ரிசர்வ் வங்கி செய்த மிகப்பெரிய குளறுபடி..!

இது யாருடைய கணக்கு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் புழகத்தில் இருந்து நீக்கியது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், அதிர்வுகளையும் ஏற்படுத்தித் தற்போது தணிந்துள்ளது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி போலி 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்த கதை தெரியுமா உங்களுக்கு.? அட உண்மையாகத் தான்.

வெள்ளி நூல்

வெள்ளி நூல்

இந்திய ரூபாய் நோட்டுகளின் முக்கியப் பாதுகாப்பு அம்சமாகக் கருதப்படுவது வெள்ளி நூல் தான்.

சாமானிய மக்கள் வரை அனைவரும் இதனைக் கொண்டு தான் கள்ள நோட்டிற்கும், அரசாங்க நோட்டிற்கும் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கின்றனர். ஏனெனில் இது கண்களுக்கு எளிதாகப் புலப்படுபவை.

 

30,000 கோடி ரூபாய்

30,000 கோடி ரூபாய்

இத்தகைய சிறப்புடைய வெள்ளி நூல் இல்லாமல் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அச்சடித்து.

 ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி தவறுதலாக 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துவிட்டது. இவை அனைத்தும் 5AG, 3AP வரிசையில் இருந்தது.

 

இது அதிகாரப்பூர்வமாகச் செல்லாது எனவும், இதனை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வணிக வங்கிகளுக்கு அதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

 

 

புழக்கத்தில் 10,000 கோடி ரூபாய்

புழக்கத்தில் 10,000 கோடி ரூபாய்

ரிசர்வ் வங்கி வெள்ளி நூல் இல்லாமல் அச்சடிக்கப்பட்ட 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளில் 20,000 கோடி ரூபாய் ஆர்பிஐ-யிடமும், 10,000 கோடி ரூபாய் புழக்கத்திற்கு வந்தது.

ஆனால் ரிசர்வ் வங்கியின் விரைவான நடவடிக்கையின் மூலம் பெருமளவிலான தொகை விரைவில் பிடிக்கப்பட்டது.

 

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும், மத்திய பிரதேசம், ஹோஷன்காபாத்-இல் உள்ள Security Printing and Minting கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, பின்பு நாசிக்-இல் உள்ள ஆர்பிஐ அச்சகத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

1000 ரூபாய் நோட்டுகள் எரிப்பு

1000 ரூபாய் நோட்டுகள் எரிப்பு

தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகளை அனைத்தும் தீயிட்டு எரிக்க ஆர்பிஐ மற்றும் நிதியமைச்சகம் முடிவு செய்து முழுமையாக எரித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI printed 1000 rupee fake notes: Flashback 2016

RBI printed 1000 rupee fake notes: Flashback 2016 - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X