பாலாஜி ஸ்ரீநிவாசனுக்கு முக்கிய பதவி அளிக்க டொனால்டு டிரம்ப் முடிவு..! யார் இவர்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாடா சன்ஸ்-ஐ தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் நியமனம்

டாடா சன்ஸ்-ஐ தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் நியமனம்

சில நாட்களுக்கு முன் இந்தியாவின் மிகப்பெரிய ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ்-இன் தலைவராகத் தமிழரான என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்ட நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் மும்பை பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

#TATA #TATA Motors #TATA Sons

பாலாஜி ஸ்ரீநிவாசனுக்கு முக்கியப் பதவி அளிக்க டொனால்டு டிரம்ப் முடிவு..!

பாலாஜி ஸ்ரீநிவாசனுக்கு முக்கியப் பதவி அளிக்க டொனால்டு டிரம்ப் முடிவு..!

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் முக்கியப் பதவியில் இந்திய அமெரிக்கரான பாலாஜி ஸ்ரீநிவாசன் நியமிக்க டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் பாலாஜி ஸ்ரீநிவாசன், அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப்-ஐ சந்தித்தார். மேலும் இதுகுறித்த அறிவிப்புகள் அடுத்தச் சில நாட்களில் வெளியாகும் எனக் கருதப்படுகிறது.

பாலாஜி ஸ்ரீநிவாசன் 21 என்னும் நிறுவனத்தின் சீஇஓ மற்றும் துணை நிறுவனர் ஆவார்.

#Donald Trump

கண்களை மூடிக்கொண்டு செலவு செய்கிறது ரிசர்வ் வங்கி..!
 

கண்களை மூடிக்கொண்டு செலவு செய்கிறது ரிசர்வ் வங்கி..!

புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுந்தது. ரிசர்வ் வங்கி இதற்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை என ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.

புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் பாரதிய ரிசர்வ் வங்கி நோட்டு முந்ரான் பிரைவேட் லிமிடெட் மற்றும் செக்கூயூரிட்டி பிரின்டிங் மற்றும் மின்டிங் கார்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய அச்சகங்களில் அச்சிடப்பட்டுள்ளது.

ஜனவரி 6ஆம் தேதி வரை 8,734.16 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்துள்ளதாக ரிசர்வ் தெரிவித்துள்ளது.

#RBI #500Rupee #2000Rupee

1,00,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது அமேசான்.. இந்தியாவில் இல்லை அமெரிக்காவில்..!

1,00,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது அமேசான்.. இந்தியாவில் இல்லை அமெரிக்காவில்..!

அமெரிக்காவின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் கிளவுட் கம்பியூடிங் நிறுவனமான அமேசான் அடுத்த 18 மாதங்களில் அமெரிக்கச் சந்தையில் மட்டும் சுமார் 1,00,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் இந்நிறுவனத்தில் சுமார் 1,80,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

#Amazon #India #Ecommerce

வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா..!

வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா..!

விமானப் பயணிகளின் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா குறுஞ்செய்தி சேவையான வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விமான நிலைலகளில் பல இடங்களில் வாடிக்கையாளர் சேவை மேம்படும் என AAI நம்புகிறது.

#AAI #Whatsapp

பிராக்டோ நிறுவனத்தில் 55 மில்லியன் டாலர் முதலீடு..!

பிராக்டோ நிறுவனத்தில் 55 மில்லியன் டாலர் முதலீடு..!

ஆன்லைன் மருத்துவச் சேவை நிறுவனமான பிராக்டோ புதிதாக 55 மில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டியுள்ளது.

இந்நிறுவனத்தில் புதிதாக யூ-நெட், ஆர்எஸ்ஐ பண்ட் மற்றும் திரைவ் கேபிடல் ஆகிய முதலீட்டு நிறுவனங்கள் புதிதாக முதலீடு செய்துள்ளது.

சஷாங்க் என்.டி பற்றி உங்களுக்குத் தெரியுமா..?

#Practo

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 23% உயர்ந்தது..!

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 23% உயர்ந்தது..!

இந்தியாவில் விமானக் கட்டணங்கள் தொடர்ந்து குறைந்து வருவதால் விமானப் பயணிகள் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதன்படி 2015ஆம் ஆண்டில் 8.19 கோடியாக இருந்து விமானப் பயணிகள் எண்ணிக்கை, 2016ஆம் ஆண்டில் 9.98 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 23 சதவீதம் வரை உயர்ந்து காணப்படுகிறது.

#Air_Passenger #India

மடிக்கும் தன்மை உடையப் போன் பேடென்ட்-ஐ பெறத் திட்டம்: மைக்ரோசாப்ட்

மடிக்கும் தன்மை உடையப் போன் பேடென்ட்-ஐ பெறத் திட்டம்: மைக்ரோசாப்ட்

ஸ்மார்ட்போனை டேப்லெட்டாகப் பயன்படுத்தும் வகையிலான போனை தயாரிக்கவும், இதனை விற்பனை செய்வதற்கான காப்புரிமையைப் பெற மைக்ரோசாப்ட் பதிவு செய்துள்ளது.

#Microsoft

மொத்த விலை பணவீக்கத்தின் அளவு 3.39% ஆக உயர்வு: டிசம்பர் 2016

மொத்த விலை பணவீக்கத்தின் அளவு 3.39% ஆக உயர்வு: டிசம்பர் 2016

3 மாதங்களாகச் சரிந்து வந்த மொத்த விலை பணவீக்கம் டிசம்பர் 2016 மாதத்தில் 3.39 சதவீதமாக உயர்ந்துள்ளது. உற்பத்தி பொருட்களில் ஏற்பட்ட விலை உயர்வு பணவீக்க உயர்விற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இக்காலக்கட்டத்தில உணவுப் பொருட்களின் விலை கூடச் சற்று குறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 2016ஆம் ஆண்டில் இதன் அளவு 3.15 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

#Inflation #WPI

டைனீஸ்டெப் நிறுவனத்தில் 2 மில்லியன் டாலர் முதலீடு..!

டைனீஸ்டெப் நிறுவனத்தில் 2 மில்லியன் டாலர் முதலீடு..!

குழந்தை வளர்ப்பு மற்றும் கர்ப்பம் குறித்த பிரச்சனைகளைத் தீர்க்கும் டைனீஸ்டெப் என்னும் சமுக வலைத்தள நிறுவனத்தில் ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் 2 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

இப்புதிய முதலீட்டைக் கொண்டு டைனீஸ்டெப் நிறுவனத்தின் நிறுவனரான சுஹைல் அபிதி தனது சேவையைப் பல புதிய வழிகளில் விரிவாக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

#Flipkart #Tinystep

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

News in 30 seconds: Speaker Box - GoodReturns-Tamil - 18012017

News in 30 seconds: Speaker Box - GoodReturns-Tamil - 18012017
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X