ரூ.7,800 கோடி நிதியுதவி.. யார் இந்த 'ஆசாமிகள்'..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டுகளில் தேர்தல் நடத்தவும், புதிய ஆட்சியை அமைக்கவும், மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தயாரிக்கவும், சாமானிய மக்களின் தேவையைப் பூர்த்திச் செய்யவும் எனப் பல காரணங்களுக்கு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தேவைப்படுகின்றனர்.

 

ஆனால் இவை அனைத்திற்கும் மத்திய அரசின் நிதியுதவியைத் தாண்டியும் மாநில அரசியல் கட்சிகளுக்கு நிதி தேவைப்படுகிறது. இந்த நிதித் தேவையை எப்படிப் பூர்த்திச் செய்கிறார்கள், யார் கொடுக்கிறார்கள், எந்த வழிகளில் பணம் திரட்டப்படுகிறது என்பது தெரியுமா உங்களுக்கு.?

இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகள் தங்களது வருமானம் குறித்து வருமான வரித்துறைக்கு அளித்த அறிக்கையை வைத்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) ஒரு ஆய்வை நடத்தியுள்ளது.

இந்த ஆய்வில் அடையாளம் தெரியாத ஆசாமிகள் சிலர் இந்திய அரசியல் கட்சிகளுக்குச் சுமார் 7,832.98 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

ஆய்வு

ஆய்வு

இந்தியாவில் 6 தேசிய கட்சிகள் (INC, BJP, BSP, NCP, CPI மற்றும் CPM) மற்றும் 51 மாநில கட்சிகளுடன் AITC தேசிய கட்சிகளின் வருமான வரித்துறையின் நிதி ஆதாரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) ஆய்வு செய்யதுள்ளது.

கணக்கீடு காலம்

கணக்கீடு காலம்

2004-05 முதல் 2014-15 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் 58 கட்சிகள் வருமான வரித் துறைக்குச் சமர்பித்தை அறிக்கையைக் கொண்டு ஆய்வு செய்யப் போது இக்கட்சிகளுக்குச் சுமார் 11,367 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியைப் பெற்றுள்ளது.

நிதியுதவி செய்தது யார்..?

நிதியுதவி செய்தது யார்..?

அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்த 11,367 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியில், 16 சதவீதம் அதாவது 1,835.63 கோடி ரூபாய் தெரிந்த ஆதாரங்கள் (known sources) வாயிலாகக் கிடைத்துள்ளது. 15 சதவீதம் 1,698.73 கோடி ரூபாய் தொகை பிற ஆதாரங்கள் வாயிலாகக் கிடைத்துள்ளது.

மீதமுள்ள 69 சதவீத நிதி
 

மீதமுள்ள 69 சதவீத நிதி

வருமான வரித்துறைக்கு 58 அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த அறிக்கையின் படி மொத்த நிதி தொகையில் சுமார் 69 சதவீத நிதியான 7,832.98 ரூபாய் பெயர் தெரியாத ஆசாமிகள் மூலம் கிடைத்துள்ளதாகக் கட்சிகள் கணக்கு காட்டியுள்ளது.

முக்கியத் தேசிய கட்சிகள்

முக்கியத் தேசிய கட்சிகள்

இந்தியாவின் முக்கியத் தேசிய கட்சிகளின் மொத்த நிதித்தொகையில் பெரும் பகுதி பெயர் தெரியாத ஆசாமிகள் மூலம் கிடைத்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

இதில் இந்திய தேசிய காங்கிரஸ் 83 சதவீதம் 3,323.39 கோடி ரூபாய், பாரதிய ஜனதா கட்சி 65 சதவீதம் 2,125.91 கோடி ரூபாய் மதிப்பிலான நிதித்தொகை இந்த ஆசாமிகள் மூலம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுகக் கட்சியின் 203.02 கோடி ரூபாய் மொத்த நிதி தொகையில் 18.6 கோடி ரூபாய் பெயர் தெரியாத ஆசாமிகள் மூலம் பெற்றுள்ளது.

அதேபோல் 2004-05 முதல் 2014-15 வரையிலான 11 வருடத்தில் அதிமுகக் கட்சியின் 165.01 கோடி ரூபாய் மொத்த நிதியில் 0.95 கோடி இந்த ஆசாமிகள் மூலம் பெற்றுள்ளது.

