அதிமுக பிரிவினை போல 'இன்போசிஸ்' நிறுவனத்திலும் புதிய பிரச்சனை..! #சிக்காVsமூர்த்தி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய வர்த்தகச் சந்தைக்கு இது போதாத காலம், டாடா-மிஸ்திரி மத்தியிலான பிரச்சனைகள் சற்று தணிந்துள்ள நிலையில், எச்-1பி விசா குறித்த புதிய கட்டுப்பாடுகள் வெடித்தது. இதன் எதிரொலி முழுமையாகத் தெரிவதற்கு முன்பே டெக் மஹிந்திரா தனது ஊழியர்களுக்கு 6 மாத சம்பள உயர்வைக் குறைத்துள்ளது.

 

இந்நிலையில் நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ்-இல் சிஇஓ விஷால் சிக்கா மற்றும் நிறுவனர்கள் அணிக்கும் புதிய பிரச்சனை வெடித்துள்ளது.

கேள்விகளும் குழப்பங்களும்..!

கேள்விகளும் குழப்பங்களும்..!

இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா நியமனமே மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கிய நிலையில், விஷால் சிக்காவிற்குக் கடந்த நிதியாண்டில் அளிக்கப்பட்ட அதிகப்படியான சம்பளம் குறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தில் இதன் நிறுவனர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடுமையான வாக்குவாதம் நிலவியது.

இந்தப் பிரச்சனை கடந்த வருடமே எழுந்த நிலையில், தற்போது மிகப்பெரியதாக வெடித்துள்ளது.

ஆதிக்கம் குறைந்தது...

ஆதிக்கம் குறைந்தது...

இன்போசிஸ் நிறுவனத்தின் ஆஸ்தான நிறுவனர்கள் இந்நிறுவனத்தில் வெறும் 12.75 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ள நிலையில், மொத்த நிர்வாகமும் இந்நிறுவனத்தின் சேர்மேன் ஆர். சேஷசாயி தலைமையில் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் அனைத்து முடிவுகளில் ஆர். சேஷசாயி தலைமையிலான குழு ஆதிக்கம் செலுத்தும். இங்குத் தான் பிரச்சனை துவங்கியது.

வாய்ப்புகள்
 

வாய்ப்புகள்

இன்போசிஸ் நிர்வாகத்தில் தலைமை பொறுப்புகளில் இந்நிறுவனத்தின் நிர்வனர்கள் இல்லாத காரணத்தால் ஆர். சேஷசாயி தலைமையிலான குழுவின் ஆதிக்கத்தின் மூலம் பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்துள்ளது.

சரி அப்படி என்னதான் பிரச்சனை..?

விஷால் சிக்காவின் சம்பளம்

விஷால் சிக்காவின் சம்பளம்

கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓவிற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் 49 கோடி ரூபாய் சம்பளத்திற்கு நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இந்தச் செய்தி இந்திய ஐடித்துறை மத்தியில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது நாம் மறந்திருக்க முடியாது.

உண்மையில் சம்பளம் உயர்த்தியது பிரச்சனை இல்லை, பணமாகக் கொடுக்கப்படும் சம்பளம் கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் செயல்திறனுக்கு ஏற்ப அளிக்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட பங்குகளின் அளவு தான் தற்போது அதிகரித்துள்ளது. இதுவே தற்போது நிறுவனர்கள் எழுப்பியுள்ள முக்கியக் கேள்வியாக உள்ளது.

திட்டம் போட்டதே நீங்கள் தான்..

திட்டம் போட்டதே நீங்கள் தான்..

ஆனால் இந்தத் திட்டத்தை உருவாக்கியதே நிறுவனர்கள் தான் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்போசிஸ் நிறுவனர்கள் நிறுவனத்தின் சீஇஓவாக இருக்கும்போது சம்பளத்தைக் குறைவாகப் பெற்று, செயல்திறனுக்கு ஏற்ப பங்குகளை வழங்கும் திட்டத்தை உருவாக்கினர்.

இது அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் லாபத்தையும், வளர்ச்சியையும் அளித்து.

