முகேஷ் அம்பானிக்கு எதிராக கேள்வி எழுப்பியது மோடி அரசு...!

விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காக அனுமதி பெற்றனவா என்று கேள்வி கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு பேடிஎம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனங்களுக்குத் தங்களது விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காக அனுமதி பெற்றனவா என்று கேள்வி கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

அபராதம்

அபராதம்

ஒருவேலை இவர்கள் முறையான அனுமதி பெறாமல் தங்களது விளம்பரங்களில் மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் கூறியுள்ளது. இதனையே மேலும் இரண்டு அமைச்சகமும் உறுதி செய்துள்ளன.

பெயர் ஒழுங்கமுறை தடுப்புச் சட்டம்

பெயர் ஒழுங்கமுறை தடுப்புச் சட்டம்

நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் இது போன்று ஊடகங்களில் விளம்பரம் அளிக்கும் முன்பு முத்திரை மற்றும் பெயர் (ஒழுங்கமுறை தடுப்பு) சட்டம், 1950-ன் படி அனுமதி பெற வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது நிறுவனத்தின் வணிகச் சேவையைத் துவங்கும் போது அளித்த விளம்பரத்தில் ஒரு பக்கத்திற்குப் பிரமர் மோடியின் படத்தை அச்சிட்டு விளம்பரப்படுத்தியது அரசியல் வட்டத்தில் பெறும் சலசல்பு ஏற்பட்டு விவாதம் செய்யப்பட்டது.

பேடிஎம்

பேடிஎம்

நவம்பர் 9-ம் தேதி பிரதமர் மோடி செல்லா ரூபாய் நோட்டுகள் அறிவித்ததை அடுத்தச் சில மணி நேரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் அதனை வரவேற்று தங்களது நிறுவனத்தின் வாலெட்டுகள் விளம்பரத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம்

விமர்சனம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மோடியின் புகைப்படத்தைப் பற்றி விமர்சித்த போது ‘இந்திய பிரதமர் சேல்ஸ் மேனாக மாறிவிட்டார்' என்று விமர்சித்தார்.

500 ரூபாய் அபராதமா..?

500 ரூபாய் அபராதமா..?

டிசம்பர் 3-ம் தேதி ஜியோ நிறுவனத்திற்கு மோடி புகைப்படத்தை விளம்பரத்தில் பயன்படுத்தியதற்காக 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt Asks PayTm And Reliance Jio Why Did They Use PM Modi's Photo In Ads Without Permission

Govt Asks PayTm And Reliance Jio Why Did They Use PM Modi's Photo In Ads Without Permission
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X