வருமான வரி அளவீடுகளை குறைக்க வேண்டாம்.! ஜெட்லிக்கு சிதம்பரம் 'அட்வைஸ்'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருகின்ற புதன்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கோரப்படாத ஆலோசனை ஒன்றை வழங்கி உள்ளார் முன்னால் நிதி அமைச்சர் சிதம்பரம்.

 

சிதம்பரம் காங்கிரஸ் ஆட்சி காளத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேவை வரி மற்றும் கலால் வரி

சேவை வரி மற்றும் கலால் வரி

அருண் ஜெட்லிக்கு சிதம்பரம் அளித்த பரிந்துரைகளில் அரசு நேரடி வருமான வரிக்கான அளவீடுகளைக் குறைக்க வேண்டாம் என்றும் அதற்குப் பதிலாகச் சேவை வரி மற்றும் கலால் வரியை உயர்த்துவதன் மூலம் பொருளாதாரத்தைச் சீர் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர் பார்ப்பு

மக்கள் எதிர் பார்ப்பு

பெரும் மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகளான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்ததை அடுத்து வருமான வரி உச்ச வரம்பில் விலக்கு அளிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிதம்பரம் மட்டும் இல்லை
 

சிதம்பரம் மட்டும் இல்லை

இது போன்ற அறிவுரையைச் சிதம்பரம் மட்டும் கூறவில்லை, சென்ற வாரம் முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணர் பிரோனாப் சென்னும் தெரிவித்துள்ளார்.

பிரோனாப் சென் தனது கருத்தை தெரிவிக்கும் போது வருமான வரி செலுத்தியவர்கள் யாரும் செல்லா ரூபாய் நோட்டுகளால் பெரிதளவில் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. எனவே வருமான வரி உச்ச வரம்புகளில் மாற்றம் ஏதும் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

வங்கி பணப் பரிமாற்ற வரி

வங்கி பணப் பரிமாற்ற வரி

வங்கி பணப் பரிமாற்ற வரியான Banking cash transaction tax - BCTTஐ முதன் முதலாக அறிமுகப்படுத்திய சிதம்பரம் மீண்டும் பரிவர்த்தனைக்கான வரியைக் கொண்டு வர வேண்டாம் என்று கூறியுள்ளார்.

சிதம்பரத்தின் இரண்டாவது கருத்து

சிதம்பரத்தின் இரண்டாவது கருத்து

வங்கி பணப் பரிமாற்ற வரிக்குப் பதிலாக முதலில் அரசு பணம் இல்லாத பரிமாற்றம் எவை மற்றும் முக்கியப் பணப் பரிமாற்றங்கள் எவை என்று பட்டியலிட வேண்டும். மேலும் அதிகமாகப் பணமாகச் செலவு செய்பவர்கள் யார் அவர்களுக்குப் பணமில்லா பரிவர்த்தனையை எப்படிப் பிரபல படுத்துவது என்பதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்தார்.

வங்கி கணக்கில் பணம் எடுக்கும் போது வரி

வங்கி கணக்கில் பணம் எடுக்கும் போது வரி

2005-ம் ஆண்டு 50,000 ரூபாய்க்கு அதிகமாக வங்கி கணக்கில் பணம் எடுக்கும் போது 0.1 சதவீதம் வரை பரிவர்த்தனை கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்பதை முன்னால் நிதி அமைச்சரான சிதம்பரம் அறிமுகப்படுத்தினார். பின்னர் 2009 ஆண்டுச் சிதம்பரம் அவர்களால் அந்தச் சட்டம் திரும்பப்பெறப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chidambaram's Budget tips to Jaitley: Don't slash income tax rate, cut service tax instead

Chidambaram's Budget tips to Jaitley: Don't slash income tax rate, cut service tax instead
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X