மாற்றம் ஏமாற்றங்களாக மாறியது.. 2016ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எப்படிப்பட்டது.?

வருடக் கடைசியை அடைந்தும் கூட மாற்றம் வரும் என்று எதிர்பார்த்து மாறாத ஐந்து விஷயங்கள் பல.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு ஆண்டும் துவங்கும் போது எப்படி புதிய வாக்குறுதிகளுடன் துவங்குகிறதோ அதே பொன்று 2016-ம் பல வாக்குறுதிகளுடன் துவங்கியது.

ஆனால் வருடக் கடைசியை அடைந்தும் கூட மாற்றம் வரும் என்று எதிர்பார்த்து மாறாத ஐந்து விஷயங்கள் பல. அதில் சிலவற்றை மட்டும் நாம் இங்குப் பார்ப்போம்.

அழுக்கு இந்தியா

அழுக்கு இந்தியா

தூய்மை இந்தியா என்ற பெயரில் நரேந்திர மோடியால் எடுத்த வரப்பட்ட ஸ்வச் பாரத் திட்டம் பல விளம்பரங்களுடன் துவங்கப்பட்டது. ஆனால் எல்லாம் சில காலம் என்று கூறுவது போல சில நாட்களில் தோய்ந்து போனது. சில நகரங்களில் மட்டும் ஓர் அளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தாலும் கிராமங்கள், சிறு நகராட்சிகள் போன்றவற்றில் தோல்வியே சந்தித்துள்ளது.

ஆனால் கழிவறை கட்டுவது போன்ற பல திட்டங்கள் பெறும் வரவேற்பைப் பெற்றது போல மக்கள் தாங்கள் வாழும் பூமியையும் சுத்தமாக வைத்துக்கொள்வது நன்மையைத் தரும்.

 

பாராளுமன்றத்தில் கூச்சல்

பாராளுமன்றத்தில் கூச்சல்

ஒவ்வொரு ஆண்டும் எப்படி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டுக் கூட்டத்தை முடுக்குமோ அது இந்த வருடம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வருடமும் பெரும்பாலான நாட்களில் கூட்டம் முடங்கியது. அதே நேரம் ஜிஎஸ்டி மசோதா போன்றவை சுமுகமாக முடிந்தது.

பாகிஸ்தானும் தீவிரவாதமும்
 

பாகிஸ்தானும் தீவிரவாதமும்

பாகிஸ்தானைத் தீவிரவாதத்திற்கு எதிராகச் செயல்பட பல முறை வழியுறுத்தியும் அது நடக்காமல் போனது. ஏன் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடைபெற்றும் எல்லையில் தீவிரவாதம் தலைதூக்குவதைக் கண்கூடாக பார்க்கமுடிகின்றது.

டெல்லியில் காற்று

டெல்லியில் காற்று

ஆம் ஆத்மி கட்சி என்ன தான் முயன்றாலும் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபட்டதைக் குறைக்க முடியவில்லை. ஒற்றை மற்றும் இரட்டை இலக்க கார் எண்கள் போன்ற சிந்தனையுடன் வாகனங்களைக் குறைத்தும் காற்று மாசுபடுவதைக் குறைக்க இயலவில்லை.

ஐபோன்

ஐபோன்

ஒவ்வொரு முறை ஆப்பிள் போன் வெளிவரும் போது புதிதாக ஏதேனும் மாற்றம் வரும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் பெரிதாக மாற்றங்கள் இருக்காது. அதே போன்று இந்த ஆண்டும் புதிதாக பின் இல்லாத ஹெட்போன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பெரிதாக ஏதும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Five things that did not change in 2016

Five things that did not change in 2016
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X