இந்தியாவில் எந்த பண பரிவர்த்தனை செயலியும் முழு பாதுகாப்பானதாக இல்லை: குவால்காம்

இந்தியாவில் எந்த பண பரிவர்த்தனை செயலியும், மொபைல் வங்கி சேவை அளிக்கும் செயலிகளும் வன்பொருள் பாதுகாப்புடன் கூடிய சேவையை அளிக்கவில்லை என்று குவால்காம் அறிவித்துள்ளது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய அரசாங்கம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பிரபலப்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் எந்த பண பரிவர்த்தனை செயலியும், மொபைல் வங்கி சேவை அளிக்கும் செயலிகளும் வன்பொருள் பாதுகாப்புடன் கூடிய சேவையை அளிக்கவில்லை என்று குவால்காம் அறிவித்துள்ளது.

 

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

உலகம் முழுவதும் உள்ள வங்கி அல்லது வாலெட்ட் செயலிகளில் வன்பொருள் பாதுகாப்பு எல்லை என்று கேள்விப்படும் போது மிகவும் ஆச்சர்யமாகத் தான் இருக்கின்றது.

எளிதாகத் திருடலாம்

எளிதாகத் திருடலாம்

இந்தச் செயலிகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு பயன்முறையில் மட்டுமே பாதுகாப்பை அளிப்பதாகவும் அவற்றின் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொற்களை எளிதாகத் திருடலாம் என்றும் கூறப்படுகின்றது.

கைவிரல் ரேகை

கைவிரல் ரேகை

கைவிரல் ரேகையைப் பயன்படுத்து முறை இந்தியாவில் இருந்தாலும் இது எல்லா வாலெட்டுகளிலும் இல்லை என்று கூறுகிறார் குவால்காம் நிறுவனத்தின் இந்திய தயாரிப்பு நிர்வாக அதிகாரி சவுதிரி.

பிரபல  டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையிலும் இல்லை
 

பிரபல டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையிலும் இல்லை

இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையை அளித்து வரும் செயலியிலும் வன்பொருள் பாதுகாப்பு முறை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

காரணம்

காரணம்

இதை நாங்கள் கூறுவதற்கான காரணம் பாதுகாப்பு குறித்த அசல் உபகரணங்கள் தயாரிப்பாளர்களுடன் நாங்கள் இணைந்து பணியாற்று வருவதே என்றும் சவுதிரி கூறியுள்ளார்.

குவால்காம்

குவால்காம்

சந்தை நிலவரத்தின் படி உலகம் முழுவதிலும் இருந்து மைபைல் சிப்செட் தயாரிப்பில் குவால்காம் நிறுவனம் 37 சதவீத பங்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேள்வி

கேள்வி

பயனர் அனைவரும் செயலிகளில் இணைந்துள்ளனர், சாதனமும் அனுமதியை வழங்குகின்றது. எப்படி இது சாதனம் பணமில்லா பரிவர்த்தனைக்கு உகந்தது அல்ல என்ற கேள்விக்குச் செயலியை பதிவிறக்கம் செய்யும் போது அவர்கள் பாதுகாப்பு வன்பொருளைப் பயன்படுத்தி உள்ளார்களா என்று பயனர்களுக்கு தெரியாது என்று சவுத்ரி தெரிவித்துள்ளார்.

எனவே குவால்காம் நிறுவனம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலிகள் நிறுவனங்களை இதற்காக அணுகி வருவதாகவும் கூறியுள்ளார்.

 

புகுத்த இருக்கும் பாதுகாப்பு செயற்பாடுள்

புகுத்த இருக்கும் பாதுகாப்பு செயற்பாடுள்

மேலும் சிப்செட்கள் சூழல்களில் நாங்கள் பாதுகாப்பு செயற்பாடுகளைப் புகுத்தி வருவதாகவும், இந்த முறையின் மூலம் மொபைல் போன் மற்றும் இயங்குதளத்தை இது பிரித்து இயக்கும் என்றும், ஏதேனும் மால்வேர்கள் பரிவத்தனையைப் பாதிக்கிறதா என்பதைக் கண்டறியும் என்றுண் சவுதிரி கூறினார்.

எப்போதில் இருந்து புதிய அம்சம்

எப்போதில் இருந்து புதிய அம்சம்

இந்த புதிய அம்சம் கொண்ட சிப்செட் வருகின்ற 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும் இது பரிவர்த்தனை கதவுகளில் உள்ள தனிமைப்பட்ட அம்சங்களான சாதன ஐடி, போன் தயாரிப்பாளர் குறியீடு, ஆண்ட்ராய்டு பதிப்பு, இயங்குதள பாதை கருவி, இருப்பிடம் மற்றும் நேரம் போன்றவற்றை நகல் எடுக்க விடாது என்று தெரிவித்துள்ளார்.

குவால்காம் - அவாஸ்ட்

குவால்காம் - அவாஸ்ட்

இதற்காக குவால்காம் நிறுவனம் அவாஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து வைரஸ் மாற்றும் ஏதேனும் மால்வேர்களிடம் இருந்து விழிப்பூட்டல்களிடம் இருந்து பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்த்து விழிப்பூட்டல்கள் அளிக்கும் வசதியை ஏற்படுத்த உள்ளது.

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

ஆதார் அட்டை பற்றி கூறிய சவுதிரி இதனை முழுமையாக டிஜிட்டல் முறையில் பயன்படுத்த பிற நாட்டு அரசுகளைப் போன்று நிறையக் காலம் எடுக்கும் என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mobile payment apps in India are not fully secure: Qualcomm

Mobile payment apps in India are not fully secure: Qualcomm
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X