உங்கள் டிமேட் கணக்கை மூட வேண்டுமா? இதை படிங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிமேட் கணக்கு என்பது முக்கியமாகப் பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்காகத் தேவைப்படுகின்றது. இப்படிப் பட்ட டிமேட் கணக்கிற்கு வருடாந்திர மற்றும் நிர்வகிப்புக் கட்டணங்கள் உண்டு.

 

ஒரு வேளை நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில்லை என்று முடிவு செய்கின்றீர்களா... அப்படியானால் டிமேட் கணக்கை எப்படி மூடுவது என்று தெரியுமா..?

டிமேட் கணக்கில் பணம் வைத்திருந்தால் அதில் இருக்கும் பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளுங்கள். எப்படி டேமேட் கணக்கை மூடுவது என்று இங்குப் பார்ப்போம்.

தேவையான படிவம் மற்றும் விவரங்கள்

தேவையான படிவம் மற்றும் விவரங்கள்

டிமேட் கணக்கு வைத்துள்ளவர்கள் டிபி எனப்படும் முதலீட்டுப் பங்கேற்பாளர் படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் இதற்குப் பின்வரும் விவரங்கள் எல்லாம் தேவை.

1. டிபி எனப்படும் முதலீட்டுப் பங்கேற்பாளர் மற்றும் கிளையன்ட் ஐடி
2. பெயர் மற்றும் முகவரி விவரங்கள்
3. கணக்கை மூடுவதற்கான காரணம்.
4. கணக்கை மூடுவதற்கான கோரிக்கை படிவம்

 

பரிமாற்றம்

பரிமாற்றம்

டிமேட் கணக்கில் ஏதும் பணம் இருந்தால் டெலிவரி அறிவுறுத்தல் சீட்டு போன்றவற்றைப் பயன்படுத்திப் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

செயல்முறை மற்றும் கட்டணங்கள்
 

செயல்முறை மற்றும் கட்டணங்கள்

டிமேட் கணக்கை மூடுவதற்கான கோரிக்கையை அளித்த உடன் 7 முதல் 10 வேலை நாட்களில் உங்கள் கணக்கு மூடப்படும். டிமேட் கணக்கை மூடக் கட்டணம் ஏதும் இல்லை.

கவனிக்க வேண்டிய புள்ளிகள்

கவனிக்க வேண்டிய புள்ளிகள்

கணக்கை மூடும் போது நெகட்டிவ் பேலன்ஸ் இருந்தால் அதனைக் கட்டி முடித்த பிறகே முழுவதுமாகக் கணக்கை மூட முடியும்.

மேலும் பயன்படுத்தப்படாத விநியோகக் குறிப்பு கையேட்டுச் சீட்டை டிபிக்கு மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

 

உங்கள் டிமேட் கணக்கை மூட வேண்டுமா? இதை படிங்க..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Want to close your demat account? Read on

கணக்கை மூடும் போது நெகட்டிவ் பேலன்ஸ் இருந்தால் அதனைக் கட்டி முடித்த பிறகே முழுவதுமாகக் கணக்கை மூட முடியும்.மேலும் பயன்படுத்தப்படாத விநியோகக் குறிப்பு கையேட்டுச் சீட்டை டிபிக்கு மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
Story first published: Friday, February 10, 2017, 15:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X