‘மோடி ஆப்’ சொல்வதை விடுங்க.., தமிழ்நாட்டு மக்கள் சொல்வதை கொஞ்சம் கேளுங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் செயலி மூலம் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.

 

அந்த கருத்துக் கணிப்பில் 5 லட்சம் பேர் பங்கேற்று, தங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததாகவும், அதில் 93 சதவீதம் பேர் அரசின் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இந்த நடவடிக்கை மிக மோசமானது என்று 2 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளதாகவும் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் அறிவித்திருந்தனர்.

இந்த கருத்துக் கணிப்பை போன்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் இணையதளம் 'மோடி'யின் 500, 1000 ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு 'தவறானது'.. என ரகுராம் ராஜன் கூறியது சரியா? தவறா? என்று கேள்வியினை மக்கள் முன்பு வைத்தது.

நமது கருத்துக் கணிப்பில் வெளிவந்துள்ள முடிவு மோடி ஆப் முடிவுக்கு நேர் எதிராக உள்ளது.

தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் சர்வே

தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் சர்வே

தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் சர்வே இது குறித்து நடத்திய சர்வேயில் 2032 பேர் பங்கேற்றனர். அவர்கள் முன்பு ரகுராம் ராஜன் சொன்னது சரியா..? என்ற கேள்வி வைக்கப்பட்டு சரியே, முற்றிலும் தவறானது என்று இரண்டு தெரிவுகள் அளிக்கப்பட்டு இருந்தது.

ரகுராம் ராஜன் சொன்னது சரியே

ரகுராம் ராஜன் சொன்னது சரியே

2032 இரண்டு நபர்கள் பங்கேற்றுள்ள இந்த சர்வேயில் 66 சதவீத மக்கள் அதாவது 1346 நபர்கள் ரகுராம் ராஜன் சொன்னது சரியே என்று வாக்களித்து உள்ளனர்.

முற்றிலும் தவறு

முற்றிலும் தவறு

அதே நேரம் 34 சதவீத மக்கள் அதாவது 686 நபர்கள் ரகுராம் ராஜனின் கருத்து முற்றிலும் தவறு என்று வாக்களித்து உள்ளனர்.

எதிர் கட்சிகள்
 

எதிர் கட்சிகள்

மேலும் இந்த கருத்துக் கணிப்பின் நம்பகத் தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. இது சந்தேகத்துக்கிட்டமானது என்றும், மோடியின் ஆதரவாளர்கள் மட்டுமே பங்கேற்ற சர்வே என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக மக்கள்

தமிழக மக்கள்

தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் சர்வே முடிவை வைத்து பார்க்கும் போது தமிழக மக்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடைக்கு எதிராராக உள்ளனர்.

மோடி, ஓபாமா போன்ற பிரதமர் மற்றும் ஜனாதிபதிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா உங்களுக்கு..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Leave Modi app result do you know Tamilnadu people comments on it

Leave Modi app result do you know Tamilnadu people comments on it
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X