யார் இந்த ஷேக் முகமது..? இந்தியாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு..?

இந்த ஆண்டுக் குடியரசு தின அணிவகுப்பில் இந்திய பிரதமரின் விருந்தினராகக் கலந்துகொண்டார்.

By Jeevan Raj
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபியின் இளவரசர், இந்த ஆண்டுக் குடியரசு தின அணிவகுப்பில் இந்திய பிரதமரின் விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இவர் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பை உருவாக்க $75 பில்லியன் மதிப்பிலான திட்டங்களுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்தப் பணக்கார குடியரசு தின விருந்தினர் பற்றி 10 சுவாரஸ்யமான விஷயங்கள்

இவர் யார்?

இவர் யார்?

இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப் படைகளின் தளபதி ஆவார். அவர் மறைந்த ஷேக் சயத் பின் சுல்தான் அல் நஹ்யான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதல் ஜனாதிபதியாக இருந்தவரின் மகன் ஆவார்.

ஷேக் முகமது, ஷிக்கா ஷல்மா பின்ட் ஹம்தான் அல் நஹ்யானுடன் திருமணம் ஆகி நான்கு மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள் உள்ளனர்.

 

கல்வி

கல்வி

அவர் தனது 18 வயது வரை அபுதாபி மற்றும் அல்ஐன் பள்ளிகளில் கல்வி கற்றார், பின்னர் அவர் மதிப்புமிக்க ராயல் மிலிட்டரி அகாடமி சண்டர்ஸ்ட்டில், சேர்ந்தார்.

அங்கு ஆயுதப் பயிற்சி, ஹெலிகாப்டரில் ஒட்டுவது, பாராசூட்டுடன் குதிப்பது போன்ற பயிற்சியைப் பெற்றார்.

 

பல்கலை வித்தகர்

பல்கலை வித்தகர்

யுஏஇ ஆயுதப் படைகளின் துணைத் தலைமைத் தளபதியாக உள்ள அவர் தற்பொழுது யுஎயி விமானப்படையின் தலைமை தளபதி (ஐக்கிய அரபு எமிரேட் சிறப்புப் பாதுகாப்புப் படை) மற்றும் பைலட்டாக இருந்து வருகிறார்.

அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராணுவத்தில் பல பொறுப்பான பதவிகள் வகித்துள்ளார்.

அவர் ஒரு எமிரேட் அளவில் அரசியல் மற்றும் பொருளாதார நிலையிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்திய அளவிலும் பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பொறுப்புகள்

பொறுப்புகள்

ஷேக் முகமது அபுதாபி கல்வி தரத்தினை அதிகரிக்க அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்பு பலராலும் அறியப்படுகிறது. அவர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், மதிப்புமிக்கக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிவாளர்களை உருவாக்குவதிலும் அந்நாட்டின் முக்கியக் கருவியாகத் திகழ்கிறார்.

ஆர்வம்

ஆர்வம்

அவர் குறிப்பாக அந்தப் பகுதியில் பிரபலமான நபாதி பாணி கவிதையில் அலாதி பிரியம் கொண்டவர்.

பிந்தைய எண்ணெய் பொருளாதாரம்

பிந்தைய எண்ணெய் பொருளாதாரம்

அவர் தனது நாட்டின் முதலீடுகள் எண்ணெய் பொருளாதாரத்தைத் தாண்டி பல புதிய மற்றும் வேறுபட்ட துறைகளில் இருக்குமாறு பார்த்து வருகிறார். மேலும் அவர் மிகப் பெரிய அரசாங்க நிதியத்தை ஒரு சொந்தமாக நிர்வகித்து வருகிறார்.

ஆர்வம்

ஆர்வம்

வேட்டையாடுவது மற்றும் பருந்துகள் வளர்ப்பதில் அவருக்கு மிகப்பெரிய அளவிலான ஆர்வம் உள்ளது. அவர் இது அவருடைய தந்தையிடம் இருந்து அவருக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் தலைவராக இல்லாத போதும்

நாட்டின் தலைவராக இல்லாத போதும்

பிரதமர் மோடி யுஎயி-யை பற்றிய அவரது பொருளாதார விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயணத்தை இந்தியா ஆதரித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் முதல் முறையாக எந்த மாநில அல்லது எந்த ஒரு அரசு தலைமையிலும் இல்லாத ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு, குடியரசு தினத்தன்று சிவப்பு கம்பள தீட்டப்பட்டது ஏன் என்பது புரிந்து கொள்ளலாம்.

 

MBZ

MBZ

MBZ, என்று அவர் பிரபலமாக அறியப்படும் இவர், கச்சா எண்ணெய் அதிகளவில் ஏற்றுமதி செய்யும்   ஐக்கிய அரபு எமிரேட் நாட்டை ஆளும் தலைவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

who is Sheikh Mohamed bin Zayed Al Nahyan..?

who is Sheikh Mohamed bin Zayed Al Nahyan..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X