முக்கியக் கட்சிகள்

முக்கியக் கட்சிகள்

சமாஜ்வாதி கட்சியின் 819.10 கோடி ரூபாய் மொத்த நிதியில் 766.27 கோடியும், தெலுங்கு தேசம் கட்சியின் 145.28 கோடி ரூபாய் மொத்த நிதியில் 45.47 கோடியும், ஆம் ஆத்மி கட்சியின் 110.06 கோடி ரூபாய் மொத்த நிதியில் 62.82 கோடியும், ஷிரோமணி அகாளி தால் கட்சியின் 101.81 கோடி ரூபாய் மொத்த நிதியில் 88.06 கோடி ரூபாய் மதிப்பிலான நிதிகள் 20,000 ரூபாய்க்கும் குறைவான நிதியுதவி வாயிலாகப் பெற்றப்பட்டுள்ளது.

313 சதவீத உயர்வு

313 சதவீத உயர்வு

ஆசாமிகள் மூலம் கிடைக்கிப்பெற்ற தொகை இந்த 11 ஆண்டுகளில் சுமார் 313 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 2004-05 நிதியாண்டில் வெறும் 274.13 கோடி ரூபாயாக இருந்த தொகை 2014-15 நிதியாண்டில் 1,130.92 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

நிதியுதவி (known sources)

நிதியுதவி (known sources)

தெரிந்த ஆதாரங்கள், அதாவது 20,000 ரூபாய்க்கு மேல் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி செய்த நபர்களின் விபரங்கள், வங்கி பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை வருமான வரித்துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

பிற வழிகள்

பிற வழிகள்

அசையும் மற்றும் அசையா சொத்துகளை விற்பனை செய்யப்படுவதின் மூலம் கிடைக்கும் நிதி, பழைய செய்தித்தாள்களை விற்பனை செய்வது, உறுப்பினர் பதிவின் மூலம் கிடைக்க நிதி, வங்கி வட்டி வருமானம், பிரதிநிதி கட்டணம், கட்சி வெளியீடுகளின் விற்பனை மூலம் கிடைக்கும் நிதி ஆகியவை பிற நிதி வழிகள் கீழ் வரும்.

ஆசாமிகள்

ஆசாமிகள்

20,000 ரூபாய்க்குக் குறைவான நிதியுதவி செய்யும் நபர் குறித்து எவ்விதமான தகவல்களையும் அரசியல் கட்சிகள் பெறத் தேவையில்லை, இதன் மூலம் வரும் வருமானத்தின் ஆதாரம் குறித்த தகவல்களையும் வருமான வரித்துறைக்கு அளிக்கத் தேவையில்லை.

இந்த ஆசாமிகள் மூலம் நிதி மட்டும் மொத்த நிதியுதவில் 69 சதவீதம்.

20,000 ரூபாய் நிதியுதவி

20,000 ரூபாய் நிதியுதவி

அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளுக்கு 20,000 ரூபாய்க்கும் குறைவாக நிதியுதவி செய்யும் நபர்களின் பெயர் மற்றும் அடையாளங்களை வருமான வரித்துறைக்குச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இதன் மூலம் வருமான வரித் துறையால் அரசியல் கட்சிகளில் இருக்கும் மூன்றில் 2 பங்கு தொகையைக் கையாள முடியாமல் தவிக்கிறது.

இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திப் பல அரசியல் கட்சிகள் பண மோசடிகளைச் செய்து வருகிறது.

45 கட்சிகள்

45 கட்சிகள்

மேலும் 51 மாநில கட்சிகள் ஆய்வுக்கு உட்பட்ட 11 வருடங்களில் 45 கட்சிகள் குறைந்தது ஒரு முறை வருமான அறிக்கையைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லை.

12 கட்சிகள்

12 கட்சிகள்

மேலும் 2004-05 முதல் 2014-15 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் 12 கட்சிகள் ஒரு முறை கூட வருமான வரித் துறையிடம் தங்களது வருமானம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை.

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

மக்கள் பெறும் வருமானத்தை முழுமையாகக் கணக்கில் கொண்டு வர பல முயற்சிகளைச் செய்து வரும் நிதியமைச்சகம், அரசியல் கட்சிகள் பெறும் அனைத்து நிதியையும் கணக்கில் கொண்டு வந்தாலே பல கோடி ரூபாய் வரி வருமானம் பெறும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

‘Unknown sources' make up 69% of political parties' income

‘Unknown sources’ make up 69% of political parties’ income - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X