நீங்கள் எதற்காக ஆயுள் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்..?

உங்களை நம்பி குடும்பம் உள்ளது என்றால் பொறுப்பு இரட்டிப்பாக இருக்க வேண்டும். ஆயுள் காப்பீடு எடுப்பது சாதாரண நிதி கொள்கை முடிவு மட்டும் அல்ல இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான ஒன்றும் ஆகும்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்க்கையே கேள்விக் குறி? மரணம் நிச்சயம் என்று கவுதம புத்தர் கூறியுள்ளார். எனவே ஆயுள் காப்பீடு எடுப்பது ஒரு கடமையாகும்.

உங்களை நம்பி குடும்பம் உள்ளது என்றால் பொறுப்பு இரட்டிப்பாக இருக்க வேண்டும். ஆயுள் காப்பீடு எடுப்பது சாதாரண நிதி கொள்கை முடிவு மட்டும் அல்ல இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான ஒன்றும் ஆகும்.

இங்கு நாம் எப்படி ஆயுள் காப்பீடுகளை பெறலாம் என்பதைப் பார்ப்போம்.

உங்கள் குடும்பத்தை பாதுகாக்க

உங்கள் குடும்பத்தை பாதுகாக்க

கலகலப்பாக வாழ்ந்து வரும் போது திடீர் என்று நீங்கள் இறந்துவிட்டால் உங்கள் குடும்பம் மன உளைச்சல் எதிர்கொள்ள நேரிடும். அப்போது உங்கள் குடும்பம் நிதி நெருக்கடிகளில் இருந்து தவிப்பதில் இருந்து காப்பாற்ற இயலும்.

உங்கள் பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கச் சிறிது காலம் எடுக்குமானால் இடைப்பட்ட காலத்தை நிறைவு செய்ய காப்பீடு திட்டங்கள் உதவும்.

 

கடனை நிர்வகிக்க

கடனை நிர்வகிக்க

உங்கள் இறப்பிற்குப் பிறகு, நீங்கள் வாங்கிய கடனை செலுத்தும் நிலைக்கு உங்கள் குடும்பம் தள்ளப்படலாம். அப்போது நீங்கள் வாங்கிய கடன் சுமையை உங்களை நம்பி இருந்தவர்களின் மீது தள்ளாமல் ஆயுள் காப்பீடு திட்டங்களின் மூலம் செலுத்தும் படி செய்யலாம்.

குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம்

குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம்

நீங்கள் நல்ல நிலையில் இருக்கும் போதே உங்களின் குழந்தையின் கல்விக்குச் சேமிப்பது நல்லது. அதற்கு நீங்கள் இன்று முதல் திட்டம் தீட்டிச் செயல்படுவது நல்லது. நாளுக்கு ஆள் கல்வியின் விலை உயர்ந்து கொண்டே போய்க் கொண்டுள்ளது.

உங்கள் ஆயுள் காப்பீடு திட்டம் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்யும். மேலும் மிச்சம் உள்ள பணத்தை வைத்து அவர்களின் திருமண செலவுகளையும் சரி செய்ய இயலும்.

 

நெடுந்தூர இலக்குகளைச் சந்திக்க

நெடுந்தூர இலக்குகளைச் சந்திக்க

நீண்ட நாட்களுக்காக மாதம் அல்லது வருடாந்திர திட்டங்களில் முதலீடு செய்து வருவது நல்லது. சில திட்டங்கள் இரட்டைப் பயன்களை தரக்கூடியவை. உங்கள் இறப்பிற்கான காப்பீடு மட்டும் இல்லாமல் சில காலத்திற்குப் பிறகு லாபத்தையும் அளிக்கும்.

அது ஈவுத்தொகையாக உங்களுக்குக் கிடைக்கும். அந்த பணத்தை உங்கள் ஓய்வூதிய காலத்திற்கு ஏற்றார் போல முதலீடு செய்யலாம்.

 

வரிச் சலுகைகள்

வரிச் சலுகைகள்

வரியைச் சேமிக்க ஆயுள் காப்பீடு திட்டம் உதவும். இதில் நீங்கள் செலுத்தும் பாலிசியின் ப்ரீமியத்தில் 1.5 லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகை பெற இயலும். வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 சி-ன் கீழ் இது சாத்தியப்படும்.

இறப்பிற்குப் பின் உங்கள் குடும்பம் பெறும் பணத்திற்கும் பிரிவு 10-ன் கீழ் வரி விலக்கு உண்டு. நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து வரியைச் சேமிக்க இன்சூரன்ஸ் ஒரு வரப்பிரசாதமாகும்.

 

மன அமைதி

மன அமைதி

இறப்பு என்பது எல்லோருக்கும் உண்டு ஆனால் எப்போது என்று கூற இயலாது. ஏதேனும் பெரிய விபத்து அல்லது உடல் நலக்குறைவினால் உயிரை விட நேரலாம்.

ஆயுள் காப்பீடு திட்டங்களால் உங்கள் குடுப்பத்தை நிதி நெருக்கடிகளில் இருந்து மொத்தமாகக் காப்பாற்றலாம். உங்கள் குடும்பத்தை பாதுகாக்கத் தேவையான ஒன்று இது. ஆயுள் காப்பீடு ஒன்று உங்கள் பெயரில் இருந்தால் மன அமைதியுடன் வாழலாம்.

 

நன்கொடை செய்யலாம்

நன்கொடை செய்யலாம்

ஒரு வேலைக் காப்பீடு திட்டத்தின் ஆயுட்காலம் முழுவதும் எந்த அசம்பாவிதமும் ஏறப்படவில்லை என்றால் உங்களுக்கு மிஞ்சியதை நன்கொடை அளிப்பது, தொண்டு செய்வது போன்றவற்றைச் செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why should you invest in life insurance?

Why should you invest in life insurance?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X