ஆனால் இப்போது வெளி ஆள் ஒருவர் தங்களது நிறுவனப் பங்குகளை அதிகளவில் எடுக்கொள்ளும்போது பிரச்சனை வெடித்துள்ளது.

ராஜீவ் பன்சால்

ராஜீவ் பன்சால்

இன்போசிஸ் நிறுவனத்தில் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான ராஜீவ் பன்சால் -க்கு அளிக்கப்பட்ட சம்பளம் 17.4 கோடி ரூபாய். எப்படிச் சீஇஓவிற்கு இணையான சம்பளத்தை அளிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பபட்டுள்ளது.

ராஜீவ் வெளியேறும்போது விஷால் சிக்காவிற்குக் குறைவான சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டது.

புனிதா சின்ஹா

புனிதா சின்ஹா

மத்திய நிதித்துறையின் மாநில அமைச்சரான ஜெயந்த் சின்ஹா அவர்களின் மனைவி புனிதா சின்ஹா இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் தனிப்பட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய கேள்வியாக இன்போசிஸ் நிறுவனர்கள், நிர்வாகக் குழுவிடம் முன்வைத்துள்ளது.

ஆனால் நிர்வாகக் குழு, இவர் இப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

வீழ்ச்சி

வீழ்ச்சி

இந்திய ஐடி நிறுவனங்கள் பாரம்பரிமான அப்ளிகேஷன் டெவலப்மென்ட், மெயின்டேனென்ஸ், இன்பராஸ்டக்சர் மேனேஜ்மென்ட் மற்றும் பிபிஓ பிரிவுகளின் வளர்ச்சி குறைந்து வந்தது மட்டுமல்லாமல் லாப அளவுகளும் குறைந்தது வந்தது.

விஷால் சிக்காவின் நியமனத்தின் முதல் வருடத்தில் அனைத்துப் பிரிவுகளும் வளர்ச்சி பாதையை அடைந்து வெற்றி பெற்றார் சிக்கா. விஷால் சிக்காவின் அதிகப்படியான சம்பளம் அளிக்கப்பட்ட காரணமும் இதுதான்.

புதிய மாடலுக்கு மறுப்பு தெரிவிக்கும் நிறுவனர்கள்... இது என்ன மேட்டர்..?

மறுப்பு...

மறுப்பு...

இன்போசிஸ் நிறுவனம் தனது வர்த்தகத்தைத் துவங்கிய காலம் முதல் இன்று வரை தனது வர்த்தகம், சேவை மற்றும் தொழில்நுட்பத்தில் பெரிய அளவிலான மாற்றங்களை எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் விஷால் சிக்காவின் ஒரு வருட பணிக்குப் பின்.

இன்போசிஸ் நிறுவனத்தைப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் புதிய பாதைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டார் சிக்கா. இதற்காகப் புதிய தொழில்நுட்பத்தில் பணியாற்றும் பல நிறுவனங்களைக் கையகப்படுத்த திட்டமிட்டார். இத்திட்டமும் நிர்வாகக் குழுவால் ஒப்புதல் பெறப்பட்டு இயங்கி வரும் நிலையில், நிறுவனர்கள் கையகப்படுத்தும் திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

இப்பிரச்சனைகளின் எதிரொலியாக இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் 1 சதவீதம் வரை சரிவை சந்தித்தது.

ஆகமொத்த ஐடி துறை சுத்தி சுத்தி அடி வாங்குகிறது.

அதிமுக

அதிமுக

தமிழ்நாட்டில் அதிமுகக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைப் பிளவுகளைப் போலவே இன்போசிஸ் நிறுவனத்தில் அதன் நிர்வனர்கள் மற்றும் நிர்வாகக் குழுவிற்குப் புதிதாகப் பிரச்சனைகள் வெடித்துள்ளது.

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து மார்க் ஜுக்கர்பெர்க் வலுக்கட்டாயமாக நீக்கப்படலாம்! காரணம் இதுதான்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trouble in Infosys? Signs of rift between Sikka and some founders

Trouble in Infosys? Signs of rift between Sikka and some founders
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X