லட்சம் மக்கள் தாங்கள் டிவி பார்க்கும் விதத்தை மாற்றியவர்.

அவருடைய பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனத்தின் எதிர்காலம் 2000 ஆண்டு அவர் ஸ்டார் ப்ளஸ் டிவிக்காக நிகழ்ச்சிகளை உருவாக்கியபோது மாறத் தொடங்கியது. அப்போதெல்லாம் அதில் ஆங்கில நிகழ்ச்சிகள் மட்டுமே வந்துகொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய நிகழ்ச்சிகள்

முக்கிய நிகழ்ச்சிகள்

ப்ரைம் டைம் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேறுபட்டிருந்தது. கபூர் கியூங்கி சாஸ் பி காபி பஹு தி, கஹானி கர் கர் கி மற்றும் காசோதி ஜிந்தகி கே ஆகிய மூன்று தினசரி நிகழ்ச்சிகளைத் தொடங்கினார்.

நாடே இந்த நிகழ்ச்சிகளில் மூழ்கியது எனலாம். தற்போது எஞ்சியிருப்பதெல்லாம் அவரின் ஸ்கூல் ஒப்பி எஸ்தெடிக்ஸ் போன்றவை. மேலும் யாரும் இப்போதெல்லாம் சீரியல்களைப் பார்ப்பதில்லை.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய இதை கிளிக்ங்கோ..!

இந்திய ராணுவம்

இந்திய ராணுவம்

<strong>மத்திய அரசு இந்திய ராணுவத்திற்கு எவ்வளவு செலவு செய்கின்றது என்று தெரியுமா..?</strong>மத்திய அரசு இந்திய ராணுவத்திற்கு எவ்வளவு செலவு செய்கின்றது என்று தெரியுமா..?

அடுத்த 3 வார..." data-gal-src="http:///img/600x100/2018/01/new2000-1516604456.jpg">
லாபம் நிச்சயம்..!

லாபம் நிச்சயம்..!

<strong>அடுத்த 3 வாரத்தில் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம்..!</strong>அடுத்த 3 வாரத்தில் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம்..!

..." data-gal-src="http:///img/600x100/2018/01/packing18-1516533119.png">
உஷார இருங்க..!

உஷார இருங்க..!

<strong>எப்படியெல்லாம் ஏமாத்துராங்க.. மக்களே கொஞ்சம் உஷார இருங்க..!</strong>எப்படியெல்லாம் ஏமாத்துராங்க.. மக்களே கொஞ்சம் உஷார இருங்க..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

25 years of reforms: The honchos who changed the consumer of liberalised India

25 years of reforms: The honchos who changed the consumer of liberalised India - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X