ரூ.6000 கோடி கருப்புப் பணம்.. சூரத் வைர வியாபாரியின் நேர்மையை பாருங்க..!

இந்தியாவிலேயே அதிக கருப்பு பணத்தை அரசுக்கு அளித்த முதல் தொழிலதிபர் அவர்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் புதைந்து கிடக்கும் கருப்புப் பணத்திற்கு எதிராகப் பிரதமர் தூக்கியுள்ள போர் கொடியின் முதல் அறிவிப்பாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார்.

இதனால் வர்த்தக உலகமே ஆடிப்போனது. இந்நிலையில் சூரத் கட்டுமானம் மற்றும் வைர வியாபாரி ஒரு வருமான வரித்துறைக்குத் தானாக முன் வந்து சுமார் 6,000 கோடி ரூபாய்ச் செலுத்தியுள்ளார்.

அட பாருடா..!

கருப்புப் பணம்

கருப்புப் பணம்

பிரதமரின் அறிவிப்பை அடுத்து, இந்தியாவில் கருப்புப் பணமாகப் புதைந்து கிடக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தற்போது பெரிய அளவில் வெளிவரத் துவங்கியுள்ளது.

இதுகுறித்த அறிவிப்புகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டும் இருக்கும் நிலையில் குஜராத் மாநில தொழில் அதிபர் வருமான வரித்துறையினருக்கு சுமார் 6000 கோடி ரூபாய் ஒப்படைத்து அதிர்ச்சி அடையச் செய்துள்ளார்.

 

வைர வியாபாரி

வைர வியாபாரி

நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் முக்கிய வர்த்தகப் பகுதியான சூரத் நகரைச் சேர்ந்த ஒரு முன்னணி கட்டுமான நிறுவனம் மற்றும் வைர வியாபாரி தான் கணக்கில் காட்டாத 6,000 கோடி ரூபாய் தொகையை வருமான வரித்துறைக்கு ஒப்படைத்துள்ளார்.

இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில் இதுகுறித்து அதிகளவிலான செய்திகளும் விபரங்களும் கிடைக்கவில்லை.

 

வரியும்.. வருமானமும்..

வரியும்.. வருமானமும்..

தற்போது அவர் சமர்ப்பித்துள்ள 6000 கோடி ரூபாயில் 30 சதவீதம் வரியாக அதாவது 1,800 கோடி ரூபாய், அதன் பின் வரிப் பணத்தின் மீது 200 சதவீத வரி விதிப்பு என மொத்தம் 5,400 கோடி ரூபாய் தொகை வரியாகச் செலுத்த வேண்டும்.

யார் இவர்...?

யார் இவர்...?

வருமான வரித்துறையினருக்கு இதுவரை தான் மறைமுகமாக அரசுக்குத் தெரியாமல் ஊழல் செய்து வந்த 6000 கோடி ரூபாய் தொகையைச் சமர்ப்பித்தது லால்ஜி பாய் பட்டேல் எனப் பீயிங் இந்தியன் இணையதளம் தெரிவித்துள்ளது.

மோடி போட்ட கோட்டு..

மோடி போட்ட கோட்டு..

லால்ஜி பாய் பட்டேல் இந்தப் பெயரை நீங்கள் எங்கோ கேட்டது போல் இருந்தால், அது உண்மை தான். பிரதமர் மோடியின் அதிக விலைமதிப்புடைய ஆடையை வங்கியது இவர் தான்.

போர் கொடி..

போர் கொடி..

தற்போது மோடி உயர்த்தியுள்ள கருப்புப் பணம் ஒழிப்பு என்னும் போர் கொடியில் கிடைத்த மிகப்பெரிய தொகை இது எனப் போஸ்ட் கார்டு தளம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய 500 ரூபாய் நோட்டுகளை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!புதிய 500 ரூபாய் நோட்டுகளை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Surat businessman has surrendered Rs. 6000 crore in cash

Surat businessman has surrendered Rs. 6000 crore in cash - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X