ஒரு வேலையும் இல்ல..! ஆனால் இந்த வேலைக்கு சலுகைகள் அதிகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2016-ம் ஆண்டு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தில் உருப்படியாக்க எந்த ஒரு முடிவும் எடுக்காத நிலையிலேயே முடிந்தது.

 

21 நாட்கள் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தில் வெறும் 19 மணிநேரம் 26 நிமிடங்கள் மட்டுமே உருப்படியான விவாதம் நடைபெற்று மக்கள் பணிகள் நடந்தன, இது சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் கூடு அவர்கள் நமக்காக வேலை செய்யவில்லை என்பதையே காட்டுகின்றது.

மந்திரிகள் பெறும் சலுகைகள் அதிகம், ஆனால் பணியோ குறைவு. எனவே நாம் மந்திரிகள் எவ்வளவு சலுகைகள் பெறுகிறார்கள் என்ற பிரேக் அப்பை இங்குப் பார்க்கலாம்.

சம்பளம்

சம்பளம்

மாத சம்பளம் 50,000 ரூபாய் சம்பளமும் காலாண்டு சலவை சேவைக்கான தொகையாக 75,000 ரூபாயும் மந்திரிகள் பெறுகின்றனர்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மாதம் 50,000 ரூபாய் சம்பளமாக பெறுகின்றனர்.

கையெழுத்துப் போட்டா 2000 ரூபாய்

கையெழுத்துப் போட்டா 2000 ரூபாய்

மந்திரிகள் பாராளுமன்றத்தில் உள்ள பதிவு புத்தகத்தில் தனது கையெழுத்தை ஒரு நாள் உள்ளிட்டால் போதும் 2000 ரூபாய் கொடுப்பனுவாக பெறலாம்.

அலுவலக செலவுகள்

அலுவலக செலவுகள்

அலுவலக பணிகளுக்கான செலவுக்காக 45,000 ரூபாய் மந்திரிகளின் அலுவலகங்களுக்காக வழங்கப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் 15,000 ரூபாய் கூட்டம் நடத்துவதற்காகவும், எழுதுபொருள் மற்றும் அஞ்சல் செலவுகளுக்காகவும் அளிக்கப்படுகின்றது.

தொகுதி பணிகளுக்கு 5 கோடி
 

தொகுதி பணிகளுக்கு 5 கோடி

பாராளுமன்ற உள்ளூர் வளர்ச்சி திட்ட உறுப்பினர்களின் கீழ் ஒவ்வொரு உறுப்பினரும் தனது மாவட்டத்தில் உள்ள வளர்ச்சி பணிகளுக்காக ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் பெறுகின்றார்கள்.

பயணப் படி

பயணப் படி

உரிப்பனர் ஒருவர் பாராளுமன்ற கூட்டத்திற்கு அல்லது ஏதேனும் கூட்டத்திற்காக அல்லது பணி நிமித்தமாக வருகிறார் என்றால் பயணப் படி வழங்கப்படும்.

விமான பயணம்

விமான பயணம்

மந்திரங்கள் ஒரு முறை செல்வதற்கான கட்டணம் அல்லது நான்கில் ஒரு பங்கை கட்டணமாகச் செலுத்தலாம். ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை பயண கட்டணமாக 34 பயணங்களுக்கு வழங்கப்படும்.

மேலும் மந்திரிகளின் வாழ்க்கைத் துணை/துணையாகச் செல்லுபவர்கள் 8 முறை இந்தக் கட்டணங்களில் பயணம் செய்யலாம். இந்த 8 பயணமும் 34-க்கு உட்பட்டது.

ரயில் பயணம்

ரயில் பயணம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயில் பயணங்கள் மேற்கொள்கிறார் என்றால் மாற்ற இயலாத முதல் வகுப்பு ஏசி டிக்கெட் அல்லது நிர்வாக வகுப்பு டிக்கெட் மற்றும் ஒரு முதல் வகுப்பு டிக்கெட் மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு டிக்கெட் பெற இயலும்.

சாலை வழிப் பயணம்

சாலை வழிப் பயணம்

சாலை வழியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பயணம் செய்ய 1ல் ரூபாய் 1 கிமீ வழங்கப்படும்.

இலவச மொபைல் அழைப்புகள்

இலவச மொபைல் அழைப்புகள்

ஒவ்வொரு உறுப்பினருக்கும் 3 போன் வழங்கப்படும். ஒன்று டெல்லியில் அவர் தங்கி இருக்கும் வீடு அல்லது அலுவலகம் மற்றும் ஒன்று அவருடைய சொந்த வீடு.

பின்னர் எம்டிஎன்எல் அல்லது பிஎஸ்என்எல் மொபைல் இணைப்பு வழங்கப்படும். வருடத்திற்கு 1,50,000 இலவச அழைப்புகள் இதன் மூலம் செய்ய இயலும். அதுமட்டும் இல்லாமல் இலவச 3ஜி இணைப்பும் உண்டு.

உணவகம்

உணவகம்

பாராளுமன்றத்தில் தான் இந்தியாவிலேயே மலிவான விலையில் உணவு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்தது. 30 ரூபாய் இருந்தால் போதும் ஒரு முழு சைவ சாப்பாடு கிடைக்கும். அதுவே 90 ரூபாய் கொடுத்தால் நல்ல அசைவ சாப்பாடு கிடைத்துவிடும்.

இவை மட்டும் இல்லாமல் இவர்களது பாதுகாப்புக்கு செலவு செய்யும் செலவுகள் தனி என்றும் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Not much work but lots of perks for Indian MPs

Not much work but lots of perks for Indian MPs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X