ஐடி நிறுவனங்களில் 50% வேலைவாய்ப்புகள் மாயமாகும் நிலை.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா அடிப்பது போதாது என்று இதுவேற புதிய பிரச்சனையா.! இந்திய ஐடி நிறுவனங்களில் புதிய பிரச்சனையால் 50 சதவீத வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: 160 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐடி நிறுவனங்கள் 2017, 2018ஆம் ஆண்டுக்கான ஐடி திட்டங்களைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் டிஜிட்டல் மற்றும் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வருவது ஒரு புறமும், மறுபுறம் சந்தையில் போட்டி அதிகரித்துள்ளதால் சேவைக்கான விலைகள் பாதியாகக் குறைந்து ஐடி நிறுவனங்களை அதிகளவில் பாதிக்க உள்ளது.

இதனால் 2017-18ஆம் ஆண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள் 3இல் ஒரு பங்கு பிராஜெக்ட்-ஐ இழக்க உள்ளது.

முதலீடும்.. செலவின குறைப்பும்..

முதலீடும்.. செலவின குறைப்பும்..


சிட்டி குருப் முதல் பிஎன்பி பரிபாஸ் வரையிலான நிறுவனங்களுக்கு ஐடி சேவை வழங்கும் இன்போசிஸ் மூலம் ஐபிஎம் வரையிலான நிறுவனங்கள் புதிய திட்டங்களுக்கும், தற்போது இருக்கும் திட்டங்களை நிலைத்து வைத்திருக்க அதிகளவிலான முயற்சிகளைச் செய்து வருகிறது.

ஆனால் வாடிக்கையாளர் நிறுவனங்களோ புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யத் தயங்கி வருவது மட்டும் அல்லாமல் தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்களில் அதிகளவிலான கட்டண குறைப்பை எதிர்பார்கிறது.

இதுவே இன்றைய நிலை.

 

போட்டி

போட்டி

இந்திய சந்தையில் ஐடி சேவைக்கான போட்டி அதிகரித்துள்ள காரணத்தால் நிறுவனங்கள் மத்தியில் கட்டண குறைப்புகள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இதனால் ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் அதிகளவில் குறையும். மேலும் நிறுவனத்தின் வருமான குறையும் என ஐடி கன்சல்டன்சி ஐஎஸ்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தை
 

சர்வதேச சந்தை

இவை அனைத்திற்கும் மேலாக அமெரிக்க, ஐரோப்பிய சந்தையில் புதிய விசா கட்டுப்பாடுகள், மற்றும் அமெரிக்க வங்கி சேவை நிறுவனங்களின் தற்காலிக செலவின நிறுத்தம் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களின் வர்த்தக நிலையை அதிகளவில் பாதிக்கப்பட உள்ளது.

புதிய நிறுவனங்களும், முன்னணி நிறுவனங்களும்

புதிய நிறுவனங்களும், முன்னணி நிறுவனங்களும்

இந்திய சந்தையில் புதிதாக உருவாகியுள்ள பல நிறுவனங்கள் இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு இணையாகச் சேவையை அளிக்கிறது. இதனால் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பிராஜெட் பெற மிகப்பெரிய போட்டி உருவாகியுள்ளது.

இதன் காரணமாகத் தான் கட்டணத்திலும் மிகப்பெரிய அளவிலான வேறுபாடு வந்துள்ளது.

 

5,500 டில்கள்

5,500 டில்கள்

அடுத்த இரண்டு வருடத்தில் உலக நாடுகளில் இருக்கும் பல தரப்பட்ட நிறுவனங்களுக்குச் சேவை அளித்து வரும் இந்திய ஐடி நிறுவனங்களின் 5,500 டீல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

இந்தப் புதுப்பித்தல் தான் அடுத்த 5 வருட வளர்ச்சிக்கான அடித்தளம். இந்த டீல்களில் சந்தையில் புதிதாக உருவாகியுள்ள நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினால் ஐடி துறை மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்க உள்ளது என்பது உறுதி.

 

50 சதவீத வேலைவாய்ப்புகள்

50 சதவீத வேலைவாய்ப்புகள்

இந்தப் புதுப்பித்தல் காரணத்தால் 2017-18ஆம் ஆண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள் 3இல் ஒரு பங்கு பிராஜெக்ட்-ஐ இழக்க உள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களின் 50 சதவீத வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட உள்ளது.

வாடிக்கையாளர் சந்தை

வாடிக்கையாளர் சந்தை

2017, 2018ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட வேண்டிய 5,500 டீல்கள் 48 சதவீதம் ஐரோப்பிய சந்தையைச் சார்ந்தது. எஞ்சியுள்ளதில் 41 சதவீதம் அமெரிக்கா மற்றும் 11 சதவீதம் ஆசிய பசிபிக் சந்தையைச் சார்ந்தது குறிப்பிடத்தக்கது.

மோசமான சூழ்நிலை

மோசமான சூழ்நிலை

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேற்றம், அமெரிக்காவில் டிரம்ப் வெற்றியின் மூலம் இந்திய ஐடி நிறுவனங்களின் வர்த்தகம் அதிகளவிலா பாதிக்கப்பட உள்ளது என்பது பல விஷயங்களில் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

அதில் சில காக்னிசென்ட் நிறுவனம் 2016ஆம் நிதியாண்டின் வளர்ச்சி விகிதத்தை 3 முறையும், இன்போசிஸ் 2 முறையும் குறைத்துள்ளது. அதேபோல் இந்திய ஐடித்துறையின் முடிசூடா மண்ணாக இருக்கும் டிசிஎஸ் கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான 2வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

 

நாஸ்காம்

நாஸ்காம்

இந்திய ஐடி நிறுவனங்களின் தலைமை கட்டுப்பாட்டு அமைப்பான நாஸ்காம் ஐடி சந்தையின் வளர்ச்சியை 10-12 சதவீதத்தில் இருந்து 8-10 சதவீதமாகக் குறைத்துள்ளது.

முக்கிய டீல்கள்

முக்கிய டீல்கள்

இந்திய நிறுவனங்கள் கையில் இருக்கும் டாப் 10 ஐசி திட்டங்களும் அடுத்த 2 வருடத்திற்குள் புதுப்பிக்க வருகிறது. இவை அனைத்தும் 100 மில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புடையது.

இதில் பிஎன்பி பிரபாஸ், மிஷிசோ பைனான்சியல் குரூப், சிட்டி குரூப், நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க், ஹர்பின்ஜர் கேபிடல் பார்ட்னர்ஸ், சபரி ஹோல்டிங்ஸ், ஷெல், ரெயூட்டர்ஸ் குரூப், அலையன்ஸ், GDF SUEZ ஆகிய நிறுவனகளின் டீல் அடக்கம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT companies will lose 50 per cent of their work: It extend to heavy job loss

IT companies will lose 50 per cent of their work: It extends to heavy job loss - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X